தோனிக்கு ஆப்பு வைத்த இளம் வீரர்..! குருவையே மிஞ்சிய சிஷ்யன்..! கிரிக்கெட்டில் நடந்த அந்த சம்பவம்
Recommended Video
கிங்ஸ்டன்: குருவையே மிஞ்சும் சிஷ்யன் என்பதற்கு ஈடாக, தோனியின் சாதனையை தகர்த்து, 11 டெஸ்ட் போட்டிகளில் அபார சாதனை படைத்து இருக்கிறார் இளம் வீரர் பன்ட்.
இந்தியா, வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டியில் இந்தியா வெற்றி பெற்றது. 2வது போட்டி ஜமைக்காவில் 30ம் தேதி துவங்கியது. போட்டியின் முதல் இன்னிங்சில் வெளுத்த இந்திய அணி சிறப்பாக ஆடி 416 ரன்கள் குவித்தது.
அதிகபட்சமாக விறாரி 111 ரன்களை குவித்தார். தொடர்ந்து தனது முதல் இன்னிங்சை ஆடிய வெஸ்ட் இண்டீஸ் 117 ரன்களில் ஆட்டமிழந்தது. பின்னர், இந்திய அணி தமது 2வது இன்னிங்சில் 168 ரன்கள் குவித்து, டிக்ளேர் செய்தது. ரகானே அதிக பட்சமாக 64 ரன்களை குவித்தார்.

வெற்றி எளிது
பின்னர் 468 ரன்கள் குவித்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய வெஸ்ட் இண்டீஸ் 3வது நாள் ஆட்ட நேர முடிவில் 45 ரன்களுக்கு 2 விக்கெட்டுகளை இழந்து உள்ளது குறிப்பிடத்தக்கது. இன்னும் 423 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலையில் இந்திய அணி இந்த போட்டியில் வெற்றி பெறுவது உறுதியாகி உள்ளது.

அரிய சாதனை
இந்த போட்டியில் தோனியின் சிஷ்யன் என்று சொல்லப்படுகிற, இளம் வீரரான பன்ட் ஒரு அரிய சாதனை ஒன்றை புரிந்தார். அதாவது தமது 11வது டெஸ்ட் போட்டியில் விளையாடி வரும் பன்ட் விக்கெட் கீப்பராக விரைவில் 50 வீரர்களை ஆட்டமிழக்க செய்த இந்திய விக்கெட் கீப்பர் என்ற சாதனையை படைத்தார்.

15 டெஸ்ட் போட்டிகள்
தோனிக்கு பிறகு இந்திய அணியின் கீப்பராக வாய்ப்பு கிடைத்த பண்ட் தற்போது இந்த சாதனையில் அவரை கடந்துள்ளார். தோனி மொத்தம் 15 டெஸ்ட் போட்டிகளில் 50 பேரை கீப்பிங் மூலம் ஆட்டமிழக்க செய்திருக்கிறார்.

ஒரே போட்டியில் 4 பேர்
தற்போது அந்த சாதனை அவரது சிஷ்யர் பன்ட்டால் முறியடிக்கப் பட்டிருக்கிறது. இந்த போட்டியில் பன்ட் இதுவரை மொத்தம் 4 வீரர்களை அவர் தமது கீப்பிங் மூலம் ஆட்டமிழக்கச் செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications