Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

செம ட்விஸ்ட்.. சுப்மன் கில் இடத்தை பிடிக்க 2 இளம் வீரர்கள் கடும் போட்டி.. ரோஹித் கையில் முடிவு

மும்பை : இந்திய அணியில் இருந்து சுப்மன் கில் நீக்கப்படுவாரா என்று உறுதியாக கூற முடியாத நிலையில், அவருக்கு மாற்று வீரரை இப்போதே தேர்வு குழு தயார்நிலையில் வைத்திருப்பதாக தெரிய வந்துள்ளது.

இந்திய அணியின் துவக்க வீரராக சுப்மன் கில் நடப்பு ஆண்டில் மிகச் சிறப்பாக ஆடி வந்தார். இந்திய அணியிலேயே இந்த ஆண்டு அதிக ரன் குவித்த வீரர் அவர் தான். அதனாலேயே உலகக்கோப்பை தொடரில் அவர் எத்தனை சாதனைகளை உடைக்கப் போகிறார் என்ற பேச்சு கிளம்பியது.

Yashasvi Jaiswal, Ruturaj Gaikwad likely to replace Shubman Gill in ODI world cup 2023

ஆனால், துரதிர்ஷ்டவசமாக அவர் இந்திய அணியின் முதல் உலகக்கோப்பை போட்டிக்கு முன்பே அவர் டெங்கு காய்ச்சல் காரணமாக ஆட முடியாத நிலை ஏற்பட்டது. அவர் மீண்டு வர 10 நாட்களுக்கும் மேல் ஆகலாம் என கூறப்படுகிறது.

அப்படி அவர் மீண்டு வந்தாலும் போட்டியில் ஆடும் அளவுக்கு அவர் உடற்தகுதி இருக்க வேண்டும். இப்படி சில சிக்கல்கள் இருப்பதால் அவரை உலகக்கோப்பை தொடரில் இருந்தே நீக்கி விட்டு அவருக்கு மாற்று வீரரை அணியில் சேர்க்க பிசிசிஐ திட்டமிடுவதாக சில தகவல்கள் வலம் வருகின்றன.

தற்போது தற்காலிக துவக்க வீரராக அணியில் இஷான் கிஷன் ஆடி வருகிறார். அவர் அடுத்து நடக்க உள்ள ஆப்கானிஸ்தான் போட்டி மற்றும் பாகிஸ்தான் போட்டியில் சிறப்பாக ஆடி விட்டால் மாற்று வீரரை சேர்க்கும் நடவடிக்கை கைவிடப்படலாம்.

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டியில் இஷான் கிஷன் டக் அவுட் ஆனதால் அவர் மீது இப்போதைக்கு நம்பிக்கை இல்லை. எனவே, இரண்டு மாற்று துவக்க வீரர்களை இப்போதே தேர்வு செய்து இருப்பில் வைத்துள்ளது தேர்வுக் குழு.

அந்த இரண்டு துவக்க வீரர்கள் ருதுராஜ் கெயிக்வாட் மற்றும் யாஷஸ்வி ஜெய்ஸ்வால். ருதுராஜ் கெயிக்வாட் இந்திய டி20 அணியிலும், ஒருநாள் போட்டி அணியிலும் ஏற்கனவே சில போட்டிகளில் ஆடி இருக்கிறார். சமீபத்தில் நடந்த ஆஸ்திரேலிய ஒருநாள் தொடரில் கூட ஒரு போட்டியில் அவர் அரைசதம் அடித்து இருந்தார்.

மறுபுறம் யாஷஸ்வி ஜெய்ஸ்வால், ஆசிய விளையாட்டுப் போட்டியில் மற்ற பேட்ஸ்மேன்கள் பிட்ச்சை புரிந்து கொள்ள தடுமாறி விக்கெட்டை இழந்த போதும், நின்று அதிரடி ஆட்டம் ஆடி 49 பந்துகளில் சதம் அடித்து இருந்தார். ஜெய்ஸ்வால் சரியான அதிரடி ஆட்டக்காரர் என்பதால் அவருக்கும் அதிக வாய்ப்பு உள்ளது.

சுப்மன் கில்-ஐ நீக்கும் முடிவை பிசிசிஐ எடுத்தால், ருதுராஜ், ஜெய்ஸ்வால் இருவரில் யாரை அணியில் தேர்வு செய்வது என்ற முடிவு ரோஹித் சர்மாவிடமே வரும். அவர் அணியின் சமநிலைக்கு யார் தேவை என்பதை ஆலோசித்து தேர்வு செய்வார் என எதிர்பார்க்கலாம்.

Story first published: Tuesday, October 10, 2023, 18:19 [IST]
Other articles published on Oct 10, 2023
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+