For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

கம்பேக்னா இப்படி இருக்கணும்.. 3 ஆண்டுக்கு பின் மிரள வைத்த வருண்.. 7 மேட்ச்சில் 17 விக்கெட்

சென்னை: 2024 ஆம் ஆண்டு மிகச்சிறந்த "கம்பேக்" (comeback)கொடுத்த இந்திய வீரர்களில் ஒருவர் சுழற் பந்துவீச்சாளர் வருண் சக்கரவர்த்தி. தமிழகத்தைச் சேர்ந்த அவர் மிஸ்டரி ஸ்பின்னராக 2021 ஆம் ஆண்டு இந்திய அணியில் இடம் பிடித்து இருந்தார். ஆனால், 6 டி20 போட்டிகளில் ஆடிய நிலையில் அணியில் இருந்து புறக்கணிக்கப்பட்டார்.

இந்த நிலையில், 2024 ஆம் ஆண்டு இந்திய டி20 அணியில் வாய்ப்பு பெற்று 17 விக்கெட்களை வீழ்த்தி மிரட்டி இருக்கிறார். வருண் சக்கரவர்த்தி 2019 ஆம் ஆண்டு ஐபிஎல் தொடரில் பஞ்சாப் கிங்ஸ் அணியில் இடம் பிடித்தார். அதன்பின் 2020 ஐபிஎல் தொடரில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியில் இடம் பெற்ற அவர் விக்கெட் வேட்டையாடி அனைவரின் கவனத்தையும் தன் பக்கம் திருப்பினார்.

year ender 2024 varun chakravarthy

தொடர்ந்து கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியில் இடம் பெற்று ஆடிய அவர் ஐபிஎல் தொடரில் அதிக விக்கெட்களை வீழ்த்தியதை அடுத்து 2021 ஆம் ஆண்டு இந்திய டி20 அணியில் இடம் பெற்றார். ஆனால், அப்போது ஆறு போட்டிகளில் மட்டுமே அவருக்கு வாய்ப்பு வழங்கப்பட்டது. அதில் வருண் சக்கரவர்த்தி கட்டுக்கோப்பாக பந்து வீசிய போதும் மொத்தம் 2 விக்கெட்கள் மட்டுமே வீழ்த்தினார்.

இதை அடுத்து அவருக்கு இந்திய அணியில் வாய்ப்பு மறுக்கப்பட்டது. அதே சமயம் அவர் 2023 ஐபிஎல் தொடரில் 20 விக்கெட்களையும், 2024 ஐபிஎல் தொடரில் 21 விக்கெட்களையும் வீழ்த்தி அசத்தி இருந்தார். அவர் நல்ல ஃபார்மில் இருந்ததால் 2024 டி20 உலக கோப்பையில் அவருக்கு வாய்ப்பு வழங்கப்படும் என்ற எதிர்பார்ப்பு இருந்தது.

ஆனால், அவருக்கு 2024 டி20 உலகக்கோப்பை தொடரில் வாய்ப்பு வழங்கப்படவில்லை. அதன் பிறகு நடந்த ஜிம்பாப்வே அணிக்கு எதிரான டி20 தொடரிலும், இலங்கை அணிக்கு எதிரான டி20 தொடரிலும் வருணுக்கு வாய்ப்புகள் வழங்கப்படவில்லை. நீண்ட இடைவெளிக்கு பின் அவருக்கு வங்கதேச அணிக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரிலும், தென்னாப்பிரிக்க அணிக்கு எதிரான நான்கு போட்டிகள் கொண்ட டி20 தொடரிலும் வாய்ப்பு கிடைத்தது.

சுமார் மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு இந்திய அணியில் வாய்ப்பு பெற்ற வருண் சக்கரவர்த்தி, அதை சரியாக பயன்படுத்தி விக்கெட் வேட்டையாடி மிரட்டினார். 2024 ஆம் ஆண்டில் 7 டி20 போட்டிகளில் மட்டுமே விளையாடிய அவர் 17 விக்கெட்களை வீழ்த்தி மிரள வைத்தார்.

அதிகபட்சமாக தென்னாப்பிரிக்க அணிக்கு எதிரான ஒரு போட்டியில் 17 ரன்கள் விட்டுக் கொடுத்த 5 விக்கெட்களை வீழ்த்தி தனது சிறந்த டி20 பந்துவீச்சை பதிவு செய்தார். இந்திய டி20 அணியில் இடம் பிடிக்க பல வீரர்கள் மத்தியில் கடுமையான போட்டி நிலவி வருகிறது. இதற்கிடையே 7 போட்டிகளில் மட்டுமே ஆடும் வாய்ப்பை பெற்ற வருண் சக்கரவர்த்தி தனது இடத்தை நிலையாக பிடிக்கும் அளவிற்கு விக்கெட்களை சூறையாடி இருக்கிறார் என்று தான் சொல்ல வேண்டும்.

7 சர்வதேச போட்டிகளில் 17 விக்கெட்களை வீழ்த்துவது என்பது சாதாரண விஷயம் இல்லை. அதிலும் தென்னாப்பிரிக்க மண்ணில் மட்டும் 12 விக்கெட்களை வீழ்த்தி இருந்தார். அதனால் அவர் 2026 டி20 உலக கோப்பையில் விளையாட அதிக வாய்ப்பு உள்ளது. 2025 ஐபிஎல் தொடரில் அவர் சிறப்பாக செயல்பட வேண்டும். மேலும், இடைப்பட்ட காலத்தில் அவர் காயத்தில் சிக்காமல் இருக்க வேண்டும். இது இரண்டும் நடந்தால் வருண் சக்கரவர்த்தி நிச்சயமாக 2026 டி20 உலக கோப்பையிலும் விளையாடுவார் என எதிர்பார்க்கலாம்.

Story first published: Saturday, December 14, 2024, 21:19 [IST]
Other articles published on Dec 14, 2024
English summary
Year Ender 2024: Varun Chakravarthy comeback stole the hearts of Indian fans
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+