Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

மொத்த கிரிக்கெட் உலகத்தையும் திரும்பி பார்க்க வைத்த இலங்கை வீரர் கமிந்து மென்டிஸ்.. சிறந்த டெஸ்ட் வீரர்

கொழும்பு: 2024 ஆம் ஆண்டு டெஸ்ட் போட்டிகளில் இலங்கை அணி அபாரமான வெற்றிகளை பெற்றது. அதற்கு முக்கிய காரணமாக இருந்தவர் கமிந்து மென்டிஸ். அவர் டான் பிராட்மேனுக்கு நிகரான சில சாதனைகளையும் இந்த ஆண்டு செய்தார்.

டெஸ்ட் கிரிக்கெட்டின் வருங்கால நட்சத்திர வீரராகவும் அறியப்படுகிறார். 2022 ஆம் ஆண்டிலேயே டெஸ்ட் போட்டிகளில் அறிமுகம் ஆனார் கமிந்து மென்டிஸ். ஆனால், ஒரு போட்டிக்கு பின் அவருக்கு போதிய வாய்ப்புகள் கிடைக்கவில்லை. 2024 ஆம் ஆண்டு அவருக்கு இலங்கை டெஸ்ட் அணியில் தொடர்ந்து வாய்ப்பு அளிக்கப்பட்டது.

year ender 2024 kamindu mendis

கமிந்து மென்டிஸ் தான் ஆடிய முதல் 8 டெஸ்ட் போட்டிகளிலும் 50 ரன்கள் அடித்து உலகிலேயே எந்த வீரரும் செய்யாத அரிய சாதனையை செய்தார். அவர் இதுவரை 10 போட்டிகளில் விளையாடி 1110 ரன்கள் எடுத்து இருக்கிறார். அவரது பேட்டிங் சராசரி 74 ஆக உள்ளது.

2024 ஆம் ஆண்டில் மட்டும் அவர் 9 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 1049 ரன்கள் எடுத்து இருக்கிறார். அவர் மொத்தம் ஐந்து சதம் மற்றும் நான்கு அரை சதங்களை அடித்து இருக்கிறார். தான் விளையாடிய பத்து போட்டிகளில் ஐந்து சதங்கள் அடித்து கிரிக்கெட் உலகை திரும்பிப் பார்க்க வைத்து இருக்கிறார் கமிந்து மென்டிஸ்.

2024 ஆம் ஆண்டின் சிறந்த டெஸ்ட் வீரர்கள் பட்டியலில் நிச்சயமாக முதல் மூன்று இடங்களில் கமிந்து மென்டிஸ்-க்கு இடம் அளித்தே ஆக வேண்டும். இந்த ஆண்டு டெஸ்ட் போட்டிகளில் சிறப்பாக விளையாடிய இளம் வீரர்களில் ஜெய்ஸ்வால் மற்றும் ஹாரி ப்ரூக் ஆகியோரோடு கமிந்து மென்டிஸ்-க்கும் முக்கிய இடம் உண்டு.

Story first published: Tuesday, December 17, 2024, 17:29 [IST]
Other articles published on Dec 17, 2024
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+