Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

2020ல் கிரிக்கெட் உலகை உலுக்கிய காதல்.. அதுவும் சச்சின் குடும்பத்திலேயே.. சர்ச்சையில் இளம் வீரர்!

சிட்னி: 2020ல் கிரிக்கெட் உலகம் பரபரப்பாக பல திருப்பங்களை சந்தித்ததற்கு இடையிலும் மிக முக்கியமான சர்ச்சை ஒன்று பெரிய அளவில் விவாதத்திற்கு உள்ளானது.

இந்திய கிரிக்கெட் அணியில் இப்போதும் மதிக்கப்பட கூட வீரர், கிரிக்கெட் ஜாம்பவான்களால் போற்றப்பட கூடிய வீரர் என்று பார்த்தால் அது இந்திய அணியின் முன்னாள் வீரர் சச்சின் டெண்டுல்கர். 2020ஐ உலுக்கிய சர்ச்சையும் கூட இவரின் குடும்பத்தில் இருந்து உருவானதுதான்.

தனது கிரிக்கெட் வாழ்க்கையில் சச்சின் டெண்டுல்கர் பெரிய அளவில் சர்ச்சைகளுக்கு உள்ளானது இல்லை. ஆனால் அவரின் மகள் சாரா டெண்டுல்கர் பிரபலம் ஆகும் முன்பே சில சர்ச்சைகள், கிசுகிசுக்கள் என்று பெரிய அளவில் வைரலாகி உள்ளார்.

2020 ஐபிஎல்

2020 ஐபிஎல்

2020 ஐபிஎல் தொடரின் போதுதான் சாரா டெண்டுல்கர் பெரிய அளவில் வைரலானார். ஐபிஎல் லீக் ஆட்டத்தில் மும்பைக்கும் கொல்கத்தா அணிக்கும் இடையில் அபுதாபியில் பிஎல் போட்டி நடைபெற்றது. இந்த போட்டியில் மும்பை பேட்டிங் செய்த போது, மூன்றாவது ஓவரில் கொல்கத்தா வீரர் சுப்மான் கில் பீல்டிங் செய்து கொண்டு இருந்தார்.

சர்ச்சை

சர்ச்சை

அப்போது மும்பை வீரர் சூர்யா குமார் யாதவ் அடித்த பந்து ஒன்றை டைவ் அடித்து சுப்மான் கில் பிடித்தார். இதுதான் சர்ச்சையாகி உள்ளது. இந்த புகைப்படத்தை நேற்று சச்சின் டெண்டுல்கரின் மகள் சாரா பகிர்ந்ததுதான் சர்ச்சைக்கு காரணம். இந்த புகைப்படத்தை பகிர்ந்து சாரா செய்த காரியம்தான் இணையம் முழுக்க வைரலானது.

வைரல்

வைரல்

இந்த புகைபடத்தை தனது இன்ஸ்ட்டா ஸ்டோரியில் பகிர்ந்த சாரா டெண்டுல்கர், அதில் ஹார்ட்களை இட்டு உள்ளார். சரியாக சுப்மான் கில் இருக்கும் பிரேமை ஸ்கிரீன்ஷாட் எடுத்து அதை ஹார்ட் எமோஜி உடன் பகிர்ந்து உள்ளார். இதனால் சாரா தற்போது சுப்மான் கில் உடன் காதலில் இருக்கிறார் என்று சர்ச்சையானது.

இதற்கு முன்பே

இதற்கு முன்பே

இதற்கு முன்பே இவர்கள் இருவரும் ஒரே மாதிரி ஸ்டேட்டஸ் வைத்தது. மாற்றி மாதரி ஹார்ட்டின் இட்டுக்கொண்டது என்று பெரிய அளவில் வைரலாக கிசுகிசுக்கப்பட்டனர். இப்படிப்பட்ட சூழ்நிலையில் கில் புகைப்படத்தை சாரா பகிர்ந்து பெரிய அளவில் வைரலானது.

சச்சின்

சச்சின்

இதை பற்றி கடைசிவரை சச்சின் வாய் திறக்கவே இல்லை. எதுவும் பேசாமல் சச்சின் இதில் தொடர்ந்து மௌனம் சாதித்து வந்தார். ஆனால் இணையத்தில் பலர் இது தொடர்பாக கேள்விகளை எழுப்பி இருந்தனர். கிரிக்கெட்டில் பல விஷயங்கள் நடந்து இருந்தாலும்.. இந்த சம்பவம் பெரிய அளவில் விவாதத்திற்கு உள்ளானது .

ஸ்பை

ஸ்பை

அதே சமயம் ஒரே ஒரு போட்டோவை பகிர்ந்தால் அது காதல் ஆகிவிடுமா என்று கேட்கலாம். ஆனால் இதற்கு முன்பே இப்படி இரண்டு முறை நடந்துள்ளது. சில நாட்களுக்கு முன் சாரா தனது புகைப்படத்தை டிவிட்டரில் பகிர்ந்து ''I Spy'' என்று கேப்ஷன் கொடுத்து இருந்தார். அதேபோல் சுப்மான் கில்லும் தனது பக்கத்தில் செய்தார். தனது புகைப்படத்தை பகிர்ந்து அதற்கு மேல் இதே ''I Spy'' என்று கேப்ஷன் கொடுத்து இருந்தார்.

வைரல்

வைரல்

இப்படி இரண்டு பேருமே இணையத்தில் மாறி மாறி காதல் செய்து கொண்டு இருக்கிறார்கள்.அனுஸ்கா சர்மா - கோலி ஜோடிக்கு பின் சுப்மான் - சாரா ஜோடி பெரிய அளவில் வைரலாகி உள்ளது. ஆனால் இவர்கள் தங்கள் காதல் குறித்து இன்னும் வெளிப்படையாக அறிவிக்கவில்லை.

Story first published: Monday, December 14, 2020, 18:11 [IST]
Other articles published on Dec 14, 2020
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+