Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

தேவையே இல்லை.. நான் என்ன சொன்னேன்.. டிவிட்டரில் சண்டை போட்ட இந்திய அணியின் முன்னாள் வீரர்கள்!

மும்பை: இந்திய அணியில் நம்பர் 4ல் விளையாட கூடிய வீரர் இவர்தான் என்று முன்னாள் கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங் இளம் வீரர் ஒருவரை கை காட்டியுள்ளார். இதனால் இவருக்கும் முன்னணி வீரர் ஒருவருக்கும் டிவிட்டில் சண்டை நடந்துள்ளது.

சமீபகாலமாக இந்திய அணி "நம்பர் 4 " இடத்தை நிரப்ப பல்வேறு சோதனை முயற்சிகளில் ஈடுபட்டு வருகிறது. இருந்தாலும், இன்று வரை அதற்கு சரியான முடிவு எட்டப்படவில்லை.

இதற்கிடையில், இந்தியாவுக்கு பொருத்தமான நம்பர் 4 பேட்ஸ்மேன் இவர் தான் என்று ஹர்பஜன் சிங் ஒருவரை பரிந்துரைத்தார். இதற்கு யுவராஜ் சிங் ட்விட்டரில் தன்னுடைய பாணியில் பதிலடி கொடுத்துள்ளார்.

நம்பர் 4 பேட்ஸ்மேன்

நம்பர் 4 பேட்ஸ்மேன்

இந்திய கிரிக்கெட் அணி வெகு காலமாக நிரந்தரமான நம்பர் 4 பேட்ஸ்மேனை தேடிக்கொண்டுதான் வருகிறது. இதற்காக பிசிசிஐ பல்வேறு வீரர்களை நம்பர் 4 இடத்தில் வாய்ப்பு கொடுத்து பரிசோதித்து வருகிறது. ஆனால் என்ன விதியோ தெரியவில்லை, இன்று வரை இதற்கு ஒரு நிரந்தர முடிவு எட்டப்படவில்லை.

என்ன சோதனை

என்ன சோதனை

இதற்கிடையில் இந்திய அணியின் முன்னணி வீரர்கள் நம்பர் 4 இடத்தில் விளையாட பல்வேறு யோசனைகளையும், வீரர்களையும் சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு பரிந்துரைத்து வருகின்றனர். இதனால் சமீப காலமாக இந்திய அணியின் சூழல் பந்து வீச்சாளர் ஹர்பஜன் சிங் தன் பங்கிற்கு நம்பர் 4 இடத்தை நிரப்ப பல்வேறு வீரர்களை பரிந்துரைத்து வருகிறார்.

ஹர்பஜன் சிங்

ஹர்பஜன் சிங்

இதற்கிடையில் தன்னுடைய சமீபத்திய ட்விட்டர் பதிவில், இந்தியாவுக்கு பொருத்தமான நம்பர் 4 பேட்ஸ்மேனை சொல்ல, அதை பார்த்த யுவராஜ் சிங் மீண்டும் தன் பாணியில் பதிலடி கொடுத்துள்ளார். அவர் தன்னுடைய ட்விட்டர் பதிவில் ஹர்பஜன் சிங் ட்வீட் ஒன்றை பதிவிட்டார். அதில்,"உள்ளூர் போட்டிகளில் ஏராளமான ரன்கள் எடுத்த சூர்யகுமார் யாதவ் ஏன் இந்திய அணியில் தேர்வு செய்யப்படவில்லை" என்று கேள்வி எழுப்பினார்.

என்ன ட்வீட்

மேலும் அவர், "சூர்யகுமார் யாதவ் நீங்கள் கடினமாக உழைக்கிறீர்கள். உங்கள் நேரம் கூடிய விரைவில் வரும்" என்று பதிவிட்டுள்ளார். இதற்கு யுவராஜ் சிங் அளித்த பதில்தான் தற்போது பெரிய வைரலாகி உள்ளது.

யுவராஜ் பதில்

ஹர்பஜன் சிங் இந்த ட்விட்டர் பதிவிற்கு பதிலளித்த யுவராஜ் சிங், "நான் என்ன சொன்னேன்?? " டாப் ஆர்டர் வலுவாக உள்ளதால், இந்திய அணிக்கு நம்பர் 4 பேட்ஸ்மேன் தேவையே இல்லை " என்று தன் பாணியில் பதிலளித்துள்ளார்.

இது முதல் முறை அல்ல

இது முதல் முறை அல்ல

சமூக ஊடகங்களில் ஹர்பஜன் மற்றும் யுவராஜ் இதுபோன்று விவாதிப்பது இது முதல் முறை அல்ல. இந்த மாத தொடக்கத்தில், ஒரு நாள் சர்வதேச போட்டிகளில் 4 வது இடத்தில் சஞ்சு சாம்சனுக்கு வாய்ப்பு வழங்க வேண்டும் என்ற ஹர்பஜன் சிங்கின் பரிந்துரைக்கு பதிலளிக்கும் போது யுவராஜ் சிங் இதே வார்த்தைகளைப் பயன்படுத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.

பெரும் சலசலப்பு

பெரும் சலசலப்பு

மேலும் கடந்த வாரம், யுவராஜ் சிங் ஒரு நேர்காணலில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தினார். அதில் அவர் யோ-யோ டெஸ்டை முடித்த பிறகும் டீமில் இருந்து தன்னை விலக்கியதற்கான இந்தியா அணியின் தேர்வு குழு முடிவை பற்றி கேள்வி எழுப்பினார். மேலும் தனக்கு இழைக்கப்பட்ட அநீதி முன்னாள் வீரர்கள் வீரேந்தர் சேவாக் மற்றும் ஜாகீர் கான் ஆகியோருக்கும் இழைக்கப்பட்டது என்று அதே பேட்டியில் கூறி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Story first published: Tuesday, October 1, 2019, 12:05 [IST]
Other articles published on Oct 1, 2019
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+