Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

உலக கோப்பை காலிறுதி சர்ச்சைக்கு பின் முதல்முறை.. வரிப் புலி-வங்கப்புலி நாளை மோதல்!

டாக்கா: இந்தியா-வங்கதேசம் அணிகள் உலக கோப்பை காலிறுதி போட்டியில் மோதிய பிறகு, தற்போது மீண்டும் ஒருநாள் போட்டியொன்றில் மோதுகின்றன. நாளை முதல் ஒருநாள் போட்டி தொடங்குகிறது.

உலக கோப்பை போட்டியில் இந்திய வீரர் ரோகித் ஷர்மாவுக்கு களநடுவர் அவுட் தராமல் அந்த பந்தை சர்ச்சைக்குறிய வகையில் நோ-பால் என அறிவித்ததாக புகார் எழுந்திருந்தது.

3 போட்டிகள்

3 போட்டிகள்

இந்நிலையில், இவ்விரு அணிகளுக்கு நடுவே தற்போது 3 போட்டிகள் கொண்ட தொடர் நடக்கிறது. முதல் ஆட்டம் ஜூலை 18ம் தேதி வியாழக்கிழமையும், 2வது போட்டி 21ம் தேதி ஞாயிற்றுக்கிழமையும், மூன்றாவது போட்டி 24ம் தேதி புதன்கிழமையும் நடைபெற உள்ளது.

அனைத்தும் டாக்காவில்

அனைத்தும் டாக்காவில்

வங்கதேசம்-இந்திய போட்டிகள் மூன்றுமே, ஷீர்-இ-பங்களா தேசிய கிரிக்கெட் ஸ்டேடியத்தில் நடக்கிறது. இந்த ஸ்டேடியம், டாக்காவின், மிர்பூர் பகுதியிலுள்ளது. டாக்காவில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து மழை பெய்துவரும் நிலையிலும், இடம் மாற்றம் இல்லை.

இந்தியா ஆதிக்கம்

இந்தியா ஆதிக்கம்

இவ்விரு அணிகளும் மொத்தம் 29 முறை மோதியுள்ளன. அதில் 25 போட்டிகளில் இந்தியா வெற்றி வாகை சூடியுள்ளது. 3 போட்டிகளில் மட்டும் வங்கதேசம் வெற்றி பெற்றுள்ளது. ஒரு போட்டி முடிவு தெரியவில்லை. ஆனால், வங்கதேசம் தற்போது உலக கோப்பை காலிறுதி வரை முன்னேறிய அணியாக மேம்பட்டுள்ளது.

பகல்-இரவு ஆட்டம்

பகல்-இரவு ஆட்டம்

போட்டிகள் அனைத்துமே இந்திய நேரப்படி மதியம் 2.30 மணிக்கு அதாவது வங்கதேச நேரப்படி 3 மணிக்கு தொடங்கி பகல்-இரவு ஆட்டமாக நடைபெற உள்ளது. அனைத்து போட்டிகளும், ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சி சேனலில் நேரடியாக ஒளிபரப்பு செய்யப்பட உள்ளது.

இந்தியா டாப்

இந்தியா டாப்

ஐசிசி ஒருநாள் கிரிக்கெட் தரவரிசையில், உலக கோப்பை அரையிறுதி வரை முன்னேறிய இந்திய அணி 2வது இடத்தில் கம்பீரமாக உள்ளது. வங்கதேசம் 8வது இடத்தில் உள்ளது. டெஸ்ட் போட்டி மழையால் பாதிக்கப்பட்டு டிராவானதால், இந்திய அணி டெஸ்ட் தரவரிசையில் 4வது இடத்துக்கு இறங்கியது நினைவிருக்கலாம்.

கவனிக்க வேண்டியவர்கள்

கவனிக்க வேண்டியவர்கள்

இந்திய அணியை பொறுத்தளவில் டோணி, கோஹ்லி, தவான், ரெய்னா, அஸ்வின், புவனேஸ்வர் குமார் ஆகியோர் முக்கிய வீரர்களாகும். வங்கதேசத்தை பொறுத்தளவில் மஷ்ரபே மொர்டசா, தமிம் இக்பால், ஷகிப் அல் ஹசன், முஷ்பிகுர் ரஹிம், தஸ்கின் அகமது ஆகியோர் கவனிக்க வேண்டிய வீரர்கள்.

ரிசர்வ்டே விதிமுறை

ரிசர்வ்டே விதிமுறை

போட்டி நடைபெறும் 3 நாட்களிலுமே டாக்காவில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவே வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மழையால் ஆட்டம் பாதிக்கப்பட்டால் ரிசர்வ்டே எனப்படும் மறுநாள் ஆட்டம் நடைபெறும். ஆனால், 2வது அணி 20 ஓவர்களை தாண்டி பேட் செய்துவிட்டால், அன்றைய தினமே ரிசல்ட் அளிக்கப்படும். அது டக்வொர்த் லீவிஸ் முறையிலான ரிசல்ட்டாகவும் இருக்கலாம்.

வங்கதேச அணி

வங்கதேச அணி

மஷ்ரபே மொர்டசா (கேப்டன்), ஷகிப் அல் ஹசன், தமிம் இக்பால், சவும்யா சர்கார், மொமினுல் ஹக், முஷ்பிகுர் ரஹிம், ஷபிர் ரஹ்மான், நாசிர் ஹொசைன், அராபத் சன்னி, டஸ்கின் அகமது, ருபேல் ஹொசைன், ரோனி தலுக்டார், முஷ்தாபிகுர் ரகுமாந், லிட்டன் குமார் தாஸ்.

இந்திய அணி

இந்திய அணி

டோணி (கேப்டன்), ரோகித்ஷர்மா, அஜிங்ய ரஹானே, ஷிகர் தவான், விராட் கோஹ்லி, சுரேஷ் ரெய்னா, அம்பத்தி ராயுடு, அஸ்வின், ரவீந்திர ஜடேஜா, அக்சர் பட்டேல், புவனேஸ்வர் குமார், உமேஷ் யாதவ், மோகித் ஷர்மா, ஸ்டூவர்ட் பின்னி, தவால் குல்கர்ணி.

நடுவர்கள்

நடுவர்கள்

ஆஸ்திரேலியாவின் ராட் டக்கர் மற்றும் வங்கதேச நடுவர்களில் யாராவது ஒருவர் களநடுவராக தேர்ந்தெடுக்கப்படுவார்கள். போட்டி ரெப்ஃரியாக ஜிம்பாப்வேயின் ஆன்டி பைக்ராப்ட் செயல்படுவார். மழை பாதிப்பு இல்லாவிட்டால், இவ்விரு அணிகள் நடுவேயான போட்டியில் அனல் பறக்கும் என்பதில் சந்தேகமேயில்லை.

Story first published: Wednesday, June 17, 2015, 17:20 [IST]
Other articles published on Jun 17, 2015
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+