Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

தோனி தான் எனது முன்னுதாரணம்…. ஹர்திக் பாண்டியா நெகிழ்ச்சி

மும்பை:மகேந்திர சிங் தோனி தான் தனது முன்னுதாரணம் என்று மும்பை இந்தியன்ஸ் அணியின் நட்சத்திர வீரர் ஹர்திக் பாண்டியா புகழாரம் சூட்டியுள்ளார்.

ஐபிஎல் தொடர் தற்போது இறுதிக் கட்டத்தை எட்டியிருக்கிறது. லீக் ஆட்டங்களின் முடிவில் முதல் 4 இடங்களை பிடித்த மும்பை இந்தியன்ஸ், சென்னை சூப்பர் கிங்ஸ், டெல்லி கேப்பிடல்ஸ், சன் ரைசர்ஸ் ஹைதராபாத் ஆகிய அணிகள் ப்ளே ஆப் சுற்றுக்கு தகுதி பெற்றிருக்கின்றன.

Young player hardik pandya posts emotional message for dhoni

சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்ற முதல் ப்ளே ஆப் சுற்றில் சென்னையை பந்தாடிய மும்பை இந்தியன்ஸ், நேரிடையாக இறுதி போட்டிக்குள் நுழைந்திருக்கிறது. போட்டியில், மும்பை அணியின் சூர்யகுமார் யாதவ் வெற்றிக்கு காரணமாக இருந்தார். அவருக்கு ஆல்ரவுண்டர் ஹர்திக் பாண்டியா துணையாக இருந்தார்.

போட்டிக்கு பின்னர், தோனி உடன் தாம் இணைந்திருக்கும் போட்டோவை ஹர்திக் பாண்டியா தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டிருக்கிறார். அதில், தோனி தான் எனது முன்னுதாரணம், நண்பர், சகோதரர், ஜாம்பவான் என்று நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டிருக்கிறார்.

சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ப்ளே ஆப் சுற்றில் தோல்வி அடைந்திருப்பது அந்த அணியின் ரசிகர்களுக்கு சற்று ஏமாற்றத்தை தந்திருக்கிறது. தற்போது ஹர்திக் பாண்டியாவின் இந்த நெகிழ்ச்சியான பதிவு, சென்னை அணியின் ரசிகர்களுக்கு மன ஆறுதலை தரும் என்று நம்பலாம்.

Story first published: Wednesday, May 8, 2019, 21:09 [IST]
Other articles published on May 8, 2019
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+