Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

ரோகித் சர்மா முதல் சாய்ஸ் ஆக இருக்கலாம்! ஆனால் இந்த வீரருக்கு தான் தொடர்ந்து வாய்ப்பு தரனும்-இர்பான்

மும்பை: 2027ஆம் ஆண்டு தென்னாப்பிரிக்காவில் நடைபெறவுள்ள ஒருநாள் உலகக் கோப்பை தொடருக்கு முன்னதாக, இளம் தொடக்க வீரர் யஷஸ்வி ஜெய்ஸ்வாலுக்கு ஒருநாள் கிரிக்கெட்டில் தொடர்ந்து விளையாட போதிய வாய்ப்புகளை வழங்க வேண்டும் என்று முன்னாள் ஆல்-ரவுண்டர் இர்ஃபான் பதான் வலியுறுத்தியுள்ளார். வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் இருந்தே இதற்கான முயற்சிகளைத் தொடங்க வேண்டும் என்று அவர் தெரிவித்துள்ளார்.

ஜியோ ஹாட்ஸ்டார் நிகழ்ச்சியில் பேசிய இர்ஃபான் பதான், "வெஸ்ட் இர்ண்டீஸ் அணிக்கு எதிரான ஒருநாள் தொடரில் நான் உற்று நோக்கும் ஒரே வீரர் யஷஸ்வி ஜெய்ஸ்வால் தான். அவர் அணியின் மாற்றுத் தொடக்க ஆட்டக்காரராக இருக்கிறார். உலகக் கோப்பை தொடங்குவதற்குள் நமது மாற்றுத் தொடக்க வீரருக்கு போதிய போட்டிகளில் விளையாடிய அனுபவம் கிடைத்திருக்க வேண்டும்."

Yashaswi Jaiswal

"எனவே, வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் அவர் தொடர்ந்து விளையாடுவதை நான் பார்க்க விரும்புகிறேன். பேட்டிங் வரிசையை மாற்றுவது அல்லது வீரர்களை சுழற்சி முறையில் களம் இறக்குவது என இதற்கான வாய்ப்புகளை எவ்வாறு உருவாக்குவது என்பதை அணி நிர்வாகம் தான் முடிவு செய்ய வேண்டும்" என்று கூறினார்.

IND vs WI: ரஞ்சியில் அதிக விக்கெட் வீழ்த்திய இந்த 29 வயது வீரர் உலககோப்பை தொடரில் விளையாட மாட்டார்-ஜாபர்

IND vs WI: ரஞ்சியில் அதிக விக்கெட் வீழ்த்திய இந்த 29 வயது வீரர் உலககோப்பை தொடரில் விளையாட மாட்டார்-ஜாபர்

இளம் இடதுகை ஆட்டக்காரரான ஜெய்ஸ்வால், இதுவரை தனது குறுகிய ஒருநாள் கிரிக்கெட் வாழ்க்கையில் 6 போட்டிகளில் விளையாடி 2 சதங்கள் உட்பட 71.25 சராசரியுடன் 285 ரன்கள் எடுத்து நல்ல திறமையை வெளிப்படுத்தியுள்ளார்.

யஷஸ்வி ஜெய்ஸ்வால் மாற்று வீரராக இருந்தாலும், அவருக்கு விளையாட வாய்ப்பளிப்பது அத்தனை எளிதானது அல்ல. இந்திய அணியின் தற்போதைய தொடக்க ஆட்டக்காரரும் கேப்டனுமான ரோஹித் சர்மாவே தொடக்க வீரருக்கான முதல் தேர்வாக உள்ளார்.

IND vs WI: இந்திய அணிக்கு எதிரான டி20, ஒருநாள் தொடர்.. வெஸ்ட் இண்டீஸ் அணி அறிவிப்பு

Also Read

IND vs WI: இந்திய அணிக்கு எதிரான டி20, ஒருநாள் தொடர்.. வெஸ்ட் இண்டீஸ் அணி அறிவிப்பு

ரோஹித் சர்மாவிற்குப் பதிலாக ஜெய்ஸ்வாலை கொண்டு வர முன்னாள் தலைமைத் தேர்வாளர் அஜித் அகர்கர் விரும்பிய போதிலும், பிசிசிஐ தொடர்ந்து ரோஹித் சர்மாவிற்கே ஆதரவு அளித்து வருகிறது. 40 வயதை நெருங்கும் ரோஹித் சர்மா தனது ஃபார்மை தக்கவைத்துக் கொள்ள தொடர்ந்து விளையாட வேண்டியுள்ளது.

Story first published: Sunday, September 20, 2026, 17:58 [IST]
Other articles published on Sep 20, 2026
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+