Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

ரெய்னா.. ஏன் இப்படி செய்தீர்கள்? ஒவ்வொரு ரசிகனும் கேட்ட கேள்வி.. வெளி வராத உண்மைகள்!

சென்னை : 2020ஆம் ஆண்டு மோசமான ஆண்டாக பார்க்கப்பட்டு வரும் நிலையில், கிரிக்கெட் வீரர்களில் சுரேஷ் ரெய்னாவுக்கு தான் இது மிக மிக மோசமான ஆண்டு.

சுரேஷ் ரெய்னா 2020ஆம் ஆண்டில் யாருமே எதிர்பாராத நிலையில் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து தன் ஓய்வை அறிவித்தார்.

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் அடுத்த கேப்டன் ஆவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அந்த அணியில் இருந்து 2020 ஐபிஎல் தொடருக்கு முன் விலகினார் அல்லது நீக்கப்பட்டார்.

ரெய்னா ஓய்வு

ரெய்னா ஓய்வு

சுரேஷ் ரெய்னா 34 வயதே ஆன நிலையில் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வை அறிவித்தார். தோனி ஓய்வை அறிவித்த அடுத்த சில நிமிடங்களில் அவரும் ஓய்வை அறிவித்து அதிர்ச்சி அளித்து இருந்தார். தோனி ஓய்வு எதிர்பார்த்தது தான். ஆனால் ரெய்னா செய்தது பெரும் அதிர்வலையை உண்டாக்கியது.

ஏன் இப்படி?

ஏன் இப்படி?

சுரேஷ் ரெய்னா ஏன் 34 வயதில் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றார் என பல தரப்பில் இருந்தும் கேள்வி எழுந்தது. அதற்கு அவர் நேரடியாக பதில் அளிக்கவில்லை. தோனி ஓய்வு பெற்றதால் தானும் ஓய்வு முடிவை எடுத்ததாக கூறினார்.

சிஎஸ்கே அணியில் சர்ச்சை

சிஎஸ்கே அணியில் சர்ச்சை

தோனியும், அவரும் எத்தனை நட்புடன் இருந்தால் ஒன்றாக ஓய்வை அறிவித்து இருப்பார்கள் என ரசிகர்கள் எண்ணி வந்த அதே வேளையில் 2020 ஐபிஎல் தொடருக்கு ஒரு மாதம் முன்பு ஹோட்டல் அறையில் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் சுரேஷ் ரெய்னா சிஎஸ்கே அணியை விட்டு விலகியதாக கூறப்பட்டது.

என்ன நடந்தது?

என்ன நடந்தது?

ரெய்னா தான் மீண்டும் சிஎஸ்கே அணியில் இணைய ஆர்வமாக இருப்பதாக கூறியும் அவரை தோனி மற்றும் சிஎஸ்கே நிர்வாகம் மீண்டும் அணியில் சேர்க்கவில்லை. அப்படி ரெய்னா - தோனி இடையே என்ன தான் நடந்தது என இதுவரை யாருக்கும் தெரியவில்லை.

குடும்பத்தில் சோகம்

குடும்பத்தில் சோகம்

ரெய்னாவின் அத்தை குடும்பத்தில் மூவரை கொள்ளையர்கள் கொன்ற கொடுமையும் இதே ஆண்டில் தான் நடந்தது. ஐபிஎல் தொடரில் அவர் வெளியேறிய அதே நேரத்தில் தான் அந்த மோசமான சம்பவமும் நடந்தது. அதனால் அவர் சோகத்தில் இருந்தார்.

மோசமான ஆண்டு

மோசமான ஆண்டு

2020ஆம் ஆண்டு சுரேஷ் ரெய்னாவுக்கு மோசமான ஆண்டாக அமைந்தது. 2008 முதல் சிஎஸ்கே அணியில் இடம் பெற்று வந்த அவர் தற்போது அந்த அணியில் இருந்து நீக்கப்பட்டது தான் இதில் மோசமான இழப்பு. அதை அடுத்து அவர் உறவினர்கள் இறப்பும் அவருக்கு பெரிய இழப்பாக அமைந்தது.

அடுத்தது என்ன?

அடுத்தது என்ன?

சுரேஷ் ரெய்னா 2021 ஐபிஎல் தொடரில் புதிய ஐபிஎல் அணியில் தேர்வு செய்யப்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. அவர் சையது முஷ்டாக் அலி டி20 தொடரில் ஆடி தன் பார்மை நிரூபிக்க உள்ளார். அதன் மூலம் பிற அணிகள் அவரை ஏலத்தில் வாங்கும் என அவர் எதிர்பார்க்கக் கூடும்.

Story first published: Saturday, December 12, 2020, 19:12 [IST]
Other articles published on Dec 12, 2020
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+