Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

2023ல் இந்திய அணி வென்ற கோப்பை.. அதுவும் இளம் வீரர்களின் ஆட்டத்தால்.. பிசிசிஐ செய்த ஒரே நல்ல விஷயம்!

மும்பை: நடப்பாண்டில் இந்திய அணி தரப்பில் வென்ற ஒரேயொரு முக்கியமான கோப்பை என்றால் அது ஆசிய போட்டிகளில் கலந்து கொண்டு தங்கம் வென்றது மட்டுமே என்று பார்க்கப்படுகிறது.

2023ஆம் ஆண்டு இந்திய அணிக்கு, இந்திய ரசிகர்களுக்கும் சோதனையாக காலக்கட்டமாக அமைந்துள்ளதாக பார்க்கப்படுகிறது. ஏனென்றால் டி20 உலகக்கோப்பையில் அடைந்த தோல்விக்கு பின், இந்திய அணி மிகமுக்கியமான தொடர்களில் பங்கேற்றது. இந்த ஆண்டு தொடக்கத்திலேயே இலங்கை, நியூசிலாந்து ஆகிய அணிகளுடன் 3 டி20 மற்றும் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்றது.

Year Ender 2023 : Asian Games Gold Medal is the only achievement for BCCI in the Year 2023


அதன்பின் இந்தியாவுக்கு வந்த ஆஸ்திரேலியா அணியை 2-1 என்ற கணக்கில் இந்திய அணி வீழ்த்தி பார்டர் கவாஸ்கர் கோப்பையை வென்றது. அதன்பின் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரில் 2வது முறையாக இறுதிப்போட்டிக்கு இந்திய அணி முன்னேறிய நிலையில், மீண்டும் ஆஸ்திரேலிய அணியிடம் கோப்பையை இந்திய அணி பறிகொடுத்தது.

ஏற்கனவே டி20 உலகக்கோப்பை தோல்வியால் சோகத்தில் இருந்த இந்திய அணி ரசிகர்கள், உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் அடைந்த தோல்வி காரணமாக கூடுதல் சோகத்திற்கு உள்ளாகினர். இதன்பின் வெஸ்ட் இண்டீஸ் சுற்றுப்பயணம் மேற்கொண்டு இந்திய அணி டெஸ்ட் போட்டிகளில் அபார வெற்றியை பெற்றது.

தொடர்ந்து ஆசிய கோப்பையை வென்ற இந்திய அணி, சொந்த மண்ணில் நடைபெற்ற உலகக்கோப்பை தொடரின் இறுதிப்போட்டியில் மீண்டும் ஆஸ்திரேலியா அணியிடம் தோல்வியை சந்தித்தது. கிட்டத்தட்ட டி20 உலகக்கோப்பை, உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடர், உலகக்கோப்பை ஆகிய 3 உச்ச கோப்பையையும் வெல்வதற்கு கேப்டன் ரோகித் சர்மாவுக்கு வாய்ப்பு கிடைத்தது.

ஆனால் 3 தொடரிலும் ரோகித் சர்மா தோல்வியடைந்து இந்திய ரசிகர்களை சோகமடைய செய்தார். ஆனால் நடப்பாண்டில் இந்திய அணி முக்கியமான ஒரு கோப்பையை வென்று அசத்தியது. ருதுராஜ் கெய்க்வாட் தலைமையில் சீனா சென்ற இந்திய அணி, ஆசிய போட்டிகளில் முதல்முறையாக பங்கேற்று தங்கப்பதக்கத்தை வென்று அசத்தியது குறிப்பிடத்தக்கது. நடப்பாண்டில் பிசிசிஐ-க்கு கிடைத்த ஒரே உச்ச பதக்கமாகவும் இது அமைந்தது.
Story first published: Saturday, December 30, 2023, 19:03 [IST]
Other articles published on Dec 30, 2023
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+