கைவிட்டார் யுவராஜ்.. 21 பந்துகளை சாப்பிட்டு 11 ரன்கள் மட்டுமே!
மிர்பூர்: ஐந்து போட்டிகளில் ஆடி ஒரே ஒரு போட்டியில் மட்டும் அரை சதம் எடுத்து விட்டு மற்ற போட்டிகளில் சொதப்பலாகி ஆடி தனது பேட்டிங் பார்ம் அரை வேக்காட்டுத்தனமானது என்பதை நிரூபித்து விட்டார் யுவராஜ் சிங்.
ஆஸ்திரேலியாவுடன் நடந்த போட்டியில் மட்டும் சிறப்பாக ஆடினார் யுவராஜ். ஆனால் அடுத்து வந்த தென் ஆப்பிரிக்காவுடனான போட்டியிலும் சரி, அதற்கு முந்தைய போட்டிகளிலும் சரி அவர் ஜொலிக்கவில்லை.

இன்று நடந்த இறுதிப் போட்டியிலும் யுவராஜ் சிங் செமத்தியாக தடுமாறினார். பந்தை எதிர்கொள்வதிலிருந்து அடிப்பது வரை எல்லாவற்றிலுமே அவர் பெரிதாக தடுமாறினார்.
21 பந்துகளைச் சந்தித்த அவர் வெறும் 11 ரன்களை மட்டுமே எடுத்து அவுட்டானார். டெஸ்ட் போட்டியில் ஆடுவதைப் போல அவர் ஆடியதும், தடுமாறியதும் ரசிகர்களை ஏமாற்றி விட்டது.
Story first published: Sunday, April 6, 2014, 22:28 [IST]
Other articles published on Apr 6, 2014


Click it and Unblock the Notifications