தொடர்நாயகன் விருது வென்ற யுவராஜ்சிங்குக்கு கார் பரிசு: ஆடி அறிவிப்பு
டெல்லி: உலக்கோப்பை கிரிக்கெட் போட்டியில் தொடர்நாயகன் விருது பெற்ற யுவராஜ் சிங்குக்கு கார் பரிசாக வழங்கப்போவதாக ஆடி கார் நிறுவனம் அறிவித்துள்ளது.
உலகக்கோப்பையை வென்று வரலாற்று சிறப்புமிக்க சாதனை படைத்துள்ள இந்திய அணிக்கு பல்வேறு தரப்பிலிருந்தும், பரிசுகள் குவிந்து வருகின்றன. உலகக்கோப்பை கிரிக்கெட்டில் சிறப்பாக விளையாடி இந்திய அணியில் ஆல்ரவுண்டராக ஜொலித்த யுவராஜ்சிங்குக்கும் பல நிறுவனங்கள் போட்டிபோட்டுக்கொண்டு பரிசுகளை அறிவித்து வருகின்றன.
உலகக்கோப்பை போட்டியில் நான்கு ஆட்டநாயகன் விருதுகளை வென்று, தொடர்நாயகன் விருதை கைப்பற்றிய யுவராஜ்சிங்குக்கு கார் பரிசாக வழங்கப்படும் என்று ஆடி இந்தியா நிறுவனம் அறிவித்துள்ளது.
இதுகுறித்து ஆடி இந்தியா விற்பனைப் பிரிவு தலைவர் அனில் ரெட்டி கூறியதாவது:
"இந்திய கிரிக்கெட் ரசிகர்களின் கொண்டாட்டங்களில் ஆடி இந்தியா எப்போதும் பங்கெடுத்து வருகிறது. கடந்த 1985ம் ஆண்டு ஆஸ்திரேலியாவில் நடந்த சாம்பியன்ஸ் ஆப் சாம்பியன்ஸ் கிரிக்கெட் போட்டியில் சிறப்பாக விளையாடிய ரவிசாஸ்திரிக்கு ஆடி 100 கார் பரிசாக வழங்கப்பட்டது.
இதைத்தொடர்ந்து, தற்போது நடந்து முடிந்துள்ள உலகக்கோப்பை போட்டியில் சிறப்பாக விளையாடி தொடர்நாயகன் விருது வென்ற யுவராஜ்சிங்குக்கு ஆடி கார் பரிசாக வழங்க உள்ளோம். முன்னாள் கிரிக்கெட் வீரர் ரவி சாஸ்திரி, ஆடி காரை யுவராஜ் சிங்கிடம் வழங்குவார். கார் பரிசு வழங்கும் தேதி குறித்த விபரங்கள் விரைவில் அறிவிக்கப்படும்," என்று கூறினார்.
உலக கோப்பை கிரிக்கெட்:சிறப்பு பக்கம்
உலக கோப்பை கிரிக்கெட்:சிறப்பு படங்கள்
Story first published: Wednesday, December 7, 2011, 18:45 [IST]
Other articles published on Dec 7, 2011


Click it and Unblock the Notifications
