Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

தலையால் முட்டிய ஜெய்ஸ்வாலுக்கு இந்திய அணி ஆதரவு.. இலங்கை வீரர்கள் மீதே திரும்பிய புகார்

கொழும்பு: இலங்கைக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியின் போது, இலங்கை வேகப்பந்து வீச்சாளர் அசிதா பெர்னாண்டோவுடன் மோதலில் ஈடுபட்ட இந்திய தொடக்க வீரர் யஷஸ்வி ஜெய்ஸ்வாலுக்கு ஆதரவாக இந்திய பேட்டிங் பயிற்சியாளர் சித்தான்ஷு கோடக் விளக்கம் அளித்துள்ளார். ஜெய்ஸ்வால் தலையால் முட்டியதாக கூறப்படும் நிலையில் அவருக்கு கடும் தண்டனை விதிக்கப்படலாம் என்ற நிலையில் இந்திய அணி நிர்வாகம் அவருக்கு ஆதரவான நிலைப்பாட்டை எடுத்துள்ளது.

கொழும்பு சிங்களா ஸ்போர்ட்ஸ் கிளப் மைதானத்தில் ஞாயிற்றுக்கிழமை தொடங்கிய இப்போட்டியின் முதல் நாளன்று, இலங்கை வேகப்பந்து வீச்சாளர் அசிதா பெர்னாண்டோ வீசிய இன்-ஸ்விங்கர் பந்தில் ஜெய்ஸ்வால் 52 பந்துகளில் 9 பவுண்டரிகளுடன் 45 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். அவர் அவுட் ஆகி வெளியேறிய போது, பெர்னாண்டோ கேலி செய்யும் விதமாக வழியனுப்பி வைத்தார். இதனால் கோபமடைந்த ஜெய்ஸ்வால், பெர்னாண்டோவை நோக்கிச் சென்றார். அப்போது ஜெய்ஸ்வாலின் ஹெல்மெட், பெர்னாண்டோவின் நெற்றியில் முட்டியது. இதனால் மைதானத்தில் பரபரப்பு ஏற்பட்டதை அடுத்து, இலங்கை கேப்டன் தனஞ்செயா டி சில்வா இருவரையும் சமாதானப்படுத்தினார்.

Yashasvi Jaiswal - Asitha Fernando Altercation India Batting Coach supports Jaiswal

முதல் நாள் ஆட்டநேர முடிவில் செய்தியாளர்களைச் சந்தித்த இந்திய பேட்டிங் பயிற்சியாளர் சித்தான்ஷு கோடக் இது குறித்துப் பேசுகையில், "இலங்கை வீரர்கள் ஜெய்ஸ்வாலை நோக்கி ஏதேனும் சொல்லியிருக்க வேண்டும். ஆட்டத்தின் பதற்றமான தருணத்தில் இது போன்ற விஷயங்கள் நடக்கக்கூடும். எனினும் ஜெய்ஸ்வால் அந்த வீரருக்கு மிக அருகில் சென்றிருக்கக் கூடாது. மைதானத்தில் உடல்ரீதியான தொடுதல் இருக்கக் கூடாது" என்று தெரிவித்தார்.

5 சிக்ஸ், 5 ஃபோர்.. சிஎஸ்கே பவுலர் கம்போஜ் மரண அடி.. டெஸ்ட் மேட்ச்சில் 9ஆம் வரிசையில் இறங்கி அரைசதம்

5 சிக்ஸ், 5 ஃபோர்.. சிஎஸ்கே பவுலர் கம்போஜ் மரண அடி.. டெஸ்ட் மேட்ச்சில் 9ஆம் வரிசையில் இறங்கி அரைசதம்

இந்தச் சம்பவத்தை ஐசிசி விதிமுறைப் பிரிவு 2.12 இன் படி 'தவறான உடல்ரீதியான தொடுதல்' என்ற பிரிவின் கீழ் விசாரித்தால் அவர் குறைந்த தண்டனையுடன் தப்பிக்கலாம். இந்த பிரிவு லெவல் 1 விதிமீறலின் கீழ் வரும் என்பதால், ஜெய்ஸ்வாலுக்கு கடுமையான தடை தண்டனைகள் ஏதும் கிடைக்காது என்று கூறப்படுகிறது. ஆனால், ஜெய்ஸ்வால் மட்டுமே தவறு செய்ததாக கருதினால் அவருக்கு தடை உள்ளிட்ட தண்டனைகள் கிடைக்கலாம். இந்த விவகாரத்தில் போட்டி நடுவர் ஆண்டி பைகிராஃப்ட் இறுதி முடிவை அறிவிப்பார்.

Story first published: Sunday, August 23, 2026, 20:38 [IST]
Other articles published on Aug 23, 2026
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+