Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

ஒரு வருடத்திற்கு முன்பே.. கோலி கணித்த 'X-Factor' பவுலர்.. இதோ அடிச்சது 'யோகம்'

மும்பை: இதோ, இங்கிலாந்துக்கு எதிரான மூன்று ஒருநாள் போட்டிகள் கொண்ட இந்திய அணிக்கான ஸ்குவாட் அறிவிக்கப்பட்டுள்ளது. அதில், கேப்டன் விராட், ஒரு வருடத்திற்கு முன்பு கணித்த 'X-Factor' வீரருக்கு முதன் முறையாக வாய்ப்பு கிடைத்துள்ளது.

Recommended Video

அன்றே Kohli இவரை பற்றி பேசியிருக்கிறார்.. India அணிக்குள் வந்த X-Factor வீரர்

பிரசித் கிருஷ்ணா..

ஆம்! 25 வயதே ஆன இந்த கர்நாடக ரைட் ஆர்ம் மீடியம் ஃபாஸ்ட் பவுலர் இங்கிலாந்துக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடருக்கான இந்திய அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.

 அணி தேர்வு

அணி தேர்வு

தற்போது நடைபெற்று வரும் டி20 தொடரில் இந்தியா 2 - 2 என்று மூச்சு வாங்கி, கண்கள் வேர்ப்பதை கூட வெளியே காட்டாமல் மேனேஜ் செய்து வரும் சூழலில், இங்கிலாந்தின் 'ஒயிட்' பால் கிரிக்கெட் அப்ரோச்சை... அதுவும் இந்திய மண்ணில் அவர்கள் வெளிப்படுத்தும் 'அட்டாக்கிங்' ஆட்டத்தை எல்லாம் கணக்கிட்டு, தேர்வுக்குழு ஒருநாள் போட்டிக்கான இந்திய அணியை தேர்வு செய்து வெளியிட்டுள்ளது.

 பிரசித் இன்

பிரசித் இன்

பும்ராவோ, 'சார் ஐ ஆம் எஞ்சாயிங் ஹனிமூன்.. ப்ளீஸ் கிவ் மீ லீவ் ஃபார் சம் மோர் டேஸ்' என்று 'பெர்சனல்' லீவில் இருக்க, புவனேஷ் குமார், 'நம்மூர்' நட்டு, சிராஜ், ஷர்துள் தாகூர் எனும் Pace காம்போவுடன் சேர்க்கப்பட்டுள்ளார் பிரசித் கிருஷ்ணா.

 வாவ் எகானமி

வாவ் எகானமி

'ஃபர்ஸ்ட் கிளாஸ்' கிரிக்கெட்டில் இவருக்கு பெரிய ஆர்வம் இல்லாதது போல் தெரிந்தாலும், 'லிஸ்ட் ஏ' மற்றும் 'டி20' கிரிக்கெட்டில், தேர்வாளர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறார். சுருக்கமாக சொல்லவேண்டுமெனில், இவர் ஒரு white-ball specialist. இதுவரை 48 'லிஸ்ட் ஏ' கிரிக்கெட்டில் விளையாடியுள்ள பிரசித் 81 விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளார். பெஸ்ட் 6/33, எகானாமி 5.17.

 ஐபிஎல் அட்டாக்

ஐபிஎல் அட்டாக்

அதேபோல், டி20 கிரிக்கெட்டில் 40 போட்டிகளில் 33 விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளார். பெஸ்ட் 4/30, எகானாமி 8.49. ஐபிஎல் தொடரில், கொல்கத்தா அணிக்காக 2018 முதல் விளையாடி வரும் பிரசித், தனது பவுலிங் வேரியேஷன் மூலம் முன்னாள் கேப்டன் தோனி முதல் இந்நாள் கேப்டன் கோலி வரை அனைவரது கவனத்தையும் ஈர்த்தார்.

 டி20 உலகக் கோப்பை

டி20 உலகக் கோப்பை

எல்லாம் சரி? இப்போது அவர் யாரும் எதிர்பார்க்காத வகையில் இந்த சீரிஸில் தேர்வு செய்யப்படக் காரணம்? யாரும் எதிர்பார்க்காத வகையில் எல்லாம் கிடையாது. கடந்த ஒரு வருடத்திற்கு முன்பே, கேப்டன் கோலியால் கண்காணிக்கப்பட்டவர் இந்த பிரசித். ஆம்! கடந்த ஆண்டு இந்தியாவில் கொரோனா அலை வீசுவதற்கு முன்பு, பிரசித் கிருஷ்ணா குறித்து பேசிய விராட் கோலி, 'டி20 உலகக் கோப்பையில் இந்திய அணியின் X-Factor' ஆக இருக்க வாய்ப்புள்ளது" என்று கூறியிருந்தார்.

 அதிருப்தியின் உச்சம்

அதிருப்தியின் உச்சம்

அப்போ இங்கிலாந்துக்கு எதிரான டி20 தொடரில் தானே தேர்வு செய்யப்பட்டிருக்க வேண்டும்? கரெக்ட் நல்ல கேள்வி. ஆனால், இவரிடம் உள்ள பெரிய பிரச்சனை 'காயம்'. அடிக்கடி இஞ்சூரி ஆவதை வாடிக்கையாகவே வைத்திருக்கிறார். இதனாலேயே இவர் உள்ளூர் போட்டிகளில் கூட பலவற்றில் விளையாட முடியாத சூழல் ஏற்பட்டது. ஒருக்கட்டத்தில் அதிருப்தியின் உச்சத்தில், 'why me, why now' என்று புலம்பும் அளவுக்கு தொடர் காயங்களால் அவதிப்பட்டார்.

சரி.. ஏன் இப்போது தேர்வு செய்யப்பட்டார் என்ற மேட்டருக்கு வருவோம்..

3/64,

1/22,

1/60,

2/65,

3/46,

4/17

 தேடி வந்த வாய்ப்பு

தேடி வந்த வாய்ப்பு

இவை பிரசித் கடைசியாக விளையாடிய ஆறு 'லிஸ்ட் ஏ' கிரிக்கெட் போட்டியில் அவர் கைப்பற்றிய விக்கெட்டுகளின் லிஸ்ட். மொத்தம் 6 போட்டிகளில் 14 விக்கெட்டுகள். மனிதர் ஃபுல் ஃபார்மில் உள்ளார். இந்த கெயில், யுவராஜ், ரோஹித் போன்றவர்களை ஃபுல் ஃபார்மிற்கு வரவிட்டால், எதிரணி துவம்சமாகிவிடும். அவர்களின் பவுலிங் ஜெராக்ஸ் தான் பிரசித் கிருஷ்ணா. இவரது இந்த அபாரமான ஃபார்ம் இவரை, ப்ளூ ஜெர்ஸி அணியும் வாய்ப்பை வழங்கியுள்ளது. பும்ராவின் Marriage, இவரது கிரிக்கெட் 'Reception'க்கு ஒரு முக்கிய காரணம் என்றால் அது மிகையாகாது.

Story first published: Friday, March 19, 2021, 14:00 [IST]
Other articles published on Mar 19, 2021
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+