Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

2018 டெஸ்ட், ஒருநாள், டி20யில் ஆதிக்கம் செலுத்திய இந்திய பௌலர்கள் யார்? அதிக விக்கெட்கள் யாருக்கு?

மும்பை : இந்திய கிரிக்கெட் அணியின் பந்துவீச்சு 2018இல் அதன் உச்சத்தை எட்டியது. இதுவரை இந்திய கிரிக்கெட் வரலாற்றில் இல்லாத அளவு பேட்டிங்கை முந்தி பந்துவீச்சாளர்கள் ஆதிக்கம் செலுத்தினர்.

டெஸ்டில் பும்ரா தான் இந்திய பந்துவீச்சை முன்னெடுத்துச் செல்கிறார். நிச்சயம் பும்ரா இல்லாத இந்திய அணி பந்துவீச்சில் பலவீனமான அணியாகத் தான் காட்சி அளிக்கும். ஒருநாள் மற்றும் டி20யில் குல்தீப் ஆதிக்கம் செலுத்துகிறார். 2018இல் இந்திய பந்துவீச்சாளர்கள் எடுத்த விக்கெட்கள் எத்தனை?

டெஸ்டில் பும்ரா கலக்கல்

டெஸ்டில் பும்ரா கலக்கல்

டெஸ்ட் போட்டிகளில் பும்ரா 9 போட்டிகள் - 48 விக்கெட்கள், ஷமி 12 போட்டிகள் 47 விக்கெட்கள், இஷாந்த் சர்மா 11 போட்டிகள் 41 விக்கெட்கள், அஸ்வின் 10 போட்டிகள் 38 விக்கெட்கள், ஜடேஜா 5 போட்டிகள் 25 விக்கெட்கள் எடுத்துள்ளனர்.

ஜடேஜா சூப்பர்

ஜடேஜா சூப்பர்

அஸ்வினை விட ஜடேஜா குறைந்த போட்டிகளே ஆடி இருந்தாலும் சராசரியாக அதிக விக்கெட்கள் வீழ்த்தியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. சர்வதேச அளவில் இந்த ஆண்டில் அதிக டெஸ்ட் விக்கெட்கள் வீழ்த்திய பட்டியலில் பும்ரா மூன்றாவது இடத்திலும், ஷமி நான்காவது இடத்திலும் இருக்கிறார்கள்.

குல்தீப் யாதவ் மாயாஜாலம்

குல்தீப் யாதவ் மாயாஜாலம்

ஒருநாள் போட்டிகளில் குல்தீப் யாதவ் தன் மாயாஜால சுழல் மூலம் ஆதிக்கம் செலுத்தி வருகிறார். அவர் இந்த ஆண்டு 19 போட்டிகளில் 45 விக்கெட்கள் வீழ்த்தி அசத்தியுள்ளார். அவருக்கு அடுத்த இடத்தில் சாஹல் 17 போட்டிகள் - 29 விக்கெட்கள், பும்ரா 13 போட்டிகள் - 22 விக்கெட்கள், ஜடேஜா 8 போட்டிகள் - 14 விக்கெட்கள் உள்ளனர்.

இரண்டாம் இடத்தில் குல்தீப்

இரண்டாம் இடத்தில் குல்தீப்

ஒருநாள் போட்டிகளில் சர்வதேச அளவில் ஆப்கனின் ரஷித் கான் 20 போட்டிகளில் 48 விக்கெட்கள் எடுத்து முதல் இடத்திலும், குல்தீப் யாதவ் 45 விக்கெட்களுடன் இரண்டாம் இடத்திலும் இருக்கின்றனர். மற்ற இந்திய பந்துவீச்சாளர்கள் யாரும் முதல் ஐந்து இடங்களில் இடம் பெறவில்லை.

டி20 போட்டிகளில் யார் அதிகம்?

டி20 போட்டிகளில் யார் அதிகம்?

டி20 போட்டிகளிலும் குல்தீப் யாதவ் முதல் இடத்தில் இருக்கிறார். குல்தீப் யாதவ் 9 போட்டிகளில் 21 விக்கெட்கள் வீழ்த்தியுள்ளார். சாஹல் 18 விக்கெட்களும், புவனேஸ்வர் குமார் 12 விக்கெட்களும் வீழ்த்தி உள்ளனர். சர்வதேச அளவில் குல்தீப் யாதவ் அதிக டி20 விக்கெட்கள் வீழ்த்திய பட்டியலில் ஐந்தாம் இடம் பிடித்துள்ளார்.

Story first published: Monday, December 31, 2018, 19:10 [IST]
Other articles published on Dec 31, 2018
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+