Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

அதுக்குள்ள யாருடா இந்த வேலைய பார்த்தது.. பாகிஸ்தான் சீனியர் வீரர் யூனிஸ்கான் அதிர்ச்சி!

சிட்னி: பார்மில் இல்லாமல் அவஸ்தைப்பட்டுவரும் பாகிஸ்தான் சீனியர் பேட்ஸ்மேன் யூனிஸ்கான் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறப்போவதாக ஒரு தகவல் பரவியது. அவரது அதிகாரப்பூர்வ, டிவிட்டர் தளத்தில் இருந்து டிவிட் செய்யப்பட்டதை போல ஒரு டிவிட் வெளியாகியிருந்ததால் சக வீரர்கள் அதிர்ச்சியடைந்தனர். ஆனால் தனக்கு டிவிட்டர் அக்கவுண்டே இல்லை என்று கைவிரித்துள்ளார் யூனிஸ்கான்.

இந்தியாவுக்கு எதிராக ஓப்பனிங்கிலும், வெஸ்ட் இன்டீசுக்கு எதிராக ஒன்-டவுனிலும் களமிறங்கினார் பாகிஸ்தானின் சீனியர் வீரர் யூனிஸ்கான். இரு போட்டிகளிலுமே சொதப்பலாக அவுட் ஆகி ஒற்றையிலக்கத்தில் நடையை கட்டினார்.

சொதப்பல்

சொதப்பல்

இந்தியாவுக்கு எதிராக 6 ரன்களும், மே.இ.தீவுகளுக்கு எதிராக டக் அவுட்டுமாகி சொதப்பினார் யூனிஸ்கான்.

டிவிட்டரில் பரபரப்பு

டிவிட்டரில் பரபரப்பு

இந்நிலையில், உலக கோப்பை தொடருடன் ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வுபெறப் போவதாகவும், அதன்பிறகு, டெஸ்ட் போட்டிகளில் மட்டுமே கவனம் செலுத்த போவதாகவும் யூனிஸ்கான் டிவிட்டர் அக்கவுண்ட் என்ற பெயரிலான டிவிட்டர் தளத்தில் இருந்து ஒரு டிவிட் வெளியாகிருந்தது. இது பாகிஸ்தான் சக வீரர்களிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது.

அதுக்குள்ள யார்டா இந்த வேலை பார்த்தது..

அதுக்குள்ள யார்டா இந்த வேலை பார்த்தது..

இந்நிலையில், தனக்கு டிவிட்டர் கணக்கே கிடையாது என்று கூறியுள்ளார் யூனிஸ்கான். யாரோ விஷமிகள் பரப்பிய வதந்திதான், அந்த செய்தி என்றும், தனக்கு டிவிட்டரில் அக்கவுண்ட்டே இல்லை என்றும் அவர் கூறியுள்ளார்.

நான் செய்ய வேண்டியது எவ்வளவோ இருக்கு

நான் செய்ய வேண்டியது எவ்வளவோ இருக்கு

நான் எனது பேட்டிங் திறனை மேம்படுத்தி அணிக்கு உதவ முயற்சிகள் எடுத்து வருகிறேன். ஆனால் யாரோ இதுபோல வதந்தியை பரப்பியுள்ளனர் என்று யூனிஸ்கான் கூறியுள்ளார்.

முன்னாள் வீரர்கள் விளாசல்

முன்னாள் வீரர்கள் விளாசல்

யூனிஸ்கானின் பார்ம் குறித்து முன்னாள் வீரர்கள் ஜாவித் மியாண்டட் உள்ளிட்ட பலரும் கடுமையாக விமர்சனங்களை செய்துவரும் நிலையில், வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவது போல டிவிட்டரில் யாரோ ஒரு விஷமி இந்த வேலையை பார்த்துள்ளார்.

Story first published: Wednesday, February 25, 2015, 11:29 [IST]
Other articles published on Feb 25, 2015
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+