Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

நாம நெனச்சது நடக்காதபோது தான் தைரியமா இருக்கணும்... பிளமிங் திட்டவட்டம்

துபாய் : நாம் நினைத்தபடி நடக்காதபோதுதான் தைரியமாக விஷயங்களை எதிர்கொள்ள வேண்டும் என்று சிஎஸ்கேவின் தலைமை பயிற்சியாளர் ஸ்டீபன் பிளமிங் தெரிவித்துள்ளார்.

அணியின் வீரர்களுக்கு தேர்விற்கான பாதுகாப்பை வழங்கி அவர்களை பாசிட்டிவ்வாக இருக்க வைக்க வேண்டியது அவசியம் என்றும் அவர் கூறியுள்ளார்.

இதேபோல அவர்கள் சிறப்பாக விளையாடும்போது அவர்களுக்கு ஆதரவாக அவர்களின் பின்னால் இருந்து தட்டிக் கொடுக்க வேண்டியதும் அவசியம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

6வது இடத்தில் சிஎஸ்கே

6வது இடத்தில் சிஎஸ்கே

கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியுடனான நேற்றைய போட்டியில் சிஎஸ்கே சிறப்பான வகையில் 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ஐபிஎல் பட்டியலில் இறுதியில் இருந்த சிஎஸ்கே இதன்மூலம் 6வது இடத்திற்கு முன்னேறியுள்ளது.

சிறப்பான வாட்சன்

சிறப்பான வாட்சன்

அணியின் துவக்க வீரர்கள் ஷேன் வாட்சன் மற்றும் பாப் டூ பிளசிஸ் ஆகியோர் ஆட்டத்தை முடித்து வைத்தனர். முன்னதாக ஷேன் வாட்சன் உள்ளிட்டோரை அணியிலிருந்து நீக்கிவிட்டு அவர்களுக்கு பதிலாக அணியின் முக்கிய தேவையான பௌலரை தேர்ந்தெடுக்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு விமர்சனங்களை அணி சந்தித்தது.

தோனி, பிளமிங் காரணம்

தோனி, பிளமிங் காரணம்

ஆயினும் அணியின் முக்கிய வீரர்கள் மாற்றமின்றி தொடர்ந்தனர். இதற்கு அணியின் கேப்டன் மற்றும் தலைமை பயிற்சியாளர் ஸ்டீபன் பிளமிங்கே காரணம். பல்வேறு நெருக்கடிகளுக்கு மத்தியிலும் அவர்கள் தைரியமாக இருந்தனர். இந்நிலையில் நாம் நினைத்தபடி அணியில் விஷயங்கள் நடக்காதபோது தான் நாம் தைரியமாக இருக்க வேண்டும் என்று ஸ்டீபன் பிளமிங் தெரிவித்துள்ளார்.

வீரர்களுக்கு ஆதரவு

வீரர்களுக்கு ஆதரவு

அணியின் வீரர்களுக்கு தேர்வு குறித்த பாதுகாப்பை நாம் வழங்க வேண்டும் என்றும் அவர்கள் பாசிட்டிவ்வான மனநிலையுடன் இருக்க வேண்டியது அவசியம் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். எந்தெந்த பகுதிகளை நாம் மேம்படுத்த வேண்டுமோ அதை மேம்படுத்த வேண்டும் என்றும் வீரர்கள் சிறப்பாக விளையாடும்போது அவர்களின் பின்னால் இருந்து தட்டிக் கொடுக்க வேண்டும் என்றும் அவர் மேலும் கூறினார்.

Story first published: Monday, October 5, 2020, 11:34 [IST]
Other articles published on Oct 5, 2020
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+