Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

2018இல் ஐந்து முக்கிய கிரிக்கெட் தொடர்களில் பங்கேற்ற இந்தியா.. அதில் எத்தனை வெற்றி தெரியுமா?

டெல்லி : 2018இல் இந்தியா எத்தனை கிரிக்கெட் தொடர்களில் பங்கேற்றது? அதில் எத்தனை தொடர்களில் வெற்றி பெற்றுள்ளது தெரியுமா? ஆசிய கோப்பை ஒன்று மட்டும் தானே நடைபெற்றது?

2018இல் ஆசிய கோப்பையுடன் சேர்த்து, மொத்தம் ஐந்து முக்கிய கிரிக்கெட் தொடர்களில் இந்தியா பங்கேற்றது.

எத்தனை அணிகள்?

எத்தனை அணிகள்?

கோலி தலைமையிலான ஆடவர் கிரிக்கெட் அணியை தவிர நாம் மற்ற இந்திய கிரிக்கெட் அணிகளை பற்றி கண்டு கொள்வதே இல்லை. இந்திய ஆடவர் அணி, மகளிர் அணி, ஆடவர் அண்டர் 19 அணி மற்றும் பார்வையற்றோர் கிரிக்கெட் அணி என இந்த அணிகள் அனைத்தும் முக்கிய தொடர்களில் ஆடியுள்ளன.

பார்வையற்றோர் உலகக்கோப்பை

பார்வையற்றோர் உலகக்கோப்பை

ஜனவரி 8 முதல் 20 வரை நடைபெற்ற பார்வையற்றோர் உலகக்கோப்பை தொடரில் ஆறு நாடுகள் பங்கேற்றன. போட்டிகள் பாகிஸ்தான் மற்றும் ஐக்கிய அரபு நாட்டில் நடைபெற்றது. இறுதிப் போட்டியில் இந்தியா - பாகிஸ்தான் அணிகள் மோதின. இந்தியா அந்த போட்டியில் 2 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று இரண்டாவது முறையாக பார்வையற்றோர் உலகக்கோப்பையை வென்று அசத்தியது.

அண்டர் - 19 உலகக்கோப்பை

அண்டர் - 19 உலகக்கோப்பை

ப்ரித்வி ஷா தலைமையிலான இந்திய அண்டர் 19 அணி அண்டர் 19 உலகக்கோப்பையை நான்காவது முறையாக இந்தியா வெல்ல காரணமாக இருந்தது. அரையிறுதியில் பாகிஸ்தான் அணியையும், இறுதியில் ஆஸ்திரேலிய அணியையும் வீழ்த்தியது இந்திய அணி. அண்டர் 19 பிரிவில் நான்கு உலகக்கோப்பை வென்ற ஒரே அணி இந்தியா மட்டுமே.

மகளிர் ஆசிய டி20 கோப்பை

மகளிர் ஆசிய டி20 கோப்பை

மகளிர் அணிக்கான ஆசிய டி20 கோப்பை தொடரில் இந்திய அணி துவக்கத்தில் சிறப்பாக ஆடி வந்தது. இறுதிப் போட்டியில் வங்கதேச அணியை சந்தித்தது. இறுதியில் எதிர்பாரா விதமாக தோல்வி அடைந்தது இந்திய அணி. வங்கதேச மகளிர் அணி தங்கள் முதல் ஆசிய கோப்பையை வென்று அசத்தினர்.

ஆடவர் ஆசிய கோப்பை தொடர்

ஆடவர் ஆசிய கோப்பை தொடர்

ரோஹித் சர்மா தலைமையில் களமிறங்கிய இந்திய அணி கத்துக்குட்டி அணிகளிடம் தடுமாறினாலும் பாகிஸ்தானை இரண்டு முறை வலுவாக வீழ்த்தியது. இறுதிப் போட்டியில் வங்கதேச அணியுடன் போராடி வெற்றி பெற்றது இந்தியா.

மகளிர் டி20 உலகக்கோப்பை

மகளிர் டி20 உலகக்கோப்பை

இந்திய மகளிர் அணி ஹர்மன்ப்ரீத் கௌர் தலைமையில் களமிறங்கியது. குரூப் சுற்றில் ஆதிக்கம் செலுத்திய இந்திய அணி, அரையிறுதியில் இங்கிலாந்து அணியிடம் 8 விக்கெட் வித்தியாசத்தில் படு தோல்வி அடைந்தது. அரையிறுதியில் மூத்த வீராங்கனை மிதாலி ராஜை களமிறக்காதது கடும் விமர்சனத்துக்கு உள்ளானது.

5 தொடர்கள் - 3 வெற்றிகள்

5 தொடர்கள் - 3 வெற்றிகள்

இந்திய கிரிக்கெட் அணிகள் ஐந்து பெரிய தொடர்களில் பங்கேற்று அதில் மூன்றில் வெற்றி பெற்றுள்ளன. மகளிர் அணி மட்டுமே இரு தொடர்களில் முக்கிய கட்டம் வரை சென்று தோல்வி அடைந்துள்ளது. எனினும், கடந்த காலத்தோடு ஒப்பிடுகையில் மகளிர் கிரிக்கெட் அணி பல மடங்கு முன்னேறி உள்ளது.

Story first published: Saturday, December 29, 2018, 17:20 [IST]
Other articles published on Dec 29, 2018
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+