Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

Year Ender 2024-அஸ்வின் மட்டுமல்ல, உலக கிரிக்கெட்டின் மற்றொரு முக்கிய பவுலரும், ஓய்வை அறிவித்த ஆண்டு

மும்பை : 2024ஆம் ஆண்டில் பல கிரிக்கெட் வீரர்கள் ஓய்வு பெற்றுள்ளனர். இதில் மிகவும் முக்கியமானவர் நியூசிலாந்து வீரர் டிம் சவுதி. நடப்பாண்டில் இங்கிலாந்துக்கு எதிராக தனது கடைசி தொடரில் டிம் சவுதி விளையாடி, ரசிகர்களின் கண்ணீர் மல்க ஓய்வு பெற்றார். இந்த நிலையில், டிம் சவுதி எப்படி கிரிக்கெட் வாழ்க்கையை தொடங்கினார். அவர் செய்த சாதனைகள் என்ன என்பதை தற்போது பார்க்கலாம்.

டிம் சவுதி பள்ளி பருவத்தில் ரக்பி அணியிலும் கிரிக்கெட் அணியிலும் இருந்திருக்கிறார். ஒரு கட்டத்தில் கிரிக்கெட் மீது தீவிர ஆர்வம் ஏற்பட்டதால் ரக்பிக்கு குட் பை சொல்லி விட்டார். 2007 ஆம் ஆண்டு இந்திய யூத் அணி நியூசிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட போது 3 டெஸ்ட் ஆட்டத்தில் பங்கேற்றது. இதில் 20 விக்கெட்டுகளை வீழ்த்தி தன்னுடைய வருகையை பதிவு செய்தார்.

year ender 2024 tim southee

இதனை தொடர்ந்து 2008 ஆம் ஆண்டு இங்கிலாந்துக்கு எதிரான சர்வதேச டி20 போட்டியில் டிம் சவுதி அறிமுகமானார். சர்வதேச கிரிக்கெட்டில் இரண்டு போட்டிகளில் விளையாடிய பிறகு அவர் மீண்டும் மலேசியாவில் நடைபெற்ற
அண்டர் 19 உலக கோப்பையில் பங்கேற்றார். ஜிம்பாப்வேக்கு எதிரான முதல் போட்டியில் 11 ரன்களை மட்டுமே விட்டுக் கொடுத்து ஐந்து விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

இந்த தொடரில் மொத்தமாக 17 விக்கெட்களை வீழ்த்திய சவுதி தொடர் நாயகன் விருதை பெற்றார். இதனை தொடர்ந்து அடுத்த மாதத்திலேயே இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் சவுதி அறிமுகமானார்.
பந்துவீச்சில் 55 ரன்கள் மட்டுமே விட்டுக் கொடுத்து ஐந்து விக்கெட்டுகளை சவுதி வீழ்த்தினார். இந்த டெஸ்ட் போட்டியில் கடைசி இன்னிங்ஸ் நியூசிலாந்து அணி 553 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை இங்கிலாந்து அணி நிர்ணயித்தது.

அப்போது நியூசிலாந்து அணி எட்டு விக்கெட் இழப்பிற்கு 329 ரன்கள் என தடுமாறிய போது, களத்திற்கு வந்த டிம்ஸ் சவுதி 29 பந்துகளில் அரை சதம் விளாசினார். கடைசிவரை களத்தில் நின்ற டிம் சவுதி 40 பந்துகளில் 77 ரன்கள் குவித்தார். இதில் ஒன்பது சிக்ஸர்களும்,நான்கு பவுண்டரிகளும் அடங்கும். இதனைத் தொடர்ந்து டெஸ்ட் கிரிக்கெட்டில் ட்ரெண்ட் பவுல்ட் உடன் இணைந்து சவுதி கூட்டணி அமைத்து எதிரணியின் பேட்ஸ்மேனின் விக்கெட்டுகளை வேட்டையாடத் தொடங்கினார்கள்.

இந்தியாவில் நடைபெற்ற 2011 உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் டிம் சவுதி 18 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.அந்த தொடரில் சவுதியில் பந்துவீச்சு சராசரி 17 ஆகும். அதே 2011 ஆம் ஆண்டு டிம் சவுதி சிஎஸ்கே அணிக்காக ஐபிஎல் தொடரில் விளையாடி இருக்கிறார். 5 போட்டிகளில் களம் இறங்கி நான்கு விக்கெட்டுகளை அவர் கைப்பற்றி இருந்தார்.

ஆசிய கிரிக்கெட் மைதானங்களில் வெளிநாட்டு வேக பந்துவீச்சாளர்கள் விக்கெட்டுகள் எடுக்க தடுமாறிய காலகட்டத்தில் டிம் சவுதி வங்கதேசத்துக்கு எதிராக ஒரே இன்னிங்சில் 64 ரன்கள் விட்டுக்கொடுத்து ஏழு விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினார்.இதனை தொடர்ந்து இலங்கைக்கு எதிரான ஒரு டெஸ்ட் போட்டியில் ஒட்டுமொத்தமாக 120 ரன்கள் கொடுத்து எட்டு விக்கெட்டுகளை கைப்பற்றி நியூசிலாந்து அணியின் வெற்றிக்கு உதவினார்.

இதை தொடர்ந்து 2014 ஆம் ஆண்டு வெஸ்ட் இண்டீஸ் எதிரான டெஸ்ட் தொடரில் நியூஸிலாந்து அணி வெற்றி பெற்று 12 ஆண்டுகளுக்குப் பிறகு பெரிய அணிகளுக்கு எதிராக வெற்றியை ருசித்தது. இதில் டிம் சவுதியின் பங்கு மிகவும் முக்கியமானதாகும்.இந்தத் தொடரில் சவுதி 11 விக்கெட்டுகளை கைப்பற்றினார். 2015 ஆம் ஆண்டு உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் இங்கிலாந்து அணிக்கு எதிரான ஆட்டத்தில் டிம் சவுதி தன்னுடைய அனல் பறக்கும் வேகப் பந்துவீச்சை வெளிப்படுத்தி 33 ரன்களை மட்டுமே விட்டுக் கொடுத்து ஏழு விக்கெட்டுகள் வீழ்த்தினார்.

இதன் மூலம் ஒருநாள் கிரிக்கெட்டில் நியூசிலாந்து வீரர்களின் சிறந்த பந்துவீச்சு செயல்பாடாக இதுதான் இருக்கிறது.
விஸ்டன் கிரிக்கெட் இதழ் ஒரு நாள் கிரிக்கெட்டின் இந்த பத்து ஆண்டுகளில் சிறந்த பந்துவீச்சு செயல்பாடாக டிம் சவுதியில் இந்த பந்துவீச்சை அறிவித்தது. நியூசிலாந்து அணியின் கேப்டனான வில்லியம்சனுக்கு எப்போதெல்லாம் காயம் ஏற்படுகிறதோ அப்போதெல்லாம் அந்த நாட்டு கிரிக்கெட் வாரியம் டீம் சவுதியையே கேப்டனாக ஆக்கும்.

இந்தியாவில் இருக்கும் வீரர்கள் போல் எனக்கு கேப்டன் பதவி வேண்டும் என்று சண்டையிடாமல் திறமை இருந்தும் வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் டிம் சவுதி அதனை சிறப்பாக வழி நடத்தினார். ஒரு கட்டத்தில் காயத்தால் அவதிப்பட்டு ஒரு நாள் மற்றும் டி20 போட்டிகளில் பெரிய அளவில் பங்கேற்காமல் தவிர்த்து வந்தார்.எனினும் வாய்ப்பு கிடைக்கும்போது எல்லாம் டிம் சவுதி டி20 ஒருநாள் போட்டிகளிலும் பங்கேற்றார்.

கடந்த 2022 ஆம் ஆண்டு இந்திய அணிக்கு எதிரான டி20 போட்டியில் ஹாட்ரிக் விக்கெட்டுகளை குவித்து சாதனை படைத்தார்.
நியூசிலாந்து அணியின் வில்லியம்சன் டெஸ்ட் கேப்டன்சியை ராஜினாமா செய்த நிலையில் 2022 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் முழு நேர டெஸ்ட் கேப்டனாக சவுதி தலைமை தாங்கினார். இந்த சூழலில் அண்மையில் இலங்கைக்கு எதிரான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் நியூஸிலாந்து அணி தோல்வியை தழுவியது.

இதை அடுத்து டிம் சௌதி தன்னுடைய பொறுப்பை ராஜினாமா செய்தார். நியூசிலாந்து அணிக்காக 16 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 389 விக்கெட்டுகளை சவுதி வீழ்த்தி இருக்கிறார். 161 சர்வதேச ஒரு நாள் போட்டிகளில் விளையாடி 221 விக்கெட்டுகளும் 126 சர்வதேச t20 போட்டிகளில் விக்கெட் வீழ்த்தி 164 விக்கெட்டுகளும் சவுதி வீழ்த்தியுள்ளார்.

டெஸ்ட் கிரிக்கெட்டில் 300 விக்கெட்டுகளை வீழ்த்திய மூன்றாவது நியூசிலாந்து வீரர் சர்வதேச கிரிக்கெட்டில் 700 விக்கெட்டுகளை வீழ்த்திய முதல் நியூசிலாந்து பவுலர் மற்றும் சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் 2000 ரன்கள் அடித்த வீரர்களில் அதிக ஸ்ட்ரைக் ரேட் வைத்திருக்கும் வீரர், டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக சிக்சர்கள் அடித்தவர்கள் பட்டியலில் 4வது வீரர் என பல சாதனைகளை டிம் சவுதி படைத்திருக்கிறார். சவுதியின் ஓய்வு நியூசிலாந்து கிரிக்கெட்டில் மிகப் பெரிய வெற்றிடத்தை ஏற்படுத்தியது.

Story first published: Monday, December 23, 2024, 18:05 [IST]
Other articles published on Dec 23, 2024
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+