யூத் கிரிக்கெட் - ஒருநாள் தொடரையும் வென்றது இந்திய யு19 அணி
கொழும்பு: இந்திய, இலங்கை யு19 அணிகளுக்கு இடையிலான ஒரு நாள் தொடரை இந்தியா வென்றுள்ளது.
இந்திய யு 19 அணி இலங்கையில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. முதலில் நடைபெற்ற 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை வென்றது. அதன் பின்னர் 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் போட்டிகள் நடைபெற்றது. முதல் நான்கு போட்டிகளில் இரு அணிகளும் தலா இரண்டு வெற்றிகளை பெற்றிருந்தது.

இந்நிலையில் தொடரின் முடிவை நிர்ணயிக்கும் கடைசி போட்டி இன்று மொராடுவா மைதானத்தில் நடைபெற்றது. முதலில் பேட்டிங் செய்த இலங்கை அணி 50 ஓவர்களில் 9 விக்கெட் இழப்பிற்கு 212 ரன்களை எடுத்தது. நிஷன் மடுஷ்கா சிறப்பாக விளையாடி 95 ரன்களை எடுத்தார். இந்திய அணியின் மோஹித் ஜங்கிரா 2 விக்கெட்களை வீழ்த்தினார்.
அதனை தொடர்ந்து ஆடிய இந்திய அணி 42.4 ஓவர்களில் 214 ரன்களை எடுத்து வெற்றி பெற்றது. இந்திய அணியின் யாக்ஷவி ஜெய்ஸ்வால் அபாரமாக ஆடி ஆட்டமிழக்காமல் 114 ரன்களை எடுத்தார்.
இதன் மூலம் 5 போட்டிகள் கொண்ட தொடரை 3-2 என்ற கணக்கில் இந்திய யு19 அணி வெற்றி பெற்றது.
Story first published: Saturday, August 11, 2018, 10:29 [IST]
Other articles published on Aug 11, 2018


Click it and Unblock the Notifications