Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

4வது யூத் ஒருநாள் போட்டி.. இலங்கை அணியை வென்றது இந்தியா யு19

கொழும்பு : இந்திய அணியின் 19 வயதிற்கு உட்பட்ட கிரிக்கெட் அணி இலங்கையில் சுற்றுப்பயணம் செய்து விளையடை வருகிறது. இரு அணிகளிக்கிடையேயான போட்டிகள் யூத் கிரிக்கெட் என்ற பெயரில் அழைக்கப்படுகிறது.

முன்னதாக நடந்த நான்கு நாட்கள் கொண்ட டெஸ்ட் தொடரில் இந்திய அணி வெற்றி பெற்றது.

youth-cricket 09-08-2018

அதனை தொடர்ந்து நடைபெற்று வரும் ஒருநாள் தொடரில் முதல் மூன்று போட்டிகளில் இலங்கை 2 வெற்றிகளையும் இந்திய அணி ஒரு வெற்றியும் பெற்று இருந்தன.

இந்நிலையில் நான்காவது யூத் கிரிக்கெட் போட்டி நேற்று மொராடுவா மைதானத்தில் நடைபெற்றது. தொடரை வெல்ல இலங்கை அணியும், இப்போட்டியில் வென்று 5 போட்டிகள் கொண்ட தொடரை சமன் செய்ய இந்திய அணியும் களத்தில் இறங்கியது.

முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 50 ஓவர்களில் 6 விக்கெட் இழப்பிற்கு 278 ரன்களை குவித்தது. இந்திய அணியில் படிக்கல் ,ஜூயட்,ரத்தோட் ஆகியோர் சிறப்பாக விளையாடி அரைசதம் அடித்தனர். படிக்கல் அதிகபட்சமாக 71 ரன்களை எடுத்தார்.

அதன் பின்னர் களமிறங்கிய இலங்கை அணி 37.2 ஓவர்களில் 143 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இந்திய அணியின் படோனி,தியாகி தலா 3 விக்கெட்களை வீழ்த்தினர்.

இதன் மூலம் 5 போட்டிகள் கொண்ட யூத் ஒருநாள் தொடரில் இரு அணிகளும் தலா 2 வெற்றிகளை பெற்றுள்ளன.





Story first published: Thursday, August 9, 2018, 11:03 [IST]
Other articles published on Aug 9, 2018
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+