Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

"எல்லை" மீறிய அன்பு.. கட்டிப்பிடித்த ரசிகை.. வியக்க வைத்த தோனியின் பக்குவமான பண்பு

மும்பை: இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் தோனியை விட ஒருவர் இந்த விஷயத்தை இவ்வளவு இலகுவாக டீல் செய்திருக்க முடியுமா? என்று தெரியவில்லை.

இந்திய கிரிக்கெட் வீரர்களின் மீதான கிரேஸ் என்பது வார்த்தைகளால் விவரிக்க முடியாது. இங்கே கடவுளுக்கு நிகரான அன்பும், ஆராதனையும் கிரிக்கெட்டர்களுக்கும், நடிகர்களுக்கும் கிடைக்கும்.

ஆண்கள், பெண்கள் என்று பாகுபாடின்றி கிரிக்கெட் வீரர்கள் மீது அன்பைப் பொழிவார்கள். தங்களின் 'ஹீரோ' என்று ஃபிக்ஸ் செய்துவிட்டால் போதும்.. அதன்பிறகு அதனை மாற்றவே முடியாது.

 பறக்கும் விசில் சப்தம்

பறக்கும் விசில் சப்தம்

அப்படியொரு கிரேஸ், இந்திய முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனிக்கு இருந்தது. இன்னும் சொல்லப்போனால், சச்சின் டெண்டுல்கர் எனும் மெகா பிராண்டுக்கு பிறகு, அப்படியொரு மாஸ், கிரேஸ்,ரசிகர்களை சம்பாதித்த ஒரே வீரர் என்றால் அது தோனி மட்டும் தான். கங்குலி, சேவாக், டிராவிட், யுவராஜ் என்று எத்தனையோ ஸ்டார்ஸ் இருந்தாலும், சச்சின் அளவுக்கு இணையாக பேரும், புகழும் பெற்றது மகேந்திர சிங் தோனியே. சச்சினுக்கு கூட இந்தியாவின் அனைத்து இடங்களிலும் சென்றால் விசில் சப்தம் பறக்குமோ என்னவோ.. ஆனால், கொல்கத்தா ஈடன் கார்டனில், கொல்கத்தா அணிக்கு எதிராக சென்னை விளையாடும் போது கூட, மைதானம் முழுக்க தோனி, தோனி என்று ஒலிக்க வைக்கும் அளவுக்கு ரசிகர்கள் பலம் பொருந்தியவர் எம்.எஸ்.டி.

 கட்டிப்பிடித்த ரசிகை

கட்டிப்பிடித்த ரசிகை

தோனியின் ஆரம்பகாலத்தில் பெண் ரசிகைகள் மிக அதிகம். அவரது லாங் ஹேருக்கே திரளான ரசிகைகள் இருந்தனர். அப்படியொரு மிகத் தீவிர தோனி ரசிகை ஒருவர், பல வருடங்களுக்கு முன்பு, தோனியை பப்ளிக்காக வைத்து கட்டிப்பிடிக்க, ஒரு நொடி ஆடிப் போய்விட்டனர் பாதுகாவலர்கள். ஆம், தோனி இந்திய கிரிக்கெட்டில் அறிமுகமான காலக்கட்டத்தில், பெண் ரசிகை ஒருவர் தோனியை தீவிரமாக நேசித்து வந்தார். தோனி விளையாடும் போட்டிகளில், ஸ்டேடியத்துக்கு பேனருடன் வந்து தன் அன்பை வெளிப்படுத்துவது, தோனி.. தோனி.. என்று போட்டியின் போது கூச்சலிடுவது என அன்பு பொங்கும் ரசிகையாக இருந்தார்.

 வெளியேறிய தோனி

வெளியேறிய தோனி

தோனியை சந்திக்க பேராவல் கொண்டிருந்த அப்பெண், ஒருமுறை பயிற்சி முடித்து தோனி அணியின் பேருந்தில் ஏறச் செல்ல முயன்ற போது, திரண்டிருந்த கூட்டத்தினரையும் மீறி, தோனியை கட்டிப்பிடித்துவிட்டார். அதிர்ச்சியடைந்த பாதுகாவலர்கள், அப்பெண்ணை கடும் போராட்டத்துக்கு பிறகு தோனியிடம் இருந்து அப்புற்ப்படுத்தினர். ஆனால், அப்பெண்ணின் நிலைமையை உணர்ந்து கொண்ட தோனி, எந்தவித கோபத்தையும், எரிச்சலையும் வெளிக்காட்டாமல், சிரித்துக் கொண்டே வேக வேகமாக பேருந்தில் சென்று ஏறிவிட்டார்.

 பெஸ்ட் கேப்டன்

பெஸ்ட் கேப்டன்

இந்த சம்பவத்திற்கு பிறகு, அப்பெண் மீது தோனி எந்தவித புகாரும் கொடுக்கவில்லை. அது ரசிகர், ரசிகர்களின் அன்பின் மிகுதியில் நடக்கும் சம்பவங்கள் என்று சொல்லிவிட்டு, மிக கேஷுவலாக அந்த சம்பவத்தை கடந்துச் சென்றார். ஒரு நல்ல தலைவன் என்பதற்கு அடையாளம், களத்தில் மட்டும் சிறப்பாக செயல்படுவதோடு நின்றுவிடுவதில்லை. களத்திற்கு வெளியேயும் அவர்களுடைய செயல்பாடு முக்கியம் என்பதற்கு தோனி ஒரு மிகச் சிறந்த உதாரணம் எனலாம்.

Story first published: Monday, July 5, 2021, 21:59 [IST]
Other articles published on Jul 5, 2021
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+