Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

யுவராஜ் சிங்கின் பயோபிக்-கில் ஜெயம் ரவியா? தோனி படத்தில் யுவராஜாக நடித்த நடிகரா? பறக்கும் கணிப்புகள்

மும்பை: இந்திய கிரிக்கெட் அணியின் ஜாம்பவான் யுவராஜ் சிங்கின் வாழ்க்கை வரலாறை ஹிந்தியில் திரைப்படமாக எடுக்க உள்ளனர். அதற்கான அறிவிப்பை பிரபல தயாரிப்பாளர்கள் பூஷன் குமார் மற்றும் ரவி பாக்சந்த்கா அறிவித்தனர். இதை அடுத்து அந்த திரைப்படத்தில் யுவராஜ் சிங்காக நடிக்கப் போவது யார்? என்று விவாதம் கிளம்பியுள்ளது.

முன்பு எம்எஸ் தோனியின் வாழ்க்கை வரலாறு திரைப்படம் வெளியானபோது, தோனியாக நடித்த சுஷாந்த் சிங் ராஜ்புட்-இன் நடிப்பு அனைவரையும் கவர்ந்தது. படத்தை பார்த்த அனைவரும் சுஷாந்த் சிங்கையே தோனியாக பார்த்தனர். அப்படி ஒரு நடிகர் தான் யுவராஜ் சிங்காக நடிக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

Yuvraj Singh india

யுவராஜ் சிங்காக நடிக்க அமீர்கான் முதல் ஜெயம் ரவி வரை பலரது பெயரையும் ரசிகர்கள் முன்மொழிந்து வருகின்றனர். எம் எஸ் தோனி திரைப்படத்தில் யுவராஜ் சிங்காக ஒரு நடிகர் நடித்திருப்பார். அவரது பெயர் ஹெர்ரி டாங்கிரி, அவர் அந்தப் படத்தில் யுவராஜ் சிங்காக தத்ரூபமாக நடித்து இருப்பார். அவரையே யுவராஜ் சிங்கின் வாழ்க்கை வரலாறு திரைப்படத்திலும் நடிக்க வைக்க வேண்டும் எனவும் பல ரசிகர்கள் குறிப்பிட்டு வருகின்றனர்.

யுவராஜ் சிங்கின் வாழ்க்கை இந்திய கிரிக்கெட் ரசிகர்களுக்கு மிகவும் நெருக்கமானது. அதிக ஏற்ற இறக்கங்களை கொண்டது அவரது கிரிக்கெட் வாழ்வு. அதில் நடிக்கும் நடிகர் நிச்சயமாக கைதேர்ந்தவராக இருந்தால் மட்டுமே யுவராஜ் சிங்கின் முக பாவனைகள், உடல் மொழிகளை சிறப்பாக வெளிப்படுத்த முடியும். அதனால், யுவராஜ் சிங்காக நடிக்கும் நடிகருக்கு அவரின் முக சாயல் இருந்தால் இன்னும் சிறப்பாக இருக்கும் என்பதால் ஹெர்ரி டாங்கிரியை நடிக்க வைக்க வேண்டும் என சிலர் கூறி வருகின்றனர்.

மேலும், சகிப் சலீம் என்ற பாலிவுட் நடிகரும், யுவராஜ் சிங் முக சாயலுடன் ஒத்துப்போவார் என சிலர் குறிப்பிட்டுள்ளனர். அதே சமயம், தென்னிந்திய நடிகர்களில் ஜெயம் ரவி, யுவராஜ் சிங்காக நடிக்க சரியான தேர்வாக இருப்பார் என சிலர் சுட்டி காட்டியுள்ளனர். சமீபத்தில் அனிமல் படத்தில் நடித்து புகழ்பெற்ற ரன்பீர் கபூரும் யுவராஜ் சிங் படத்தில் நடிக்க சரியான தேர்வாக இருப்பார் என சிலர் கூறி உள்ளனர்.

சிறந்த நடிகர்கள் மட்டுமே யுவராஜ் சிங்கின் வாழ்க்கை வரலாறில் யுவராஜாக சரியாக நடிக்க முடியும் என கூறும் சிலர், அமீர் கான் அல்லது ரன்வீர் கபூர் போன்ற சிறந்த நடிகர்கள் அவரது உடல் மொழியை சரியாக வெளிப்படுத்துவார்கள் என கூறியுள்ளனர்.

Story first published: Tuesday, August 20, 2024, 11:27 [IST]
Other articles published on Aug 20, 2024
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+