பாக். வீரர் யூசுப் புதிய உலக சாதனை
கராச்சி:டெஸ்ட் போட்டிகளில் ஒரே ஆண்டில் அதிக ரன்கள் எடுத்த வீரர் என்ற புதிய சாதனையை பாகிஸ்தான் கிரிக்கெட்வீரர் முகம்மது யூசுப் படைத்துள்ளார்.
டெஸ்ட் போட்டிகளில் ஒரே ஆண்டில் அதிக ரன்கள் எடுத்த வீரர் என்ற பெருமையை மேற்கு இந்திய அணிகள்வீரர் விவியன் ரிச்சர்ட்ஸ்தான் இருபது ஆண்டுகளாக வைத்திருந்தார். கடந்த 1976ம் ஆண்டு 11 டெஸ்ட்போட்டிகளில் விளையாடி 1710 ரன்களை குவித்திருந்தார் ரிச்சர்ட்ஸ்.
![]() |
இந்த சாதனை இத்தனை காலமாக முறியடிக்கப்படாமல் இருந்தது. தற்போது அச்சாதனையை முறியடித்துள்ளார்முகம்மது யூசுப். மேற்கு இந்திய அணிகளுக்கு எதிரான 4வது டெஸ்ட் போட்டி தற்போது கராச்சியில் நடந்துவருகிறது.
இன்று நடந்த 3வது நாள் ஆட்டத்தின்போதுதான் யூசுப் இந்த சாதனையை படைத்தார். 2வது இன்னிங்ஸில், 47ரன்களை தொட்டபோது ரிச்சர்ட்ஸின் சாதனையைக் கடந்து புதிய சாதனை படைத்தார் யூசுப்.
இது யூசுப்புக்கு 73வது டெஸ்ட் போட்டியாகும். இந்தப் போட்டியின் முதல் நாள் ஆட்டத்தின்போது இன்னொருசாதனையையும் படைத்திருந்தார் யூசுப். ஒரே ஆண்டில் அதிக டெஸ்ட் செஞ்சுரிகளை போட்ட சாதனைதான் அது.அது யூசுப்புக்கு எட்டாவது செஞ்சுரி ஆகும்.
இதற்கு முன் அதிக செஞ்சுரிகளை போட்டவர்கள் என்ற பெருமை ரிச்சர்ட்ஸ் மற்றும் இலங்கையின் அரவிந்தடிசில்வாவிடம் இருந்தது.
Story first published: Wednesday, December 7, 2011, 17:46 [IST]
Other articles published on Dec 7, 2011


Click it and Unblock the Notifications
