Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

2023இல் அதிக விக்கெட் பட்டியல் - முதல் 2 இடத்தில் இந்திய வீரர்கள்.. பின்தங்கிய மிட்செல் ஸ்டார்க்,

மும்பை : 2023 ஆம் ஆண்டு அதிக சர்வதேச விக்கெட்கள் வீழ்த்திய பந்துவீச்சாளர்கள் பட்டியலில் முதல் பத்து இடங்களில் நான்கு இந்திய வீரர்கள் இடம் பெற்று இருக்கின்றனர்.

முதல் இடத்தில் எந்த பந்துவீச்சாளர் இருக்கிறார் தெரியுமா? குல்தீப் யாதவ், முகமது ஷமி, முகமது சிராஜ் ஆகியோர் அதிக விக்கெட்கள் வீழ்த்தியது போல தெரிந்தாலும், ரவீந்திர ஜடேஜா அனைவரையும் பின்தள்ளி முதல் இடத்தை பிடித்துள்ளார்.

Year Ender 2023 : Most Wickets taken by a bowler in 2023 - Ravindra Jadeja leads the chart

ரவீந்திர ஜடேஜா 2023 ஆம் ஆண்டு டெஸ்ட், ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் மொத்தமாக 66 விக்கெட்களை கைப்பற்றி இருக்கிறார். குல்தீப் யாதவ் 63 விக்கெட்களை கைப்பற்றி இரண்டாம் இடத்தில் இருக்கிறார். ஆஸ்திரேலியாவின் மிட்செல் ஸ்டார்க்கும் 63 விக்கெட்கள் கைப்பற்றி மூன்றாவது இடத்தில் இருக்கிறார்.

ஆனால், அவரை விட குல்தீப் யாதவ் நல்ல பவுலிங் சராசரி மற்றும் விக்கெட் ஸ்ட்ரைக் ரேட் வைத்துள்ளார். அதாவது, குல்தீப் யாதவ் ஒரு விக்கெட்டை வீழ்த்த குறைந்த பந்துகள் மட்டுமே எடுத்துக் கொண்டுள்ளார். அதே போல, இரண்டு விக்கெட்களுக்கு இடையே அவர் சராசரியாக விட்டுக் கொடுத்துள்ள ரன்களும், ஸ்டார்க்கை விட குறைவு.

அடுத்து நான்காவது இடத்தில் பாகிஸ்தான் அணியின் ஷஹீன் ஷா அப்ரிடி இடம் பெற்றுள்ளார். அவர் 62 விக்கெட்கள் வீழ்த்தி உள்ளார். ஐந்தாவது இடத்தில் இருக்கும் இந்தியாவின் முகமது சிராஜ் 60 விக்கெட்கள் வீழ்த்தி இருக்கிறார். முகமது ஷமி 56 விக்கெட்களுடன் எட்டாவது இடத்தில் இருக்கிறார்.

ஆக, இந்திய பந்துவீச்சாளர்கள் நான்கு பேர் முதல் பத்து இடங்களில் இடம் பெற்று இருக்கின்றனர். இதில் சிறப்பான விஷயம் குல்தீப் யாதவ் மற்றும் முகமது ஷமி இந்த பட்டியலில் முதல் பத்து இடங்களில் இடம் பெற்றுள்ள பந்துவீச்சாளர்களிலேயே குறைந்த ஸ்ட்ரைக் ரேட் வைத்துள்ளனர். பந்துவீச்சில் ஸ்ட்ரைக் ரேட் என்பது சராசரியாக எத்தனை பந்துகளுக்கு ஒரு முறை ஒரு பந்துவீச்சாளர் விக்கெட் வீழ்த்துகிறார் என்பதை குறிக்கும்.

அந்த வகையில் குல்தீப் யாதவ் 23.6 பந்துகளுக்கு ஒரு முறையும், முகமது ஷமி 26.51 பந்துகளுக்கு ஒரு முறையும் விக்கெட் வீழ்த்தி உள்ளனர். அதிக விக்கெட் வீழ்த்தி இருக்கும் ஜடேஜா 42 பந்துகளுக்கு ஒரு முறைதான் விக்கெட் வீழ்த்தி இருக்கிறார். இந்த வித்தியாசத்துக்கு காரணம், ஜடேஜா அதிக டெஸ்ட் போட்டிகளில் ஆடியது தான்.

Story first published: Saturday, December 30, 2023, 19:33 [IST]
Other articles published on Dec 30, 2023
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+