அப்படியே தேதியையும் சொல்லிருங்கப்பா.. கல்யாண செய்தி குறித்து மீடியாக்களை வாரிய யுவராஜ்
பெங்களூரு: தனது திருமணம் தொடர்பாக ஊடகங்களில் வந்த செய்திகள் குறித்து கருத்து தெரிவித்துள்ள யுவராஜ் சிங், அப்படியே மீடியாக்கள் கல்யாணம் எப்போது நடக்கும் என்பதையும் சொல்லி விட்டால் நான் அதற்குள் தயாராகி விட வசதியாக இருக்கும் என்று கலாய்த்துள்ளார்.
தனது திருமணம் தொடர்பாக வந்த செய்திகள் வதந்தி என்பதையே இவ்வாறு மறைமுகமாக தெரிவித்துள்ளார் யுவராஜ் சிங்.
ஹர்பஜன் சிங் திருமணம் சமீபத்தில் முடிவடைந்த நிலையில் அடுத்து யுவராஜ் சிங்கின் பெயர் அடிபட ஆரம்பித்துள்ளது. விரைவில் திருமணம் செய்து கொள்ளுமாறு யுவராஜுக்கு ஹர்பஜனும் அறிவுரை கூறியுள்ளார்.

கீச் கீச் காதல்
யுவராஜ் சிங்குக்கும், இங்கிலாந்தைச் சேர்ந்த மாடல் அழகியும், நடிகையுமா ஹேஸல் கீச்சுக்கும் இடையே காதல் இருப்பதாக செய்திகள் வெளிவந்த வண்ணம் உள்ளன.

அடுத்து வருடம்
இவர்கள் இருவரும் அடுத்த வருடத் தொடக்கத்தில் திருமணம் செய்யவுள்ளதாகவும் மீடியாக்களில் செய்திகள் வெளியாகின. மேலும் இந்த மாதத்தில் நிச்சயதார்த்தம் நடைபெறவுள்ளதாகவும் செய்திகள் கூறின.

பாடிகார்ட் - பில்லா
ஹேஸல் கீச், பாடிகார்ட், பில்லா படங்களில் நடித்துள்ளார். இவருக்கும், யுவராஜுக்கும் இடையிலான காதல் குறித்து பரபரப்பு ஏற்பட்ட நிலையில், அதை தற்போது மறுத்துள்ளார் யுவராஜ் சிங்.
மீடியா.. ஓடியா.. !
இதுகுறித்து டிவிட்டரில் அவர் போட்டுள்ள டிவிட்டில், ஸோ, மீடியா நண்பர்களே எனது திருமண இடத்தையும், மாதத்தையும் முடிவு செய்து விட்டனர். அப்படியே தேதியையும் சொல்லி விட்டால் சரியான நேரத்தில் நானும் தயாராகி விட வசதியாக இருக்கும் என்று கலாய்த்துள்ளார் யுவராஜ் சிங்.
சரித்தான்!


Click it and Unblock the Notifications