Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

கேன்சரை தெறிக்க விட்ட யுவராஜ் சிங்கிற்கு இன்று 37வது பிறந்த நாள்!! குவிந்த வாழ்த்துக்கள்

கேன்சரை தெறிக்க விட்ட யுவராஜ் சிங்கிற்கு இன்று 37வது பிறந்த நாள்!! குவிந்த வாழ்த்துக்கள்

மும்பை : இந்திய கிரிக்கெட் வீரர் யுவராஜ் சிங் இன்று (டிசம்பர் 12) தன் 37வது பிறந்த நாளை கொண்டாடுகிறார்.

இந்திய அணியில் சிறந்த ஆல்-ரவுண்டர் பேட்ஸ்மேனாக வலம் வந்தவர் யுவராஜ் சிங். இந்திய அணியில் டி20 யுகத்துக்கு முன்னரே அதிரடி பேட்ஸ்மேனாக வலம் வந்தவர் யுவராஜ் சிங்.

இவரது பிறந்த நாளில் கிரிக்கெட் பிரபலங்கள் பலரும் வாழ்த்து கூறி உள்ளனர்.

உலகக்கோப்பை நாயகன் யுவராஜ்

உலகக்கோப்பை நாயகன் யுவராஜ்

உலகக்கோப்பை நாயகன் யுவராஜ் சிங் இல்லாவிட்டால் இந்தியா 2011 உலகக்கோப்பையை வென்று இருக்குமா என்பது சந்தேகமே!! அந்த தொடரில் தொடர் நாயகன் விருதையும் வென்றார் யுவராஜ். அதன் பின் புற்று நோயால் பாதிக்கப்பட்டு சில காலம் கிரிக்கெட்டில் இருந்து ஒதுங்கி இருந்தார்.

புற்றுநோய் போராட்டம்

புற்றுநோய் போராட்டம்

புற்று நோய்க்கு எதிராக போராடி அதில் இருந்து மீண்டார். அதன் பின் மீண்டும் இந்திய அணியில் இடம் பிடித்தார் யுவராஜ். அவரது போராட்டம் பலருக்கும் பெரிய உந்து கோலாக அமைந்தது. இன்று 37 வயதை எட்டியுள்ள யுவராஜ் சிங்கிற்கு பலரும் வாழ்த்து கூறியுள்ளனர்.

சாதனைகளை சொன்ன ஐசிசி

ஐசிசி தனது வாழ்த்துச் செய்தியில், "11,778 சர்வதேச ரன்கள், 148 விக்கெட்கள், 2011 உலகக்கோப்பையின் தொடர் நாயகன் விருது, அதிவேக டி20 அரைசதம்" என அவரது சாதனைகளை பட்டியல் இட்டுள்ளது.

தெறிக்க விட்டார் யுவராஜ்

சேவாக் தனது வாழ்த்தில், "பந்துவீச்சாளர்களை தெறிக்க விட்டார், வியாதிகளை தெறிக்க விட்டார், வாழ்க்கையில் பல பிரச்சனைகளை தெறிக்க விட்டார். எளிமை, அமைதி மற்றும் அன்பு எல்லாம் சேர்ந்த நல்ல காலம் வரட்டும்" எனக் கூறியுள்ளார்.

சச்சின் ஸ்பெஷல் வாழ்த்து

சச்சின் தனது வாழ்த்தில் யுவராஜ் வாழ்க்கையில், களத்திலும், களத்துக்கு வெளியேயும் பல இன்னல்களை தாண்டியவர் எனக் கூறி வாழ்த்தியுள்ளார். கைஃப், ரோஹித் சர்மா, கங்குலி உட்பட ஏராளமான கிரிக்கெட் பிரபலங்கள் யுவராஜ் சிங்கிற்கு வாழ்த்து கூறியுள்ளனர்.

Story first published: Wednesday, December 12, 2018, 15:36 [IST]
Other articles published on Dec 12, 2018
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+