Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

கங்குலி சட்டையை கழற்றி சுற்றிய போது யுவராஜ் சிங் செய்த காரியம்.. யாரும் பார்க்காததால் கிரேட் எஸ்கேப்

மும்பை : இந்திய அணியின் மறக்க முடியாத வெற்றிகளில் ஒன்று இங்கிலாந்து அணிக்கு எதிரான நாட்வெஸ்ட் ட்ராபி இறுதிப் போட்டி வெற்றி.

Recommended Video

BCCI Creates Team Mask Force To Spread Awareness

அந்தப் போட்டியில் இந்தியா தோல்வியின் விளிம்பில் இருந்து மீண்டு வந்து வெற்றி வாகை சூடியது. யுவராஜ் சிங் - முகமது கைப் என்ற இரண்டு இளம் வீரர்களால் கிடைத்த வெற்றி என்பது கூடுதல் சிறப்பாக இருந்தது.

அன்று இன்னொரு மறக்க முடியாத சம்பவமும் நடந்தது. அப்போதைய இந்திய அணி கேப்டன் சௌரவ் கங்குலி, வெற்றி மகிழ்ச்சியில் தன் சட்டையைக் கழற்றி சுழற்றி கொண்டாடினார்.

தப்பிய யுவராஜ்

தப்பிய யுவராஜ்

அந்த சம்பவம் பெரும் சர்ச்சையை கிளப்பியது. பலர் கங்குலி செய்தது தவறு என கூறினர். அதே நேரத்தில் யுவராஜ் சிங்கும் தன் சட்டையைக் கழற்றி சுழற்றினார். ஒரு வகையில் கங்குலியால் அன்று சர்ச்சையில் சிக்குவதில் இருந்து தப்பி இருக்கிறார் யுவராஜ் சிங்.

அந்த இறுதிப் போட்டி

அந்த இறுதிப் போட்டி

நாட்வெஸ்ட் தொடரில் இந்தியா - இங்கிலாந்து அணிகள் இறுதிப் போட்டியில் மோதின. அதற்கு முன்பு இந்திய அணி 9 அல்லது 10 இறுதிப் போட்டிகளில் தோல்வி அடைந்து இருந்தது. மேலும், வெளிநாட்டு மண்ணில் அதிக வெற்றிகள் பெறாத அணி என்ற பெயரையும் பெற்று இருந்தது.

பிளின்டாப் செயல்

பிளின்டாப் செயல்

அதற்கு முன் இங்கிலாந்து அணி இந்தியா வந்திருந்த போது ஒருநாள் தொடரில் கடைசிப் போட்டியில் வென்று இந்திய அணியில் தொடர் வெற்றியை தடுத்தது இங்கிலாந்து. அந்த கடைசிப் போட்டியில் வெற்றி பெற்ற போது இங்கிலாந்து வீரர் பிளின்டாப் தன் சட்டையை கழற்றி சுழற்றி வெற்றியைக் கொண்டாடி இருந்தார்.

இங்கிலாந்து ரன் குவிப்பு

இங்கிலாந்து ரன் குவிப்பு

அதனால், கேப்டன் கங்குலி இங்கிலாந்து அணியை அதன் சொந்த மண்ணில் வீழ்த்திக் காட்ட வேண்டும் என்ற வெறியில் இருந்தார். ஆனால், அந்த இறுதிப் போட்டியில் முதலில் ஆடிய இங்கிலாந்து அணி 325 ரன்கள் குவித்தது. அப்போதே இந்திய அணி மீது அனைவரும் நம்பிக்கையை இழந்தனர்.

கங்குலி நம்பிக்கை

கங்குலி நம்பிக்கை

சேஸிங்கில் துவக்க வீரர்கள் சேவாக் 45, கங்குலி 60 ரன்கள் எடுத்து நம்பிக்கை அளித்தாலும், அதன் பின் மிடில் ஆர்டரில் தினேஷ் மோங்கியா 9, டிராவிட் 5, சச்சின் 14 ரன்கள் மட்டுமே எடுத்தனர். இந்தியா 146 ரன்களுக்கு 5 விக்கெட்களை இழந்தது.

இங்கிலாந்து கொண்டாட்டம்

இங்கிலாந்து கொண்டாட்டம்

சச்சின் ஐந்தாவது விக்கெட்டாக வீழ்ந்த உடனேயே இங்கிலாந்து அணி போட்டியில் வெற்றி பெற்று விட்டதாக பெரும் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். அடுத்து ஆட வந்தது 20 வயதை தொடாத இளம் வீரர்கள். அவர்களை பேட்ஸ்மேன்கள் என்ற கணக்கிலேயே எடுத்துக் கொள்ளவில்லை இங்கிலாந்து வீரர்கள்.

யுவராஜ் - கைப் ஆட்டம்

யுவராஜ் - கைப் ஆட்டம்

ஆனால், அந்த இளம் வீரர்கள் யுவராஜ் சிங், முகமது கைப் தான் அன்று இந்திய அணிக்கு வெற்றியைப் பெற்றுத் தந்தனர். இருவரும் சேர்ந்து ஆறாவது விக்கெட்டுக்கு 121 ரன்கள் கூட்டணி அமைத்தனர். யுவராஜ் சிங் 63 பந்துகளில் 69 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.

இந்தியா வெற்றி

இந்தியா வெற்றி

அடுத்து முகமது கைப் கடைசி வரை களத்தில் நின்று அணியை வெற்றி பெறச் செய்தார். இந்திய அணி 2 விக்கெட்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்து அணியை அதன் சொந்த மண்ணில் வீழ்த்தி இருந்தது. அது அப்போது பெரும் அதிர்வலைகளை உண்டாக்கியது.

யுவராஜ் சிங் செய்த காரியம்

யுவராஜ் சிங் செய்த காரியம்

வெற்றி பெற்ற உடன் போட்டி நடந்த லார்ட்ஸ் மைதானத்தின் பால்கனியில் அமர்ந்து இருந்த கேப்டன் கங்குலி தன் சட்டையைக் கழற்றி சுழற்றினார். அப்போது மற்ற வீரர்கள் யாரும் அப்படி செய்யவில்லை. காரணம், அதன் பின்விளைவுகள் பற்றி எல்லோருக்கும் தெரியும். ஆனால், இளம் வீரர் யுவராஜ் சிங் தன் சட்டையைக் கழற்றி சுழற்றி உள்ளார். ஆனால், இங்கிலாந்தில் நிலவிய குளிர் காரணமாக அவர் உள்ளே வேறு ஒரு டி-ஷர்ட் அணிந்து இருந்தார்.

தப்பினார் யுவராஜ்

தப்பினார் யுவராஜ்

அத்னால், யுவராஜ் சிங் சட்டையைக் கழற்றி கொண்டாடியதாக யாரும் கருதவில்லை. மேலும், அனைவரது கவனமும் கேப்டன் கங்குலி பக்கம் திரும்பியது. அவர் அப்படி செய்தது. ஆச்சரியம் கலந்த அதிர்ச்சியாக அமைந்தது. இந்திய ரசிகர்கள் அதை கொண்டாடினாலும், கிரிக்கெட் விமர்சகர்கள், முன்னாள் வீரர்கள் கங்குலியை வறுத்து எடுத்தனர். தானும் வெற்றியைக் கொண்டாட சட்டையைக் கழற்றி இருந்தாலும், அந்த விமர்சனங்களில் இருந்து யுவராஜ் சிங் தப்பினார்.

Story first published: Wednesday, April 22, 2020, 16:09 [IST]
Other articles published on Apr 22, 2020
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+