ஒன்றல்ல.. இரண்டல்ல… 5 மணி நேரம்..! வெஸ்ட் இண்டீசை அழ வைத்த விஹாரி..! ஆஹா அற்புதம் போங்க..!!
Recommended Video
கிங்ஸ்டன்: வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான 2வது டெஸ்ட்டில், தமது முதல் சதத்தை விளாசிய விஹாரி, முன்னாள் வீரர்களான டிராவிட், உம்ரிகார் ஆகியோரின் பட்டியலில் இணைந்துள்ளார்.
வெஸ்ட் இண்டீஸ் சென்றுள்ள இந்திய அணி 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்றுள்ளது. முதல் டெஸ்ட் போட்டி, ஆன்டிகுவாவில் நடந்தது. இந்தியா 318 ரன்கள் வித்தியாசத்தில் இமாலய வெற்றி கண்டது.
இரு அணிகள் மோதும் 2வது டெஸ்ட் போட்டி ஜமைக்காவில் நடைபெற்று வருகிறது. முதல் நாள் ஆட்டநேர முடிவில் இந்திய அணி 5 விக்கெட்டுக்கு 264 ரன்கள் எடுத்திருந்தது. விஹாரி (42), பந்த் (27) அவுட்டாகாமல் இருந்தனர்.

2வது நாள் ஆட்டம்
2வது நாள் ஆட்டத்தில் முதல் இன்னிங்சை தொடர்ந்த இந்தியாவுக்கு விஹாரி (111), டெஸ்ட் அரங்கில் முதல் சதத்தை பூர்த்தி செய்து அசத்தினர். இந்திய அணி முதல் இன்னிங்சில் 416 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.

பலனில்லை
போட்டியில் 5 மணி நேரம் களத்தில் இருந்த விஹாரி 225 பந்துகளை எதிர் கொண்டார். அவரை அவுட்டாக்க வெஸ்ட் இண்டீஸ் அணியினர் எவ்வளவோ முயற்சி செய்தனர். ஆனால், எதுவும் பலனளிக்கவில்லை.

7 விக்.
தொடர்ந்து களமிறங்கிய வெஸ்ட் இண்டீஸ், பும்ராவின் புயல் வேகத்தில் சிக்கி சின்னாபின்னமானது. 2வது நாள் ஆட்டத்தில் வெஸ்ட் இண்டீஸ் அணி முதல் இன்னிங்சில் 7 விக்கெட்டுக்கு 87 ரன்கள் எடுத்து 329 ரன்கள் பின் தங்கியுள்ளது.

9வது இந்தியரான விஹாரி
போட்டியில் சதம் விளாசிய விஹாரி, சபினா பார்க் மைதானத்தில் நடந்த டெஸ்டில் சதம் விளாசிய 9வது இந்தியர் என்ற பெருமையை பெற்றார். மற்ற இந்தியர்கள் விவரம்:
பாலி உம்ரிகார் - 117 (1953)
பங்கஜ் ராய் - 150 (1953)
விஜய் மஞ்சரேக்கர் - 118 (1953)
திலீல் சர்தேசாய் (1971)
சித்து - 116 (1989)
டிராவிட் - 112 (2011)
கேஎல் ராகுல் - 158 (2016)
ரகானே - 108 (2016)
விஹாரி - 111 (2019)


Click it and Unblock the Notifications