Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

மசாலா கிடைக்கும் என்று நினைக்க வேண்டாம்.. முதல்முறையாக பொங்கி எழுந்த ரஹானே.. கோலி பற்றி பேச்சு!

சென்னை: இந்திய அணியின் கேப்டன்சி குறித்தும், அணி தேர்வு குறித்தும் துணை கேப்டன் ரஹானே பேட்டி அளித்துள்ளார்.

இந்தியா இங்கிலாந்து இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி நாளை நடக்க உள்ளது. முதல் போட்டியில் ஏற்பட்ட தோல்விக்கு பதிலடி கொடுக்க இந்திய அணி தயாராக இருக்கிறது.

இந்த டெஸ்ட் போட்டிக்காக இந்திய அணி தீவிரமாக பயிற்சி செய்து வருகிறது. சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் போட்டி நடக்கிறது. முதல் டெஸ்டில் தோல்வி அடைந்த வெறியில் இந்திய வீரர்கள் இருக்கிறார்கள்.

ரஹானே

ரஹானே

இந்த நிலையில் இந்திய அணியின் கேப்டன்சி குறித்தும், அணி தேர்வு குறித்தும் துணை கேப்டன் ரஹானே பேட்டி அளித்துள்ளார். அதில், நாங்கள் இந்திய மண்ணில் கிட்டத்தட்ட இரண்டு வருடங்களுக்கு பிறகு டெஸ்ட் கிரிக்கெட் விளையாடுகிறோம் . ஒரு குழுவாக நாங்கள் எப்படி விளையாடுகிறோம் என்பதே முக்கியம். தனிப்பட்ட வீரர்கள் முக்கியம் கிடையாது.

பேட்டி

பேட்டி

என்னுடைய கடந்த 10-15 போட்டிகளை பார்த்தால் நான் எவ்வளவு ரன் எடுத்தேன் என்று உங்களுக்கு தெரியும். இந்திய அணியில் நிறைய கலவையான, திறமையான வீரர்கள் இருக்கிறார்கள். அக்சர் பட்டேல் பிட்டானது சந்தோசம் தருகிறது.

என்ன சொன்னார்

என்ன சொன்னார்

இரண்டாவது டெஸ்டில் இந்திய அணியில் யாரெல்லாம் ஆடுவார்கள் என்று சொல்ல நான் விரும்பவில்லை. அணியில் நிறைய நல்ல ஸ்பின் பவுலர்கள் இருக்கிறார்கள். அவர்கள் நன்றாக ஆடுவார்கள் என்று எதிர்பார்க்கிறேன்.

விளக்கம்

விளக்கம்

ரிஷப் பண்ட் நாள் செல்ல செல்ல நன்றாக கீப்பிங் செய்வார் என்று எதிர்பார்க்கிறோம். அவர் நன்றாக பேட்டிங் செய்கிறார். சிறப்பாக ஆடுகிறார்.அவரை ஊக்குவிக்க வேண்டியது எங்கள் கடமை. எல்லோரும் எப்போதும் நன்றாக ஆட முடியாது.

கேப்டன்சி

கேப்டன்சி

கடந்த போட்டியில் வீரர்கள் கடைசி நாள் ஆட்டத்தில் களைப்பாக இருந்தனர். இது எனர்ஜி இல்லாமல் போனதால். விராட் கோலி மீண்டும் கேப்டன் ஆனதால் கிடையாது. விராட் கோலிதான் எப்போதும் எனக்கு கேப்டன்.

கோபம்

கோபம்

கேப்டன்சியை மாற்றுவது குறித்து எந்த விவாதமும் நீங்கள் இங்கு செய்ய முடியாது. ஏதாவது மசாலா கிடைக்கும் என்று எதிர்பார்க்க வேண்டாம். கோலிதான் கேப்டன், இதில் எந்த சர்ச்சையும், விவாதமும் இல்லை, என்று ரஹானே அதிரடியாக குறிப்பிட்டுள்ளார்.

Story first published: Friday, February 12, 2021, 23:58 [IST]
Other articles published on Feb 12, 2021
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+