மும்பை : 2023 ஆம் ஆண்டு விராட் கோலிக்கு ஒரு சிறந்த ஆண்டாகவே அமைந்தது. உலகக்கோப்பை வெல்ல முடிய வில்லை என்ற ஒரு வருத்தம் மட்டும்தான் இருந்தாலும் பல உச்சகட்ட சாதனைகளை படைத்திருக்கிறார்.இதில் நடப்பாண்டில் அவர் படைத்த டாப் 10 சாதனைகள் என்ன என்பது குறித்து தற்போது பார்க்கலாம்.
2023 ஆம் ஆண்டில் விராட் கோலி 36 இன்னிங்ஸில் மொத்தமாக 2048 ரன்களை அடித்திருக்கிறார். இதில் சராசரி 66 ஆகும்.2023 ஆம் ஆண்டில் மட்டும் விராட் கோலி 8 சதங்கள், 10 அரை சதம் அடித்திருக்கிறார் நடப்பாண்டில் சர்வதேச கிரிக்கெட்டில் அதிக ரன்கள் அடித்த இரண்டாவது வீரர் என்ற பெருமையை விராட் கோலி பெற்றிருக்கிறார்.


