Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

பிறந்தநாள் பார்ட்டியில் நெஹ்ரா செய்த காரியம்! பொண்டாட்டி கிட்ட போட்டுக் கொடுத்த யுவராஜ்!

மும்பை : யுவராஜ் சிங் தன் மனைவி ஹேசல் கீச்சின் பிறந்த நாளை கடந்த வியாழன் அன்று கொண்டாடினார்.

அந்த விருந்தில் பல கிரிக்கெட் பிரபலங்களும் கலந்து கொண்டனர். அந்த விருந்தில் எடுத்த புகைப்படங்களை யுவராஜ் தன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

“எல்லை”யில்லாத சந்தோஷம்

“எல்லை”யில்லாத சந்தோஷம்

இந்த விருந்தில் யுவராஜ் சிங்குடன் இந்திய அணியில் ஆடிய ஹர்பஜன் சிங், ஜாகிர் கான், அஜீத் அகர்கர் உள்ளிட்டோர் பங்கு பெற்றனர். வழக்கம் போல "எல்லை"யில்லாத சந்தோஷத்துடன் ஜாலியாக நடந்துள்ளது இந்த பார்ட்டி.

மனைவியிடம் மாட்டி விட்டார்

மனைவியிடம் மாட்டி விட்டார்

இந்த விருந்து குறித்த புகைப்பட தொகுப்பை பகிர்ந்த யுவராஜ் சிங், கூடவே ஆஷிஷ் நெஹ்ராவை அவர் மனைவியிடம் மாட்டி விட்டார். நீங்கள் நினைப்பது இல்லை. வேறு எந்த விஷயத்திற்காக தெரியுமா?

நெஹ்ரா செய்த கூத்து

நெஹ்ரா செய்த கூத்து

பார்ட்டியில் ஆஷிஷ் நெஹ்ரா கேக்கை எடுத்து யுவராஜ் மனைவியின் முகத்தில் அடித்து அதகளம் செய்துள்ளார். அதை தான் யுவராஜ் சிங் புகாராக கூறியுள்ளார்.

அடுத்து ஐபிஎல்

அடுத்து ஐபிஎல்

யுவராஜ் சிங் அடுத்து ஐபிஎல் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக ஆடவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த சில வருடமாக பார்ம் இன்றி தவித்து வரும் யுவராஜ் சிங், ஐபிஎல் தொடரிலாவது ரன் குவிப்பாரா? என அவரது ரசிகர்கள் என்கி வருகிறார்கள்.

Story first published: Saturday, March 2, 2019, 20:32 [IST]
Other articles published on Mar 2, 2019
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+