For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

யுவராஜ் சிங்கின் 24 வருட ரெக்கார்டை உடைத்த 18 வயது உள்ளூர் வீரர்.. கூச் பெஹார் கோப்பையில் அதிரடி

மும்பை : 24 ஆண்டு யுவராஜ் சிங்கின் உள்ளூர் போட்டி சாதனை ஒன்றை உடைத்து எறிந்து இருக்கிறார் 18 வயதே ஆன பிரகார் சதுர்வேதி. கூச் பெஹார் கோப்பை எனும் பிசிசிஐ நடத்தும் உள்ளூர் கிரிக்கெட் தொடரில் 1999இல் யுவராஜ் சிங் பேட்டிங்கில் பிரம்மாண்ட சாதனை ஒன்றை படைத்தார்.

அப்போது பீகார் - பஞ்சாப் அணிகள் இடையே அண்டர் 19 கிரிக்கெட் தொடரான கூச் பெஹார் தொடரின் இறுதிப் போட்டி நடைபெற்றது. அப்போது பஞ்சாப் அணி சார்பாக ஆடிய யுவராஜ் சிங் 358 ரன்கள் குவித்தார். கூச் பெஹார் இறுதிப் போட்டியில் அடிக்கப்பட்ட மிகப் பெரிய ஸ்கோர் அதுதான்.

Yuvraj Singh 24 year old record broken by Prakhar Chaturvedi in Cooch Behar trophy

24 ஆண்டுகளாக முறியடிக்கப்படாமல் இருந்த அந்த சாதனையை 18 வயது கர்நாடகா அணி வீரர் பிரகார் சதுர்வேதி முறியடித்தார். அவர் கர்நாடகா - மும்பை அணிகளுக்கு இடையேயான கூச் பெஹார் இறுதிப் போட்டியில் 638 பந்துகளில் 404 ரன்கள் குவித்தார். அதன் மூலம் யுவராஜ் சிங்கின் 358 ரன்கள் சாதனையை முறியடித்தார்.

தனது நீண்ட இன்னிங்க்ஸில் 46 ஃபோர், 3 சிக்ஸ் அடித்து இருந்தார். அவரது ரன் குவிப்பால் கர்நாடகா அணி 890 ரன்கள் குவித்தது. முதல் இன்னிங்ஸில் மும்பை அணி 380 ரன்கள் மட்டுமே குவித்தது. 510 ரன்கள் முன்னிலை பெற்ற கர்நாடகா. பின்னர் போட்டி டிராவில் முடிந்ததை அடுத்து முன்னிலை பெற்ற அடிப்படையில் கர்நாடகா அணி இந்த இறுதிப் போட்டியில் வெற்றி பெற்றது.

கூச் பெஹார் இறுதிப் போட்டியில் 400 ரன்களை அடித்த முதல் வீரர் என்ற சாதனையையும் செய்தார் பிரகார் சதுர்வேதி. இவரது தந்தை சஞ்சய் பெங்களூருவில் சொந்தமாக தகவல் தொழில்நுட்ப நிறுவனம் ஒன்றை நடத்தி வருகிறார். அவரது தாய் டிஆர்டிஓ (DRDO) எனும் இராணுவத்துக்கு தொழில்நுட்பங்களை தயாரித்து வழங்கும் மத்திய அரசு நிறுவனத்தில் பணிபுரிகிறார்.

கடந்த இரண்டு ஆண்டுகளாக கிரிக்கெட்டில் ஆர்வம் செலுத்தி வந்த பிரகார் சதுர்வேதி கர்நாடக மாநில அண்டர் 19 அணியில் இடம் பெறவே பெரும் போராட்டத்தை சந்தித்து இருக்கிறார். தற்போது தன்னை நிரூபித்து இருக்கிறார்

Story first published: Tuesday, January 16, 2024, 10:45 [IST]
Other articles published on Jan 16, 2024
English summary
Yuvraj Singh 24 year old record broken by Prakhar Chaturvedi in Cooch Behar trophy
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+