Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

ஹர்திக்கை பார்த்தும் திருந்தவில்லையா? வெளிநாட்டு பெண்ணுடன் சுற்றும் ஜெய்ஸ்வால்.. வேண்டாம் பிலிப்சு!

மும்பை : இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரர் ஜெய்ஷ்வால் வெளிநாட்டு பெண்ணுடன் சுற்றி வருவது ரசிகர்களின் கவனத்தை பெற்றுள்ளது. சாதாரண குடும்பத்தில் இருந்து வந்த ஜெயஸ்வால் அண்டர் 19 உலக கோப்பை தொடரில் விளையாடி பிரபலமானார். அதன் பின் ஐபிஎல் தொடரில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக விளையாடிய ஜெய்ஸ்வால் தன்னுடைய அதிரடி ஆட்டத்தின் மூலம் ரசிகர்களின் கவனத்தை பெற்றார்.

இந்த சூழலில் ஜெய்ஸ்வாலுக்கு இந்திய கிரிக்கெட் அணியிலும் வாய்ப்பு கிடைத்தது. டெஸ்ட் கிரிக்கெட்டில் ரோகித் சர்மாவுடன் ஜோடியாக சேர்ந்த ஜெய்ஸ்வால் இங்கிலாந்துக்கு எதிரான ஐந்து டெஸ்ட் போட்டிகளில் 712 ரன்கள் குவித்தார். இதில் அவருடைய சராசரி 89 ரன்கள் ஆகும். தொடர்ந்து இரண்டு முறை இரட்டை சதம் விளாசிய ஜெய்ஸ்வால் புகழின் உச்சிக்கு சென்றார்.

yashasvi jaiswal jaiswal girl friend

டெஸ்ட் கிரிக்கெட்டில் வெறும் 16 இன்னிங்ஸ் மட்டுமே விளையாடி இருக்கும் ஜெய்ஸ்வால் 1028 ரன்கள் விளாசி இருக்கிறார். டெஸ்ட் கிரிக்கெட்டில் அவருடைய சராசரி 68. இந்த நிலையில் 22 வயதான ஜெய்ஸ்வால் தற்போது தான் வளர்ந்து வருகிறார். இன்னும் ஒரு நாள் மற்றும் டி20 கிரிக்கெட்டில் இடம் கிடைக்க ஜெய்ஸ்வால் முயற்சி செய்து வருகிறார்.

இந்த நிலையில் ஜெய்ஸ்வால் ஹாமில்டன் என்ற பிரிட்டனைச் சேர்ந்த பெண்ணுடன் சுற்றி வருவது ரசிகர்களின் கவனத்தை பெற்றிருக்கிறது. கடந்த 2024 ஐபிஎல் சீசன் போட்டியில் ஜெய்ஸ்வால் 15 போட்டியில் விளையாடி 435 ரன்கள் குவித்து இருந்தார். அப்போது கூட ஜெய்ஸ்வாலுடன் ஹாமில்டன் என்ற பெண் சென்னை விமான நிலையத்தில் வந்திருந்தார். மேலும் ஜெய்ஸ்வால் விளையாடிய போட்டிகளை எல்லாம் ஹாமில்டனும் நேரில் வந்து பார்த்து அவருக்கு உறுதுணையாக இருந்தார்.

மேலும் ஹைதராபாத்தில் நடைபெற்ற இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் கூட ஹாமில்டன் இந்தியாவின் ஜெர்சியை அணிந்து ஜெய்ஸ்வால் விளையாடும் போது ஆரவாரம் செய்து கொண்டிருந்தார். அப்போதே இந்த பெண் யார் என்று பலரும் கேள்வி எழுப்பி இருந்தனர். ஆனால் தற்போது ஜெய்ஸ்வாலும், ஹாமில்டனும் டேட்டிங் செல்வது, குடும்பத்துடன் ஒன்றாக சாப்பிடுவது என நேரத்தை கழித்து வருகின்றனர். ஹென்றி என்ற இளைஞர் உடன் ஜெய்ஸ்வால் நல்ல நண்பர்களாக இருக்கிறார்கள்.

ஜெய்ஸ்வால் ஹென்றியின் வீட்டிற்கு அடிக்கடி சென்று அவர்கள் குடும்பத்தினருடன் நல்ல நட்பில் இருந்திருக்கிறார். அப்போது தான் ஹென்றியின் சகோதரியான ஹாமில்டனுடன் ஜெய்ஸ்வாலுக்கு பழக்கம் ஏற்பட்டிருக்கிறது. ஹாமில்டன் தற்போது தான் கல்லூரியில் படித்து வருகிறார். இந்த நிலையில் ஜெய்ஸ்வாலுடன் ஏற்பட்ட நட்பால் இருவரும் ஒன்றாக சுற்றி வருகின்றனர். இதனால் ஜெய்ஸ்வால் வெளிநாட்டு பெண்ணான ஹாமில்டனை திருமணம் செய்ய வாய்ப்பு இருப்பதாகவும் தெரிகிறது.

ஆனால் வெளிநாட்டு பெண்ணை நம்பி ஏமாற வேண்டாம் என்று ரசிகர்கள் வலியுறுத்தி வருகின்றனர். இதற்கு காரணம் ஹர்திக் பாண்டியா இவ்வாறு தான் செர்பிய நாட்டைச் சேர்ந்த நட்டாஷா என்ற பெண்ணுடன் சுற்றி காதலித்து திருமணம் செய்து கொண்டார். ஆனால் நட்டாஷா ஹர்திக் பாண்டியாவை ஏமாற்றிவிட்டு தனது ஜிம் பயிற்சியாளர் உடன் உறவில் இருக்கிறார்.

இதன் காரணமாக இருவரும் விவாகரத்து செய்தனர். இது ஹர்திக் பாண்டியாவின் கிரிக்கெட் வாழ்க்கையை பாதிக்கும் நிலை ஏற்பட்டது. இந்த சூழலில் ஜெய்ஸ்வால் தற்போது தான் வளர்ந்து வருகிறார்.இன்னும் அவர் சாதிக்க வேண்டியது எவ்வளவோ இருக்கிறது. இதனால் அவர் வெளிநாட்டு பெண்ணுடன் சுற்றி கிரிக்கெட்டில் கோட்டை விட்டு விடக்கூடாது என்றும் ரசிகர்கள் அவருக்கு அட்வைஸ் கூறி வருகின்றனர்.

Story first published: Wednesday, September 11, 2024, 14:43 [IST]
Other articles published on Sep 11, 2024
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+