Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

ரசிகர் கன்னத்தில் யூசுப் பதான் அறைந்த சம்பவம்: விளக்கம் கேட்கிறது பிசிசிஐ

அகமதாபாத்: ரசிகரை அடித்ததாக கிரிக்கெட் வீரர் யூசுப் பதானுக்கு எதிராக வெடித்த சர்ச்சை குறித்து இந்திய கிரிக்கெட் வாரியம் விளக்கம் கேட்டுள்ளது.

உள்நாட்டு கிரிக்கெட் டெஸ்ட் போட்டித் தொடரான ரஞ்சி தற்போது நடந்து வருகிறது. இதில் இரு தினங்கள் முன்பு குஜராத்தின் வதோதராவில் வைத்து நடந்த போட்டியில் ஜம்மு காஷ்மீர் மற்றும் வதோதரா அணிகள் மோதின. வதோதரா சார்பில் யூசுப் பதானும், அப்பட்டி ராயுடுவும் பேட்டிங் செய்தபோது பார்வையாளர் வரிசையில் இருந்த ரசிகர் ஒருவர் பேட்ஸ்மேன்களை நோக்கி மோசமான வார்த்தைகளால் திட்டியதாக கூறப்படுகிறது.

Yusuf Pathan allegedly slapped jeering fan in Ranji trophy match; BCCI Seek Report

இதையடுத்து, ஓய்வு அறைக்கு சென்றபோது அந்த ரசிகரை அழைத்த யூசுப் பதான் அவரது கன்னத்தில் இருமுறை அடித்ததாக கூறப்படுகிறது. யூசுப்பின் சகோதரர் இர்பான் பதான் உள்ளிட்ட பிற வீரர்கள் இப்பிரச்சினையில் தலையிட்டு ரசிகரை பாதுகாப்பாக அழைத்துச் சென்றதாகவும் ஊடகங்களில் செய்தி வெளியாகியது.

இந்த செய்திகளின் அடிப்படையில் நடந்த சம்பவம் குறித்து இந்திய கிரிக்கெட் வாரியம், பரோடா கிரிக்கெட் வாரியத்திடம் அறிக்கை கேட்டுள்ளது.

பரோடா கிரிக்கெட் வாரிய செயலர் அன்சுமன் கெய்க்வார்ட் கூறுகையில், விளக்கம் கேட்டு பிசிசிஐ இமெயில் அனுப்பியதாகவும், அதற்கு பதில் அனுப்பியதாகவும் தெரிவித்தார்.

Story first published: Thursday, December 25, 2014, 14:01 [IST]
Other articles published on Dec 25, 2014
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+