Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

கோஹ்லி, அனுஷ்காவை தனியா விடுங்க பாஸ்: ரசிகர்களுக்கு யுவராஜ் சிங் கோரிக்கை

மும்பை: கிரிக்கெட் வீரர் விராட் கோஹ்லி மற்றும் அனுஷ்கா சர்மாவின் தனிப்பட்ட வாழ்க்கையில் தலையிடாமல் அவர்களை தனியே விடுமாறு ரசிகர்களுக்கு சக வீரர் யுவராஜ் சிங் கோரிக்கை விடுத்துள்ளார்.

உலகக் கோப்பை தொடரில் இந்தியா, ஆஸ்திரேலியா இடையேயான அரையிறுதிப் போட்டியை காண துணை கேப்டன் விராட் கோஹ்லியின் காதலியான பாலிவுட் நடிகை அனுஷ்கா சர்மா சிட்னி சென்றார். அவர் சிட்னி கிளம்பிய செய்தியை பார்த்த ரசிகர்கள் என்ன நடக்கப் போகிறதோ என்று சமூக வலைதளங்களில் தெரிவித்தனர்.

இந்நிலையில் அரையிறுதிப் போட்டியில் கோஹ்லி ஒரு ரன் எடுத்து அவுட்டானார். உலகக் கோப்பை தொடரில் தொடர்ந்து வெற்றி கண்டு வந்த இந்திய அணி அரையிறுதிப் போட்டியில் தோல்வி அடைந்தது.

அனுஷ்கா

அனுஷ்கா

இந்திய அணி தோல்வி அடைந்ததற்கு அனுஷ்கா சர்மா தான் காரணம் என்று கூறி ரசிகர்கள் கொதிப்படைந்தனர். இதையடுத்து ரசிகர்கள் அனுஷ்கா சர்மாவை சமூக வலைதளங்களில் திட்டித் தீர்த்தனர்.

யுவராஜ்

யுவராஜ்

கோஹ்லி, அனுஷ்காவுக்கு ஆதரவு தெரிவித்து கிரிக்கெட் வீரர் யுவராஜ் சிங் ட்வீட் செய்துள்ளார்.

ரசிகர்கள்

எங்கள் வெற்றி மற்றும் தோல்விகளில் எங்களை ஆதரிக்கும் இந்திய ரசிகர்களே! நாம் கோஹ்லி மற்றும் அனுஷ்கா சர்மாவின் தனிப்பட்ட வாழ்க்கைக்கு மதிப்பளிப்போம் என்று யுவராஜ் தனது ட்வீட்டில் தெரிவித்துள்ளார்.

சதம்

ஆஸ்திரேலிய சுற்றுப்பயணத்தின்போது 5 சதங்கள் அடித்த வீரருக்கு ரசிகர்கள் ஆதரவுடன், மரியாதையும் அளிக்க வேண்டும் என்று ட்வீட் செய்துள்ளார் யுவி.

கோஹ்லி

வரும் நாட்களில் நிச்சயம் அவர் நம் நாட்டுக்காக மீண்டும் மீண்டும் சிறப்பாக விளையாடுவார் என்று யுவராஜ் ட்விட்டர் மூலம் நண்பன் கோஹ்லிக்கு ஆதரவாக பேசியுள்ளார்.

Story first published: Tuesday, March 31, 2015, 10:10 [IST]
Other articles published on Mar 31, 2015
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+