
7 ஒரு நாள் - ஒரு டுவென்டி 20
இந்தியா, ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையே ஒரு டுவென்டி 20 போட்டி மற்றும் 7 ஒரு நாள் போட்டிகள் நடைபெறவுள்ளன.

யுவராஜ் மட்டுமே மாற்றம்
இந்தத் தொடருக்கான இந்திய அணி இன்று அறிவிக்கப்பட்டது. இதில் யுவராஜ் சிங் சேர்க்கப்பட்டது மட்டுமே பெரிய மாற்றமாகும்.

திணேஷ் கார்த்திக் நீக்கம்
இந்திய அணியிலிருந்து திணேஷ் கார்த்திக் நீக்கப்பட்டுள்ளார். சமீப காலமாக இந்திய அணியில் நன்றாகவே விளையாடி வந்தார் திணேஷ் கார்த்திக்.

கடைசியாக ஜனவரி 27ம் தேதி
கடைசியாக ஜனவரி 27ம் தேதி இந்தியாவுக்காக ஒரு நாள் போட்டியி்ல விளையாடியிருந்தார் யுவராஜ் சிங்.

பார்ம் இல்லாமல் போனார்
ஆனால் அதன் பிறகு பார்ம் இல்லாமல் போனதாலும், பிட்னஸ் இல்லாததாலும் அணியில் இடம் பெற முடியாமல் போனது யுவராஜ் சிங்குக்கு.

பிரான்ஸுக்குப் போய் பிட்னஸ் கூட்டினார்
இதையடுத்து பிரான்ஸுக்குப் போன யுவராஜ் சிங், அங்கு பிட்னஸ் பயிற்சிகளை தீவிரமாக மேற்கொண்டார். அதன் பின்னர் மேற்கு இந்தியத் தீவுகள் ஏ அணிக்கு எதிரான போட்டியில் பங்கேற்று நல்ல ரன்களை எடுத்தார். இதனால் மீண்டும் அணியில் அவருக்கு இடம் கிடைத்துள்ளது.

இதுதான் அணி
டோணி, ஷிகர் தவன், ரோஹித் சர்மா, விராத் கோஹ்லி, யுவராஜ் சிங், சுரேஷ் ரெய்னா, ரவீந்திர ஜடேஜா, ஆர்.அஸ்வின், புவனேஸ்வர் குமார், இஷாந்த் சர்மா, வினய் குமார், அமித் மிஸ்ரா, அம்பட்டி ராயுடு, முகம்மது சமி, ஜெயதேவ் உனக்தத்.


Click it and Unblock the Notifications










