Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

ஜோ ரூட்டின் மகத்தான சாதனை.. ஜெய்ஸ்வால் முறியடிக்க வாய்ப்பு.. முதலிடம் பிடிப்பாரா?

மும்பை : இந்திய கிரிக்கெட் அணியில் நட்சத்திர வீரர் ஜெய்ஸ்வால் ஒரு மாபெரும் சாதனையை படைக்க வாய்ப்பு இருக்கின்றது. இந்திய அணி வரும் செப்டம்பர் 19ஆம் தேதி வங்கதேசத்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டிகள் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் விளையாடுகிறது.

வங்கதேச அணி இந்தியாவை விட பலம் குன்றி அணியாக கருதப்பட்டாலும், அவர்கள் பாகிஸ்தான் போன்ற அணியை டெஸ்ட் போட்டியில் வீழ்த்தி தங்களது திறமையை வெளிப்படுத்தி இருக்கிறார்கள். இதனால் வங்கதேசத்தை இந்திய அணி குறைத்து மதிப்பிட முடியாது.

cricket yashasvi jaiswal joe root

இந்த சூழலில் விராட் கோலி, ரோகித் சர்மா, பும்ரா, அஸ்வின் போன்ற இந்தியாவின் தலைசிறந்த வீரர்கள் டெஸ்ட் போட்டிக்கு திரும்பப் போகிறார்கள். இந்த சூழலில் இந்திய அணியில் தொடக்க வீரராக களம் இறங்கியுள்ள ஜெய்ஸ்வால் ஒரு மாபெரும் சாதனை படைக்க வாய்ப்பு இருக்கிறது. தற்போது டெஸ்ட் கிரிக்கெட்டில் சிறந்த வீரராக திகழ்ந்து வருகிறார்.

அண்மையில் இலங்கைக்கு எதிராக இரண்டு இன்னிங்ஸிலுமே சதம் அடைத்து ஜோ ரூட் பட்டையை கிளப்பி இருக்கிறார். தற்போது 2023 25 டெஸ்ட் சைக்கிளில் இங்கிலாந்து வீரர் 15 போட்டிகளின் விளையாடி 1373 ரன்கள் எடுத்து முதல் இடத்தில் இருக்கிறார். இந்த பட்டியலில் ஜெய்ஸ்வால் இரண்டாம் இடத்தில் இருக்கிறார்.

இவர் ஒன்பது டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 1028 ரன்கள் அடித்திருக்கிறார். இன்னும் சொல்லப்போனால் இந்த பட்டியலில் ஜெய்ஸ்வால் தான் முதல் இடத்தில் இருந்தார். ஆனால் ஜோ ரூட் தற்போது அபாரமாக விளையாடி வந்த நிலையில் தற்போது அவர் முதலிடத்தில் பிடித்து இருக்கிறார். இந்த சூழலில் ஜோரூட் இனி வரும் அக்டோபர் மாதம் தான் டெஸ்ட் போட்டிகளில் விளையாடப் போகிறார்.

அதற்கு இடையில் இந்திய அணி இரண்டு டெஸ்ட் போட்டிகளில் வங்கதேசத்துக்கு எதிராக விளையாடும். இதனால் ஜெய்ஸ்வால் 345 ரன்கள் கூடுதலாக அடித்தால் மீண்டும் அவர் ஜோ ரூட்டை முந்தி முதல் இடத்தை பிடித்து விடுவார். அதுமட்டுமல்லாமல் இந்திய அணி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கு செல்ல வேண்டுமென்றால் குறைந்தபட்சம் ஐந்து போட்டிகளில் வெல்ல வேண்டும்.

இதில் 5 போட்டிகள் இந்திய மண்ணில் தான் நடைபெறுகிறது. இதனால் இந்த ஐந்திலும் இந்தியா வெற்றி பெற வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறது. இதேபோன்று ஆஸ்திரேலியா மண்ணில் குறைந்தபட்சம் இரண்டு டெஸ்ட் போட்டிகளில் வெல்ல வேண்டும். இதனால் ஜெய்ஸ்வாலின் பங்கு மிகவும் முக்கியமானதாக கருதப்படுகிறது.

Story first published: Sunday, September 1, 2024, 16:46 [IST]
Other articles published on Sep 1, 2024
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+