"நீ என்னை முழுமையடைய செய்துவிட்டாய்"... காதலுடன் கசிந்துருகிய நடாஷா
மும்பை : ஆல்-ரவுண்டர் ஹர்திக் பாண்டியா மற்றும் நடிகை நடாஷா ஸ்டான்கோவிக் இருவரும் தங்களது நிச்சயதார்த்தத்தை கடந்த ஜனவரி 1ம் தேதி அறிவித்தனர்.
மேலும் கடந்த மாதத்தில் நடாஷா கர்ப்பம் தரித்திருப்பதையும், தங்களது வீட்டில் புதிய நபரை எதிர்பார்ப்பதாகவும் ஹர்திக் குறிப்பிட்டிருந்தார்.
இந்நிலையில் ஹர்திக் பாண்டியா தன்னை முழுமையடைய செய்துள்ளதாக நடாஷா ஸ்டான்கோவிக் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.

நடாஷாவுடன் பாண்டியா நிச்சயதார்த்தம்
இந்திய கிரிக்கெட் அணியின் ஆல்-ரவுண்டர் ஹர்திக் பாண்டியா தன்னுடைய முதுகுவலி காரணமாக கடந்த நியூசிலாந்துக்கு எதிரான தொடரில் இடம்பெறவில்லை. தற்போது ஐபிஎல் போட்டிகளை எதிர்நோக்கி காத்திருக்கிறார். இதனிடையே, கடந்த ஜனவரி 1ம் தேதி நடிகை நடாஷா ஸ்டான்கோவிக்குடனான தன்னுடைய காதல் மற்றும் நிச்சயதார்த்தத்தை அவர் அறிவித்தார்.

நடாஷா கர்ப்பம்
அனைவருக்கும் பிடித்தமான ஜோடியாக இந்த ஜோடி அமைந்துள்ளது. அடிக்கடி இருவரும் இணைந்து புகைப்படங்களை சமூகவலைதளங்களில் வெளியிட்டு ரசிகர்களை உற்சாகப்படுத்தி வருகின்றனர். கடந்த மாதத்தில் நடாஷா கர்ப்பமாக இருப்பதாக ஹர்திக் அறிவித்திருந்தார். தங்களுடைய வீட்டிற்கு புதிய நபரை எதிர்நோக்கி காத்திருப்பதாக உற்சாகம் தெரிவித்திருந்தார்.

புகைப்படம் வெளியிட்ட நடாஷா
இந்நிலையில் ஹர்திக் பாண்டியா தன்னை முழுமையடைய செய்துள்ளதாக நடாஷா ஸ்டான்கோவிக் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மகிழ்ச்சி தெரிவித்துள்ளார். மேலும் இருவரும் இணைந்திருக்கும் அழகான புகைப்படம் ஒன்றையும் போஸ்ட் செய்துள்ளார். அந்த புகைப்படத்திற்கான ஸ்டைலிஸ்ட்கள் மற்று உடையலங்காரம் செய்தவர்களையும் அவர் அறிமுகப்படுத்தியுள்ளார்.

ஏராளமான ரசிகர்கள் லைக்
இந்த புகைப்படத்திற்கு கே.எல். ராகுல் மற்றும் யுஸ்வேந்திர சஹல் உள்ளிட்ட ஏராளமான ரசிகர்கள் கமெண்ட்களையும் லைக்குகளையும் குவித்துள்ளனர். பாண்டியாவும் லவ் எமோஜியுடன் கமெண்ட் செய்துள்ளார். தொடர்ந்து சமூக வலைதளத்தில் குறிப்பாக இன்ஸ்டாகிராமில் ஹர்திக் பாண்டியா மற்றும் நடாஷா ஸ்டான்கோவிக் பரபரப்புடன் செயல்பட்டு வருகின்றனர்.


Click it and Unblock the Notifications