Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

அடுத்த சச்சின் இவர்..! 10 ஆண்டுகளுக்கு முன்பே கணிக்கப்பட்ட பிரித்வி ஷா..! இப்போது விளையாட தடை

Recommended Video

Prithivi Shaw suspended : இந்திய இளம் வீரர் ஊக்கமருந்து சோதனையில் சிக்கினார்..விளையாட தடை - வீடியோ

மும்பை: இந்திய கிரிக்கெட் அணியின் இளம் வீரரான பிரித்வி ஷா ஊக்க மருந்து சர்ச்சையில் சிக்கி, விளையாட தடை விதிக்கப்பட்டுள்ளார். 10 ஆண்டுகளுக்கு முன்பே அவரது ஆட்டத் திறனை பார்த்து வியந்தார் சச்சின் டெண்டுல்கர்.

இது தொடர்பாக பிசிசிஐ வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது: பிரித்வி ஷா தடை செய்யப்பட்ட ஊக்கமருந்தை எடுத்துக் கொண்டது தெரியவந்துள்ளது. இந்த தடை செய்யப்பட்ட மருந்து இருமல் மருந்துகளில் பொதுவாக காணப்படுவது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனவே பிரித்வி ஷாவுக்கு வரும் நவம்பர் 15 வரை தடை விதிக்கப்பட்டுள்ளது. அதாவது அவர் கடந்த பிப்ரவரி 22ம் தேதி சையத் முஷ்டாக் அலி போட்டிகளின் போது பரிசோதனைக்காக சிறுநீர் மாதிரி கொடுத்திருந்தார். அதில் தடை செய்யப்பட்ட டெர்புடலின் என்ற ஊக்க மருந்து இருந்திருக்கிறது.

மூச்சுச்குழல் பிரச்னை

மூச்சுச்குழல் பிரச்னை

பிரித்வி ஷா மூச்சுக்குழல் தொடர்பான பிரச்சினைகளுக்காக இருமல் மருந்தை எடுத்து கொண்டார். அதில் டெர்புடலைன் இருந்ததால் கவனக்குறைவாக தெரியாமல் பயன்படுத்தி இருக்கிறார். இது தடை செய்யப்பட்ட ஊக்க மருந்தாகும்.

8 மாதங்களுக்கு தடை

8 மாதங்களுக்கு தடை

இது குறித்து பிரித்வி ஷா கூறும்போது, ஆட்டத் திறனை ஊக்குவிக்கும் ஊக்க மருந்தாக இதை எடுத்து கொள்ளவில்லை, மூச்சுக்குழல் பிரச்சினைக்காக எடுத்து கொண்டேன் என்றார். பிப்ரவரி மாதமே இது தெரியவந்ததால் அப்போதிலிருந்து தடை கணக்கிடப்பட்டு 8 மாத காலம் நவம்பர் 15ம் தேதி வரை நீடிப்பதால் அவர் நவம்பர் 15ம் தேதி வரை தடை செய்யப் பட்டுள்ளார்.

2 பேருக்கு தடை

2 பேருக்கு தடை

இவரோடு மட்டுமல்லாமல் விதர்பா கிரிக்கெட் வீரர் அக்ஷய் துல்லர்வார், ராஜஸ்தான் வீரர் திவ்ய காஜ்ராஜ், ஆகியோரும் ஊக்க மருந்து சோதனையில் தோல்வியடைந்தனர். அவர்களும் பிசிசிஐயினால் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.

டெல்லி அணியில் பிரித்வி

டெல்லி அணியில் பிரித்வி

ஐபிஎல் தொடரில் டெல்லி கேப்பிடல்ஸ் அணிக்காக விளையாடியவர் பிரித்வி ஷா. 17 வயதே ஆன பிரித்வி ஷா, இந்திய அணியில் இடம் பிடித்து அசத்தினார். அவரை அடுத்த சச்சின் டெண்டுல்கர் என்றெல்லாம் ரசிகர்கள் வர்ணித்தனர்.

சச்சின் தந்த டின்னர்

சச்சின் தந்த டின்னர்

அவ்வப்போது நேரம் கிடைக்கும்போது இக்கட்டான சூழலில் எப்படி விளையாட வேண்டும் என்பது உள்ளிட்ட பல ஆலோசனைகளை பிரித்வி ஷாவிற்கு சச்சின் வழங்கி உள்ளார். மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் விளையாட அணியுடன் பிரித்வி ஷா வந்திருந்தார். அவருக்கு சச்சின் டெண்டுல்கர் ஸ்பெஷல் டின்னர் கொடுத்து மகிழ்ந்தார்.

பிரித்வியிடம் பேசினேன்

பிரித்வியிடம் பேசினேன்

10 ஆண்டுகளுக்கு முன்பாக பிரித்வி பேட் செய்வதை பார்க்குமாறு சச்சினிடம் நண்பர்கள் வற்புறுத்தினர். அவர் ஆட்டத்தைப் பார்த்து ஆலோசனை வழங்குமாறு கேட்டனர். நான் பிரித்வியிடம் பேசினேன், அவர் ஆட்டத்தை மேம்படுத்துவது பற்றி ஆலோசனை வழங்கினேன் என்று சச்சின் டெண்டுல்கர் ஒருமுறை தெரிவித்து இருக்கிறார்.

எதிர்கால வீரர்

எதிர்கால வீரர்

பிறகு நண்பர் ஒருவரிடம் பேசிய சச்சின், அந்த சிறுவன் விளையாடுவதை பார்த்தீர்களா? அவர் இந்தியாவின் எதிர்கால வீரர் என்று கூறினார். பல ஆண்டுகளுக்கு முன்பே பிரித்வி ஷாவின் ஆட்டத்திறனை பார்த்து புகழ்ந்திருக்கிறார் சச்சின்.

Story first published: Tuesday, July 30, 2019, 21:44 [IST]
Other articles published on Jul 30, 2019
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+