Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

Year Ender 2025: இந்திய டி20 அணியில் அதிக ரன்கள் குவித்த பேட்ஸ்மேன்கள் பட்டியல்

மும்பை: 2025ஆம் ஆண்டு முழுவதும் சர்வதேச டி20 போட்டிகளில் இந்திய அணியின் இளம் வீரர்களின் அதிரடி பேட்டிங் அணுகுமுறையே ஆதிக்கத்திற்கு முக்கிய காரணம். சூர்யகுமார் யாதவ் தலைமையில் இயங்கிய நம்பர் 1 டி20 அணி வெற்றிகரமான ஆண்டைக் கண்டது. கேப்டன் சூர்யகுமார் பேட்டிங்கில் மந்தமாக இருப்பினும், ஆசிய கோப்பை வெற்றி மற்றும் பல இருதரப்புத் தொடர் வெற்றிகள் இந்த ஆண்டின் சிறப்பம்சங்களாகும்.

2025இல் இந்தியாவின் அதிகபட்ச ரன் குவித்த வீரராக அபிஷேக் ஷர்மா திகழ்ந்தார். ஆண்டின் சிறந்த பேட்ஸ்மேன், 21 டி20 போட்டிகளில் 193.46 ஸ்ட்ரைக் ரேட்டுடன் 859 ரன்கள் குவித்தார். ஐந்து அரைசதங்கள், ஒரு சதத்துடன் அதிரடி வெளிப்படுத்தினார். இங்கிலாந்துக்கு எதிரான தொடரில் வான்கடே மைதானத்தில் 54 பந்துகளில் 135 ரன்கள் குவித்து, இந்தியா 4-1 என தொடரை வெல்ல உதவினார்.

திலக் வர்மா 2025இல் இந்தியாவின் இரண்டாவது அதிகபட்ச டி20 ரன் குவிப்பவராக திகழ்ந்தார். 20 போட்டிகளில் 567 ரன்கள், நான்கு அரைசதங்கள் என மிடில் ஆர்டரில் அவரது முக்கியத்துவம் அதிகரித்தது. ஆசிய கோப்பை இறுதிப் போட்டியில் பாகிஸ்தானை வென்ற இந்தியா ஒன்பதாவது பட்டத்தை வெல்ல, 69 ரன்கள் அடித்த அவரது ஆட்டம் முக்கிய காரணமாக அமைந்தது.

வெள்ளைப்பந்து கிரிக்கெட்டுக்குத் திரும்பிய ஆல்ரவுண்டர் ஹர்திக் பாண்டியா, பேட்டிங்கில் குறிப்பிடத்தக்க பங்காற்றினார். 2025இல் 15 டி20 போட்டிகளில் விளையாடி 302 ரன்கள் சேர்த்த ஹர்திக், குறிப்பாக தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான தொடரில், மிடில் ஆர்டருக்கு பலத்தையும் அளித்தார்.

சுப்மன் கில்லுக்கு குறுகிய ஃபார்மேட்டில் கலவையான ஆண்டு என்றாலும், இந்தியாவின் முன்னணி ரன் குவிப்பாளர்களில் ஒருவர். 15 டி20 போட்டிகளில் 291 ரன்கள் எடுத்த அவர், தனது திறனை சில சமயம் வெளிப்படுத்தினார். எனினும் , அவருடைய ஸ்ட்ரைக் ரேட் மற்றும் நல்ல தொடக்கத்தை தருவது கேள்விக்குறியாக மாறியது. இதனால் டி20 உலககோப்பை அணியிலிருந்து நீக்கப்பட்டார்.

டாப் ஐந்து பேட்ஸ்மேன்களில் சஞ்சு சாம்சன், 15 போட்டிகளில் 222 ரன்கள் குவித்து இடம்பெற்றார். பல வீரர்களுக்கு வாய்ப்பளிக்கப்பட்டதால் சாம்சன் இடம் பறிப்போனது. ஒரு அரைசதம் மற்றும் சீசன் முழுவதும் சில அதிரடி ஆட்டங்கள் மூலம் தனது இருப்பைப் பதிவு செய்தார்.

2025இல் இந்தியாவின் வெற்றிப் பயணத்தில் பேட்டிங் பலம் முக்கியப் பங்காற்றியது. நடப்பாண்டில் இந்திய அணி 21 டி20 போட்டிகளில் 16 ஆட்டங்களில் வென்றது. மூன்று தொடர்ச்சியான இருதரப்புத் தொடர்களைக் கைப்பற்றியதுடன், டி20 தொடர்கள் மற்றும் போட்டிகளில் 14 முறை தோல்வியடையாத சாதனையையும் நிலைநிறுத்தியது.

அடுத்த ஆண்டு வரும் ICC டி20 உலகக் கோப்பையைத் தற்காத்துக் கொள்ள இந்தியா தயாராகி வருகிறது. அபிஷேக் ஷர்மா, திலக் வர்மா போன்றோரின் இந்த ஆட்டங்கள், எதிர்கால சவால்களை எதிர்கொள்ள இந்திய பேட்டிங் பிரிவு பலமாக விளங்குகிறது.

Story first published: Wednesday, December 24, 2025, 20:42 [IST]
Other articles published on Dec 24, 2025
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+