Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

20 ஓவர் வரைக்கும் தாக்குப் பிடிச்சுட்டோம்னா போதும், பின்னிரலாம்... கவாஸ்கர்

ஜோஹன்னஸ்பர்க்: இந்திய இளம் அணியால், தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் தொடரை வெல்ல முடியும் என்று முன்னாள் கேப்டன் சுனில் கவாஸ்கர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

இந்திய அணி ஒரு நாள் தொடரை மிகவும் மோசமான முறையில் இழந்துள்ள நிலையில் அடுத்து 2 டெஸ்ட் போட்டிகளைக் கொண்ட தொடரில் தென் ஆப்பிரிக்காவுடன் மோதவுள்ளது.

முதல் டெஸ்ட் போட்டி நாளை ஜோஹன்னஸ்பர்க்கில் தொடங்குகிறது. இந்த நிலையில், இந்தியாவால் இந்தத் தொடரை வெல்ல முடியும் என்று கவாஸ்கர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் அளித்துள்ள பேட்டி...

நிச்சயம் வெல்ல முடியும்

நிச்சயம் வெல்ல முடியும்

இந்திய அணியினர் இளம் வீரர்களைக் கொண்டவர்கள். அவர்களால் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக சிறப்பாக ஆட முடியும்.

முதல் டெஸ்ட் தொடர் வெற்றிக்கு வாய்ப்பு

முதல் டெஸ்ட் தொடர் வெற்றிக்கு வாய்ப்பு

தென் ஆப்பிரிக்காவில் இதுவரை டெஸ்ட் தொடரை நாம் வெல்லவில்லை என்ற நிலையை அகற்ற இந்த இளம் அணியினரால் முடியும் என்று நான் நம்புகிறேன்.

முரளி... தவானுக்கு ஒரு அட்வைஸ்

முரளி... தவானுக்கு ஒரு அட்வைஸ்

தொடக்க ஆட்டக்காரர்களான முரளி விஜய்யும், ஷிகர் தவானும் முதல் 20 ஓவர்கள் வரை நிலைத்து ஆட முயற்சிக்க வேண்டும். அப்போதுதான் நடுக்கள வீரர்கள் ரிலாக்ஸ்டாக ஆட முடியும்.

ஸ்டெயின், பிலாண்டரை சமாளிக்க வேண்டும்

ஸ்டெயின், பிலாண்டரை சமாளிக்க வேண்டும்

டேல் ஸ்டெயின், வெர்னான் பிளான்டர் ஆகிய இரு பெரும் வேகப் பந்து வீச்சாளர்களை சமாளித்து நிலைத்து நிற்க வேண்டிய பொறுப்பில் விஜய்யும், தவானும் உள்ளனர். இருவரும் 15 முதல் 20 ஓவர்கள் வரை நிலைத்து நின்றால்தான் பின்னால் வரும் விராத் கோஹ்லி, ரோஹித் சர்மா, டோணி ஆகியோருக்கு உதவிகரமாக இருக்கும்.

ஜாகிர்கான் இருப்பது நல்லது

ஜாகிர்கான் இருப்பது நல்லது

அனுபவம் வாய்ந்த வேகப் பந்து வீச்சாளரான ஜாகிர்கான் இந்திய அணியில் இடம் பெற்றிருப்பது அணிக்கு நன்மை சேர்க்கும் என்று கருதுகிறேன். அவரது வருகை இந்திய அணிக்கு நல்ல ஆசிர்வாதமாகும். அவர் இளம் பந்து வீச்சாளர்களுக்கு நல்ல வழிகாட்டியாகவும் இருப்பார்.

டிப்ஸ் பெற்று ஆடலாம்

டிப்ஸ் பெற்று ஆடலாம்

இளம் வீரர்களான புவனேஸ் குமார், முகம்மது ஷமி, உமேஷ் யாதவ் ஆகியோருக்கு ஜாகிர்கானின் டிப்ஸ்கள் பெரும் உதவியாக இருக்கும். ஜாகிர் கான் விக்கெட் வீழ்த்தாவிட்டாலும் கூட இவர்களுக்கு பேருதவியாக இருப்பார் என்று நம்பலாம் என்றார் அவர்.

சச்சின் இல்லாமல் முதல் டெஸ்ட்

சச்சின் இல்லாமல் முதல் டெஸ்ட்

சச்சின் டெண்டுல்கர் டெஸ்ட் போட்டிகளிலிருந்து ஓய்வு பெற்ற பின்னர் இந்திய அணி விளையாடப் போகும் முதல் டெஸ்ட் போட்டி இது என்பதால் ரசிகர்களும் எதிர்பார்ப்புடன்தான் உள்ளனர்.

4வது இடம் யாருக்கு

4வது இடம் யாருக்கு

சச்சின் டெண்டுல்கர் 4வது இடத்தில் விளையாடி வந்தார். நாளைய டெஸ்ட் போட்டியில் அந்த இடத்தில் அமரப் போவது யார் என்று பார்க்கலாம்.

Story first published: Tuesday, December 17, 2013, 8:25 [IST]
Other articles published on Dec 17, 2013
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+