Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

டிவில்லியர்சுக்கு முதல் ரேங்க், கோஹ்லிக்கு மூன்றாவது ரேங்க்! இந்திய-தென் ஆப்பிரிக்க தொடர் ஒரு லுக்

டெல்லி: இந்தியா வந்துள்ள தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் அணி, 3 டி20, ஐந்து ஒருநாள் போட்டிகள் மற்றும் 4 டெஸ்ட் போட்டிகள் கொண்ட நீண்ட தொடரில் ஆட உள்ளது. இத்தொடருக்கு, மகாத்மா காந்தி-நெல்சன் மண்டேலா தொடர் என பெயர் சூட்டப்பட்டுள்ளது. அனைத்து போட்டிகளும் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனலில் நேரடி ஒளிபரப்பு செய்யப்படுகிறது. அக். 2ம் தேதி டி20 போட்டியுடன் தொடர் ஆரம்பிக்கிறது.

தொடருக்கு முன்பாக இரு அணிகள் மற்றும் அந்த வீரர்களின் நிலைமை குறித்த ஒரு கைடு இதோ:

அணிகள் நிலவரம்

அணிகள் நிலவரம்

ஐசிசி ரேங்க் அடிப்படையில் ஒரு பார்வை: டெஸ்ட் போட்டிகளில் தென் ஆப்பிரிக்கா- நம்பர்1 ரேங்க். இந்தியா- 5வது ரேங்க். ஒரு நாள் போட்டிகளில் இந்தியாவுக்கு 2வது இடம். தென் ஆப்பிரிக்காவுக்கு 3வது இடம். டி20யில் இந்தியாவுக்கு 4வது இடம். தென் ஆப்பிரிக்காவுக்கு 6வது இடம்.

டிவில்லியர்ஸ் vs கோஹ்லி

டிவில்லியர்ஸ் vs கோஹ்லி

ஐசிசியில் டாப் ரேங்கிலுள்ள வீரர்கள்: டெஸ்ட் போட்டிகளில் தென் ஆப்பிரிக்காவின் டி வில்லியர்ஸ் 2வது ரேங்க் வகிக்கிறார். விராட் கோஹ்லிக்கு 11வது இடம். ஒரு நாள் போட்டிகளில் டிவில்லியர்ஸ் முதல் ரேங்கிலுள்ளார். கோஹ்லி மூன்றாவது ரேங்கிலுள்ளார். டி20யில், கோஹ்லி முதலிடத்திலும், அந்த தரப்பில் அதிகபட்சமாக, டுபிளசிஸ் 4வது இடத்திலுமுள்ளனர்.

சச்சின், கல்லீஸ்

சச்சின், கல்லீஸ்

இவ்விரு அணிகள் நடுவேயான டெஸ்ட் போட்டிகளில், இந்தியாவின் சச்சின் டெண்டுல்கர் 1741 ரன்களுடன் அதிக ரன் குவித்த வீரராக முதலிடத்திலுள்ளார். 25 போட்டிகளில் இந்த ரன்களை எட்டினார். தென் ஆப்பிரிக்காவின் ஜாக் காலீஸ் 18 போட்டிகளில், 1734 ரன்கள் எடுத்துள்ளார். இருவருமே தலா 7 சதங்கள் விளாசியுள்ளனர்.

கும்ப்ளே டாப்

கும்ப்ளே டாப்

இவ்விரு அணிகளில், டெஸ்ட் போட்டிகளில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய பெருமை இந்தியாவின் அனில் கும்ப்ளேயை சேரும். 21 போட்டிகளில் 84 விக்கெட்டுகளை வீழ்த்தினார். தென் ஆப்பிரிக்க தரப்பில், டேல் ஸ்டெயின் 63 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். 12 போட்டிகளில் அவர் இத்தனை விக்கெட்டுகளை சாய்த்துள்ளார்.

டெஸ்ட் கொஞ்சம் கஷ்டம்

டெஸ்ட் கொஞ்சம் கஷ்டம்

இவ்விரு அணிகளும், 29 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ளன. அதில் தென் ஆப்பிரிக்கா 13 போட்டிகளிலும், இந்தியா 7 போட்டிகளிலும் வெற்றி பெற்றுள்ளது. 9 போட்டிகள் டிராவில் முடிந்துள்ளன.

ஒன்டே கிங்

ஒன்டே கிங்

ஒருநாள் போட்டிகளை பொருத்தளவில் 57 போட்டிகளில் 2001 ரன்களுடன் சச்சின் முதலிடத்திலுள்ளார். 37 போட்டிகளில் 1535 ரன்கள் குவித்த ஜாக் காலீஸ் 2வது இடத்திலுள்ளார். சச்சின் 5 சதங்களும், காலீஸ், 2 சதங்களும் பதிவு செய்துள்ளனர்.

பொல்லாக், கும்ப்ளே

பொல்லாக், கும்ப்ளே

ஒருநாள் போட்டிகளில், அதிக விக்கெட்டுகள் வீழ்த்தியவர்கள் பட்டியலில் தென் ஆப்பிரிக்காவின் ஷான் பொல்லாக் 48 விக்கெட்டுகளுடன் முதலிடத்திலும், கும்ப்ளே 46 விக்கெட்டுகளுடன் 2வது இடத்திலும் உள்ளனர். இருவரும் முறையே, 33 மற்றும் 40 போட்டிகளில் இந்த விக்கெட்டுகளை சாய்த்திருந்தனர்.

ரெய்னா டாப்

ரெய்னா டாப்

டி20 ஆட்டங்களை பொறுத்தளவில், இந்தியாவின் சுரேஷ் ரெய்னா 7 ஆட்டங்களில் ஒரு செஞ்சுரி உட்பட மொத்தம் 214 ரன்கள் குவித்துள்ளார். அந்த பக்கம், காலீஸ் 6 ஆட்டங்களில் 140 ரன்கள் எடுத்ததே அதிகபட்சமாகும். ஒரு போட்டியில் காலீஸ் அடித்த அதிகபட்ச ரன்கள் 53.

அதிக விக்கெட்

அதிக விக்கெட்

3 டி20 போட்டிகளில் 6 விக்கெட்டுகளை வீழ்த்தி, அதிக விக்கெட்டுகள் வீழ்த்திய வீரராக ஜாகீர் கான் விளங்குகிறார். அஸ்வின் 4 பந்தையங்களில் 6 விக்கெட்டுகளை சாய்த்துள்ளார். தென் ஆப்பிரிக்க வீரர் ஜான் போதா, 4 போட்டிகளில் 4 விக்கெட்டுகளை சாய்த்துள்ளார்.

20 ஓவர் ராஜா

20 ஓவர் ராஜா

இவ்விரு அணிகள் மோதிய 8, டி20 போட்டிகளில், 6ல் இந்தியாவும், 2ல் தென் ஆப்பிரிக்காவும் வெற்றி பெற்றுள்ளன. தற்போது நடைபெற உள்ளதுதான், இவ்விரு அணிகள் நடுவேயான முதலாவது, 3 போட்டிகள் கொண்ட டி20 தொடர் என்பது இந்நேரத்தில் நினைவுகொள்ள தக்கது.

சச்சின், டோணி

சச்சின், டோணி

இரு அணிகள் சந்தித்த போட்டிகளில், அதிகம் களம் கண்ட வீரர் என்ற பெருமை டெஸ்ட், ஒருநாள் மற்றும் டி20 ஆட்டங்களில் இந்திய வீரர்களையே சேர்கிறது. 25 டெஸ்ட் மற்றும் 57 ஒருநாள் போட்டிகளில் சச்சின் களமிறங்கியுள்ளார். 8 டி20 போட்டிகளில் டோணி களம் கண்டுள்ளார். தென் ஆப்பிரிக்காவில் எந்த வீரரும், இத்தனை அதிக போட்டிகளை இந்தியாவுக்கு எதிராக ஆடவில்லை.

டி20 போட்டிகள் ஒரு பார்வை

டி20 போட்டிகள் ஒரு பார்வை

அக்டோபர் 2ம்தேதி - முதல் டி20 போட்டி- இடம், தர்மசாலா. அக்.5ம் தேதி- 2வது டி20 ஆட்டம்- இடம், கட்டாக். அக். 8ம் தேதி - 3வது டி20 - இடம், கொல்கத்தா. இந்த மூன்று டி20 போட்டிகளுமே, இந்திய நேரப்படி இரவு 7 மணிக்கு தொடங்குகின்றன.

ஒருநாள் போட்டிகள்

ஒருநாள் போட்டிகள்

*அக்.11- முதல் ஒருநாள் போட்டி (ஞாயிறு). இடம்- கான்பூர்- நேரம்- காலை 9 மணி.

*அக். 14- இரண்டாவது ஒருநாள் போட்டி (புதன்). இடம்- இந்தூர்- நேரம்- பகல் 1.30 மணி.

*அக். 18- 3வது ஒருநாள் போட்டி (ஞாயிறு)- இடம்- ராஜ்கோட்- நேரம்- பகல் 1.30 மணி.

*அக். 22- 4வது ஒருநாள் போட்டி (வியாழன்)- இடம்- சென்னை- நேரம்- மதியம் 1.30 மணி.

*அக். 25- 5வது ஒருநாள் போட்டி (ஞாயிறு)- இடம்- மும்பை- நேரம்- மதியம் 1.30 மணி.

டெஸ்ட் போட்டிகள்

டெஸ்ட் போட்டிகள்

நவம்பர் 5 முதல் 9ம் தேதிவரை முதல் டெஸ்ட் மொகாலியில் நடக்கிறது. நவ.14 முதல் 18ம் தேதி வரையில், 2வது டெஸ்ட் போட்டி பெங்களூருவில் நடைபெறுகிறது. நவ. 25 முதல் 29 வரை, 3வது டெஸ்ட் போட்டி நாக்பூரில் நடைபெறுகிறது. டிசம்பர் 3 முதல் 7ம் தேதிவரை 4வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி டெல்லியில் நடைபெறுகிறது. டெஸ்ட் போட்டிகள் அனைத்தும் காலை 9.30 மணிக்கு தொடங்கி நடைபெறும்.

Story first published: Wednesday, September 30, 2015, 10:31 [IST]
Other articles published on Sep 30, 2015
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+