Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

”இவரு பெரிய தோனி பாரு” கிண்டல் செய்த ஆகாஷ் சோப்ரா.. ஸ்டம்ப் மைக்கில் பதிலடி கொடுத்த இஷான் கிஷன்!

ட்ரினிடாட்: வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான 3வது ஒருநாள் போட்டியின் போது விக்கெட் கீப்பிங் செய்த இஷான் கிஷன் ஸ்டம்பிங் அப்பீல் செய்த போது, ஆகாஷ் சோப்ரா கிண்டல் செய்தார். அதற்கு உடனடியாக ஸ்டம்ப் மைக்கிலேயே இஷான் கிஷன் பதிலடி கொடுத்த சம்பவம் ரசிகர்களிடையே வரவேற்பை பெற்று வருகிறது.

சென்னை அணியின் கேப்டன் தோனியை போல் சர்வதேச கிரிக்கெட்டில் இன்னொரு விக்கெட் கீப்பர் கிடைக்க வாய்ப்பே இல்லை. அந்த அளவிற்கு மின்னல் வேக ஸ்டம்பிங், டிஆர்எஸ் அப்பீல், பவுலர்களுக்கான ஆலோசனை என்று விக்கெட் கீப்பிங்கின் ராஜா போல் அட்டகாசமாக செயல்படுவார். இதனால் தோனியின் ஸ்டம்பிங்கை பார்ப்பதற்கே தனி ரசிகர் கூட்டம் உண்டு.

You can come from Ranchi But your Name is Not MS Dhoni comments Aakash Chopra on Ishan Kishan

அதேபோல் தோனியை பார்த்து கைகளில் விக்கெட் கீப்பிங் கிளவுஸை அணிந்தவர்கள் ஏராளம். அதில் ஒருவர் தான் இஷான் கிஷன். தோனியின் சொந்த ஊரான ராஞ்சியில் பிறந்து இன்று தோனியின் இடத்திலேயே விளையாடி வருகிறார். அண்மையில் முடிவடைந்த வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான ஒருநாள் தொடரில் ஹாட்ரிக் அரைசதம் விளாசி மிரட்டினார்.

3 போட்டிகளில் 184 ரன்கள் விளாசியதோடு, தொடர் நாயகன் விருதையும் தட்டிச் சென்றார். இந்த நிலையில் வெஸ்ட் இண்டீஸ் தொடரில் நிகழ்ந்த சுவாரஸ்யமான சம்பவம் ரசிகர்களிடையே அதிகமாக பகிரப்பட்டு வருகிறது. 3வது ஒருநாள் போட்டியின் போது வெஸ்ட் இண்டீஸ் அணியின் ஜேசன் ஹோல்டரை ஸ்டம்பிங் செய்து, விக்கெட்டுக்காக அப்பீல் செய்தார்.

You can come from Ranchi But your Name is Not MS Dhoni comments Aakash Chopra on Ishan Kishan

ஆனால் அதில் இஷான் கிஷன் போதுமான வேகத்துடன் செயல்படவில்லை. இதனால் வர்ணனை செய்து கொண்டிருந்த முன்னாள் வீரர் ஆகாஷ் சோப்ரா, நீங்கள் ராஞ்சியில் இருந்து வந்திருக்கலாம். ஆனால் உங்களின் பெயர் தோனி அல்ல என்று குறிப்பிட்டார். இதனை ஸ்டம்ப் மைக் மூலம் கேட்ட இஷான் கிஷன் உடனடியாக, "இருக்கட்டும்.. சரி" என்று பதிலடி கொடுத்தார்.

இந்திய முன்னாள் வீரர் ஆகாஷ் சோப்ரா இந்த வீடியோவை ட்விட்டரில் பகிர்ந்துள்ளார். இதனையடுத்து தோனி மற்றும் சிஎஸ்கே ரசிகர்கள் பலரும் சமூக வலைதளங்களில் பகிர்ந்து வருகின்றனர்.

Story first published: Thursday, August 3, 2023, 17:10 [IST]
Other articles published on Aug 3, 2023
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+