Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

ஒரே ஆளாய் அணியை தாங்குறான்யா.. பேட்டால் பேசும் ரியான் பராக்.. ரஞ்சி டிராபியில் தெறி சம்பவம்!

கவுகாத்தி : கேரளா அணிக்கு எதிரான ரஞ்சி டிராபி போட்டியில் அசாம் அணியின் இளம் வீரர் ரியான் பராக் 104 பந்துகளில் சதம் விளாசி அசத்தியுள்ளார்.

ஐபிஎல் தொடரில் ராஜஸ்தான் அணிக்காக ஆடி வருபவர் ரியான் பராக். அசாம் மாநிலத்தில் இருந்து ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் விளையாடும் ஒரே வீரர் அவர் தான். இதன் காரணமாக ரியான் பராக் மீதான எதிர்பார்ப்பு உச்சத்தில் இருக்கும். அசாம் மாநிலத்தில் கடந்த ஆண்டு ஐபிஎல் தொடர் நடத்தப்பட்ட போது, அவருக்கு அளிக்கப்பட்ட ஆதரவு பலர் மத்தியிலும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியது.

Young Player Riyan Parag Scored back to back Century for Assam in the Ranji Trophy 2023-24

ஆனால் எதிர்பார்ப்புகளை ரியான் பராக் பூர்த்தி செய்யவில்லை. இதனால் அவர் மீது ரசிகர்கள் அதிக விமர்சனங்களை முன்வைத்தனர். ஆனால் ஐபிஎல் தொடரில் சொதப்பினாலும், உள்ளூர் கிரிக்கெட் தொடரான சையத் முஷ்டாக் அலி மற்றும் விஜய் ஹசாரே உள்ளிட்ட தொடர்களில் விஸ்வரூபம் எடுத்தார். இதன் காரணமாக இந்திய ஏ அணியில் ரியான் பராக்கிற்கு இடம் கிடைத்தது.

இந்த நிலையில் ரஞ்சி டிராபி தொடரில் ரியான் பராக் வெளுத்து கட்டி வருகிறார். ஏற்கனவே சத்தீஸ்கர் அணிக்கு எதிரான போட்டியில் வெறும் 56 பந்துகளில் சதம் விளாசி அசத்தினார். எதிர்முனையில் நின்றிருந்த வீரர்கள் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து வெளியேற, மறுமுனையில் ஒற்றை ஆளாக நின்று ரியான் பராக் பெரும் போராட்டத்தை வெளிப்படுத்தினார்.

சிறப்பாக ஆடிய அவர் 87 பந்துகளில் 12 சிக்ஸ், 11 ஃபோர்ஸ் உட்பட 155 ரன்களை விளாசினார். தற்போது அசாம் அணி தனது 2வது போட்டியில் கேரளா அணியை எதிர்த்து விளையாடி வருகிறது. இந்த போட்டியில் முதல் பேட்டிங் ஆடிய கேரளா அணி சச்சின் பேபியின் அபார சதத்தால் 419 ரன்களை குவித்தது. இதையடுத்து களமிறங்கிய அசாம் அணி 25 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.

அப்போது களமிறங்கிய ரியான் பராக் பெரும்பாலும் ஸ்ட்ரைக்கை தன்னிடமே வைத்து கொண்டார். அதிரடியாக ஆடிய அவர் 104 பந்துகளில் சதம் விளாசி அசத்தினார். தொடர்ந்து 125 பந்துகளில் 3 சிக்ஸ், 16 ஃபோர்ஸ் உட்பட 116 ரன்களை எடுத்து ஆட்டமிழந்தார். இதனால் 3வது நாள் ஆட்ட நேர முடிவில் அசாம் அணி 7 விக்கெட்டுகள் இழப்பிற்கு 231 ரன்கள் சேர்த்துள்ளது. அடுத்தடுத்து போட்டிகளில் ரியான் பராக் சதம் விளாசி இருப்பது பல்வேறு தரப்பினர் மத்தியிலும் பாராட்டுகளை பெற்றுள்ளது.

Story first published: Sunday, January 14, 2024, 17:48 [IST]
Other articles published on Jan 14, 2024
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+