For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

வரலாற்று சாதனைகள்.. அதிர்ச்சிகள்.. வெறியாட்டம்.. 2019இல் கிரிக்கெட் உலகை ஆட்டிப்படைத்த சம்பவங்கள்!

மும்பை : 2019ஆம் ஆண்டில் துவக்கத்தில் ஆஸ்திரேலிய மண்ணில் டெஸ்ட் தொடரை வென்று வரலாறு படைத்தது இந்தியா. ஆனால், உலகக்கோப்பை அரையிறுதியில் தோற்று 30 நிமிட சொதப்பல் பற்றி கதை சொன்னது.

ஐபிஎல் இறுதிப் போட்டி வெற்றி வெறும் 1 ரன்னில் கிடைத்தது. அதே சமயம், உலகக்கோப்பை இறுதிப் போட்டியில் இரண்டு முறை போட்டி டை ஆகி, சிறப்பாக ஆடிய அணிக்கு அல்வா கொடுத்து விட்டு, இங்கிலாந்து அணி கோப்பையை தட்டிச் சென்றது.

இப்படி 2019ஆம் ஆண்டில் கிரிக்கெட் ரசிகர்களால் அதிகம் பேசப்பட்ட முக்கிய செய்திகளின் தொகுப்பு இங்கே.

இந்தியருக்கு பந்தை பரிசளித்த பாகிஸ்தான் வீரர் -பிபிஎல் தொடரில் நெகிழ்ச்சி சம்பவம்இந்தியருக்கு பந்தை பரிசளித்த பாகிஸ்தான் வீரர் -பிபிஎல் தொடரில் நெகிழ்ச்சி சம்பவம்

வரலாற்று வெற்றி

வரலாற்று வெற்றி

டெஸ்ட் போட்டிகளில் இந்தியா பெரிய அளவில் ஆதிக்கம் செலுத்தத் துவங்கி இருக்கிறது. 2018 ஆம் ஆண்டின் இறுதியில் ஆஸ்திரேலிய டெஸ்ட் தொடரில் 2 - 1 என முன்னிலையில் இருந்தது இந்தியா. கடைசி டெஸ்ட் 2019ஆம் ஆண்டு நடந்தது. அந்தப் போட்டியில் டிரா செய்த இந்தியா தொடரை வென்று வரலாறு படைத்தது. ஆஸ்திரேலிய மண்ணில் இந்தியா பெறும் முதல் டெஸ்ட் தொடர் வெற்றி அதுதான்.

ஐபிஎல் பைனல்

ஐபிஎல் பைனல்

2019 ஐபிஎல் இறுதிப் போட்டியில் வழக்கம் போல சென்னை சூப்பர் கிங்ஸ் ஆடியது. சிஎஸ்கே அணியின் எதிரி அணியாக பார்க்கப்படும் மும்பை இந்தியன்ஸ் அணி வெறும் 1 ரன்னில் ஐபிஎல் இறுதியில் வென்றது. 1 ரன்னில் தோல்வி அடைந்தது சிஎஸ்கே ரசிகர்களை பெரிய அளவில் பாதித்தது.

இந்தியா - பாகிஸ்தான் போட்டி

இந்தியா - பாகிஸ்தான் போட்டி

அடுத்து நடந்த உலகக்கோப்பை தொடரில் சுமார் 100 கோடி ரசிகர்கள் உலகம் முழுவதும் பெரிதும் எதிர்பார்த்த இந்தியா - பாகிஸ்தான் போட்டி, பெரிய பரபரப்பின்றி முடிந்தது. மழை குறுக்கிட்ட அந்தப் போட்டியில் பாகிஸ்தான் அணி மோசமாக ஆடியது. போட்டியின் இடையே பாகிஸ்தான் கேப்டன் கொட்டாவி விட்டது உலக அளவில் பிரபலம் ஆனது. இந்தியா 89 ரன்கள் வித்தியாசத்தில் டிஎல்எஸ் முறையில் வென்றது.

இந்தியா - நியூசி. அரையிறுதி

இந்தியா - நியூசி. அரையிறுதி

உலகக்கோப்பை தொடரின் அரையிறுதியில் இந்தியா - நியூசிலாந்து அணிகள் மோதின. அந்தப் போட்டியில் இந்தியா தான் வெற்றி பெறும் என உலகமே எதிர்பார்த்த நிலையில், இந்திய அணி 5 ரன்னுக்கு மூன்று விக்கெட்களை இழந்து பெரும் அதிர்ச்சி அளித்தது. பின் போட்டியில் தோல்வி அடைந்தது. இந்தியா உலகக்கோப்பை வெல்லும் என எதிர்பார்த்த ரசிகர்கள் அணியை கடுமையாக சாடினர். கேப்டன் கோலி மற்றும் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி இந்தியா பேட்டிங் செய்த போது முதல் 30 நிமிடத்தில் சொதப்பி விக்கெட்களை பறிகொடுத்தது தான் தோல்விக்கு காரணம். மற்றபடி இந்தியா சிறப்பாக ஆடியது என கதை சொல்லி சமாளித்தனர்.

இங்கிலாந்து டை செய்தது

இங்கிலாந்து டை செய்தது

உலகக்கோப்பை இறுதிப் போட்டியில் இங்கிலாந்து - நியூசிலாந்து அணிகள் மோதின இந்தப் போட்டியில் அம்பயர் அளித்த தவறான தீர்ப்புகள் ஒரு பக்கம் நியூசிலாந்து அணியை பாதித்தது. அதைப் பயன்படுத்திய இங்கிலாந்து அணி போராடி போட்டியை டை செய்தது. உலகக்கோப்பை வரலாற்றில் இறுதிப் போட்டி முதல் முறையாக டை ஆனது.

சர்ச்சை வெற்றி

சர்ச்சை வெற்றி

பின் நடந்த சூப்பர் ஓவரிலும் போட்டி டை ஆனது. அதன் பின் வெற்றியாளரை தீர்மானிக்க இரு அணிகளும் அடித்த பவுண்டரிகள் கணக்கில் எடுத்துக் கொள்ளப்பட்டு, அதன் அடிப்படையில் இங்கிலாந்து வென்றதாக அறிவிக்கப்பட்டது. உலகக்கோப்பை இறுதிப் போட்டியின் வெற்றி சர்ச்சைக்கு உரிய முறையில் தீர்மானிக்கப்பட்டது.

கேன் வில்லியம்ஸ் அமைதி

கேன் வில்லியம்ஸ் அமைதி

நியூசிலாந்து அணிக்காக ஒட்டுமொத்த உலக கிரிக்கெட் ரசிகர்களும், முன்னாள் வீரர்களும் குரல் கொடுத்தனர். ஆனால், நியூசிலாந்து கேப்டன் கேன் வில்லியம்ஸ் இந்த சர்ச்சை குறித்து புகார் கூறாமல், வலியை அடக்கிக் கொண்டு மௌனமாக இருந்தது கிரிக்கெட் உலகை உலுக்கியது.

தவறான அம்பயர் தீர்ப்புகள்

தவறான அம்பயர் தீர்ப்புகள்

அம்பயரின் தவறான தீர்ப்புகள் இந்த ஆண்டு முழுவதும் பேசப்பட்டது. கிரிக்கெட் உலகின் முக்கிய தொடர்களான ஐபிஎல் மற்றும் உலகக்கோப்பை இரண்டிலும் அம்பயர்கள் தப்பும், தவறுமாக தீர்ப்புகள் கொடுத்து ஆண்டு முழுவதும் அதிர்ச்சி அளித்து வந்தனர். ரசிகர்கள் இணையத்தில் தொடர்ந்து அவர்களை திட்டித் தீர்த்தனர்.

டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடர்

டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடர்

2019அம ஆண்டில் தான் டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடர் முதன் முதலாக துவக்கப்பட்டது. இந்த தொடரில் இதுவரை இந்தியா பங்கேற்ற டெஸ்ட் போட்டிகள் அனைத்திலும் வெற்றி பெற்று முன்னணியில் உள்ளது. வெஸ்ட் இண்டீஸ், தென்னாப்பிரிக்கா, வங்கதேசம் என மூன்று தொடர்களையும் முழுதாக வென்றுள்ளது இந்தியா.

பென் ஸ்டோக்ஸ் வெறித்தனம்

பென் ஸ்டோக்ஸ் வெறித்தனம்

தனிப்பட்ட வீரர் ஒருவர் ஆண்டு முழுவதும் தன் கிரிக்கெட் திறனால் பரபரப்பை கிளப்பினார் என்றால் அது பென் ஸ்டோக்ஸ் தான். உலகக்கோப்பை இறுதிப் போட்டியில் இங்கிலாந்து தோல்வியை நோக்கி சென்ற போது போராடி டை செய்தவர் பென் ஸ்டோக்ஸ் தான்.

ஸ்டோக்ஸ் ஆஷஸ் ஸ்பெஷல்

ஸ்டோக்ஸ் ஆஷஸ் ஸ்பெஷல்

அடுத்து ஆஷஸ் தொடரில் ஒரு போட்டியில் ஆஸ்திரேலியா வெற்றிக்கு அருகே சென்ற போது நீண்ட நேரம் ஆமை போல "டொக்" வைத்து ஆடி வந்த ஸ்டோக்ஸ் புயலாக மாறி சிக்ஸ், ஃபோர் என விளாசி 135 ரன்கள் குவித்து இங்கிலாந்து அணியை வெல்ல வைத்தார். கையில் 1 விக்கெட், வெற்றிக்கு 73 ரன்கள் தேவை என்ற நிலையில் ஸ்டோக்ஸ் வெற்றி பெற்றுத் தந்தார். அது டெஸ்ட் வரலாற்றில் மறக்க முடியாத ஆட்டமாக மாறியது.

இந்திய வீரர்கள் சாதனை

இந்திய வீரர்கள் சாதனை

இந்திய பந்துவீச்சாளர்கள் நால்வர் 2019ஆம் ஆண்டில் நான்கு ஹாட்ரிக் சாதனை செய்து, ஹாட்ரிக்குக்கே போரடிக்க வைத்தனர். முகமது ஷமி, பும்ரா, தீபக் சாஹர், குல்தீப் யாதவ் தான் அந்த நால்வர்.

அந்த நான்கு ஹாட்ரிக்

அந்த நான்கு ஹாட்ரிக்

ஷமி உலகக்கோப்பை தொடரில் ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிராக ஹாட்ரிக் சாதனை செய்தார். பும்ரா வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக டெஸ்ட் போட்டியில் ஹாட்ரிக் விக்கெட் எடுத்தார். வங்கதேச டி20 தொடரில் தீபக் சாஹர் ஹாட்ரிக் விக்கெட் எடுத்தார். வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான ஒருநாள் தொடரில் குல்தீப் யாதவ் ஹாட்ரிக் எடுத்தார்.

Story first published: Monday, December 23, 2019, 21:05 [IST]
Other articles published on Dec 23, 2019
English summary
Year Ender 2019 : Top 10 cricket news of the year 2019
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X