Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

“ப்பா.. அச்சு அசலாக அப்படியேவா” ஷேன் வார்னேவை மிஞ்சிய யாஷிர் ஷா.. 32 ஆண்டு பெருமைக்கு சவால்- வீடியோ

கல்லே: பாகிஸ்தான் வீரர் யாஷிர் ஷா செய்துள்ள மேஜிக் உலக கிரிக்கெட் ரசிகர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.

இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பாகிஸ்தான் அணி 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் மோதி வருகிறது.

இரு அணிகளும் மோதும் முதல் டெஸ்ட் போட்டியில் தான் இந்த சுவாரஸ்ய சம்பவம் அரங்கேறியுள்ளது.

யாஷிர் ஷா கம்பேக்

யாஷிர் ஷா கம்பேக்

பாகிஸ்தான் அணியின் முன்னணி சுழற்பந்துவீச்சாளரான யாஷிர் ஷா, கடந்த 2021 ஆகஸ்ட் மாதத்திற்கு பிறகு வாய்ப்பு கிடைக்காமல் இருந்தார். சுமார் 10 மாதங்கள் கழித்து தற்போது இலங்கையுடனான போட்டியில் பங்கேற்றுள்ளார். ஆட்டத்தின் 3வது நாளில் யாஷிர் ஷா வீசிய பந்து " பால் ஆஃப் தி செஞ்சூரி" என்ற பெருமையை பெற்றுள்ளது.

அட்டகாச பந்துவீச்சு

அட்டகாச பந்துவீச்சு

ஆட்டத்தின் 3வது நாளில் குசல் மெண்டீஸ் பேட்டிங் செய்ய, யாஷிர் ஷா பந்துவீசினார். அப்போது அவுட்சைட் லெக் ஸ்டம்ப் திசையில் பிட்ச் ஆன பந்து, மிடில் ஸ்டெம்ப் அல்லது வைடாக சென்றிருக்க வேண்டும். ஆனால் திடீரென முழுமையாக திரும்பி, ஆஃப் சைட் ஸ்டம்ப்பில் பட்டு விக்கெட் எடுத்தது. இதனை பார்த்த வீரர்கள், இது எப்படி நடந்தது என்றே புரியாமல் திகைப்பில் நின்றனர்.

32 ஆண்டு வரலாறு

32 ஆண்டு வரலாறு

இந்நிலையில் இந்த சம்பவம் 1990ல் ஷேன் வார்னே காட்டிய மேஜிக்கை அப்படியே நினைவுக்கூர்ந்துள்ளது. ஆஷஸ் தொடரின் போது, இங்கிலாந்தின் மைக் கேட்டிங்க்கு எதிராக வார்னே வீசிய பந்து, இதே போன்று லெக் சைட்டில் பிட்ச்சாகி ஆஃப் ஸ்டம்ப்பில் பட்டது. இது அப்போது "பால் ஆஃப் தி செஞ்சூரி" பெருமையுடன் அழைக்கப்பட்டது.

சுவாரஸ்யம்

சுவாரஸ்யம்

32 ஆண்டுகள் கழித்து தற்போது வார்னேவின் மேஜிக்கை யாஷிர் ஷாவும் செய்துள்ளது ரசிகர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. இதில் சுவாரஸ்யம் என்னவென்றால், யாஷிர் ஷாவின் பவுலிங் மீது அதிக ஈர்ப்பு கொண்டவர் வார்னே. அவர் குறித்து அடிக்கடி புகழ்ந்து பேசுவார். அவர் கூறியதை போன்றே இன்று யாஷிர் உலகையே தன் பக்கம் திரும்பி பார்க்க வைத்துள்ளார்.

ஸ்கோர் நிலவரம்

விறுவிறுப்பாக நடைபெற்று வரும் இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இலங்கை அணி முதல் இன்னிங்ஸில் 222 ரன்கள் சேர்க்க, பாகிஸ்தான் அணி 218 ரன்களுக்கு சுருண்டது. எனவே 4 ரன்கள் முன்னிலையுடன் ஆடிய இலங்கை அணி 2வது இன்னிங்ஸில் 342 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. இதனை நோக்கி தான் தற்போது பாகிஸ்தான் விளையாடி வருகிறது.

Story first published: Tuesday, July 19, 2022, 14:35 [IST]
Other articles published on Jul 19, 2022
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+