Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

கொஞ்சம், கொஞ்சமாக தோனியாக மாறும் இளம் அதிரடி வீரர்.. வெளியான பயிற்சி வீடியோ..!!

டெல்லி: தென் ஆப்ரிக்க தொடரில் கலக்க, தல தோனி ஸ்டைலில் தீவிர பயிற்சி செய்து வருகிறார் இளம் அதிரடி வீரர் ஹர்திக் பாண்டியா.

இந்தியா, தென் ஆப்ரிக்கா அணிகள் முதலில் 3 டி-20 போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்கிறது. தொடர்ந்து டெஸ்ட் தொடரிலும் இந்தியாவை சந்திக்கிறது.

உலக கோப்பை தொடருக்கு பின்னர் நடைபெற்ற வெஸ்ட் இண்டீஸ் தொடரில் இளம் அதிரடி வீரர் ஹர்திக் பாண்டியா சேர்க்கப்படவில்லை. அவருக்கு முழு ஓய்வு அளிக்கப் பட்டது. தற்போது இந்தியா வரும் தென் ஆப்ரிக்க அணி தொடருக்கான இந்திய அணியை பிசிசிஐ வெளியிட்டது.

அணிக்கு திரும்பினார்

அணிக்கு திரும்பினார்

முன்னாள் கேப்டன் தோனி சேர்க்கப்படவில்லை. ஆனால் ஆல் ரவுண்டர் ஹர்திக் பாண்டியா மீண்டும் அணிக்கு திரும்பி இருக்கிறார். அந்த தொடர் விரைவில் தொடங்க உள்ள நிலையில், அவர் தீவிர பயிற்சியில் ஈடுபட்டார்.

பயிற்சி வீடியோ

பயிற்சி வீடியோ

அந்த பயிற்சி வீடியோவை தமது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார் ஹர்திக் பாண்டியா. அந்த பதிவில், வலைப்பயிற்சி மிக சிறப்பாக இருந்தது. அணி வீரர்களுடன் எப்போது இணைவேன், சந்திப்பேன் என்று காத்துக் கொண்டு இருக்கிறேன் என்று குறிப்பிட்டுள்ளார்.

தோனி ஷாட்

அந்த வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. அதில் பேட்டிங் பயிற்சியில் ஹர்திக் ஈடுபடுகிறார். அப்போது பல ஷாட்டுகளை அவர் அடிக்கிறார். அனைத்து திசைகளிலும் அவர் அடிக்கும் பந்துகள் பறக்கின்றன.

எதிர்பார்ப்பு

எதிர்பார்ப்பு

குறிப்பாக தல தோனியின் பிரத்யே ஷாட்டான ஹெலிகாப்டர் ஷாட்டை அழகாக ஆடுகிறார். விரைவில், களத்தில் இது போன்ற ஷாட்டுகளை பயன்படுத்தி பந்துகளை சிக்சருக்கு பறக்கவிடுவார் என்று எதிர்பார்க்கலாம்.

Story first published: Sunday, September 8, 2019, 10:48 [IST]
Other articles published on Sep 8, 2019
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+