Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

ஸ்ரேயாஸுக்கு பதில் இந்த வீரரை ஆட வைங்க ஏன்னா.. சரியான வீரரை அடையாளம் காட்டிய யுவராஜ் சிங்!

மும்பை : இந்திய அணியின் நீண்ட கால பிரச்சனையான நான்காம் வரிசையில் ஆடும் பேட்ஸ்மேன் யார்? என்ற கேள்விக்கு யுவராஜ் சிங் சிறந்த தீர்வை அளித்துள்ளார்.

தற்போது இந்திய அணியில் ஸ்ரேயாஸ் ஐயரை நான்காம் வரிசையில் ஆட வைக்க முயற்சித்து வருகிறது. ஸ்ரேயாஸ் சில போட்டிகளில் நான்காம் வரிசையில் நன்றாக ஆடி இருந்த நிலையில் காயம் காரணமாக விலகினார்.

Yuvraj Singh asks Indian team management to support KL Rahul at no.4 batting position

அதனால், மீண்டும் நான்காம் வரிசை பேட்ஸ்மேன் யார் என்ற கேள்வி எழுந்தது அப்போது கே எல் ராகுல், இஷான் கிஷன், சூர்யகுமார் யாதவ் உள்ளிட்ட வீரர்கள் நான்காம் வரிசையில் ஆடினார்கள்.

அதில் கே எல் ராகுல் நம்பிக்கை அளிக்கும் வகையில் ஆடி இருந்தார். ஆனால், தற்போது உலகக்கோப்பை தொடருக்கு முன் ஸ்ரேயாஸ் ஐயர் மீண்டும் அணிக்கு திரும்பி இருக்கிறார். அதனால், அவரையே மீண்டும் அந்த இடத்தில் ஆட வைக்க முடிவு செய்துள்ளது இந்திய அணி நிர்வாகம்.

ஆனால், கே எல் ராகுலை தான் அந்த இடத்தில் ஆட வைக்க வேண்டும். அவர் அந்த இடத்தில ஆடி சமீபத்தில் கூட ரன் குவித்து இருக்கிறார். ஏற்கனவே பல வீரர்களை நான்காம் வரிசையில் தொடர்ந்து ஆட வைக்காமல் இந்திய அணி நிர்வாகம் தவறு செய்தது. அதை மீண்டும் செய்யாமல் ராகுலுக்கு தொடர்ந்து போட்டிகளில் ஆடும் வாய்ப்பை கொடுக்க வேண்டும் எனவும் யுவராஜ் சிங் கூறி இருக்கிறார்.

அது பற்றி பேசிய யுவராஜ் சிங், "இந்தியா கே எல் ராகுலைத் தான் நான்காம் இடத்தில் ஆட வேண்டும் என விரும்புகிறது. அவருக்கு அந்த இடத்தில் பேட்டிங் செய்ய 15 - 20 போட்டிகள் கொடுக்க வேண்டும். ஆசிய கோப்பையில், காயத்தில் இருந்து மீண்டு வந்த அவர் அந்த வரிசையில் பேட்டிங் செய்து 100 ரன்களை குவித்தார். ஸ்பின் ஆகும் பிட்ச்சில் இலங்கைக்கு எதிராக அணிக்கு உதவி 39 ரன்களை எடுத்தார். எனவே, அவரை நான்காம் வரிசையில் தொடர்ந்து ஆட வைக்க வேண்டும்" என்றார்.

Story first published: Sunday, October 1, 2023, 18:38 [IST]
Other articles published on Oct 1, 2023
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+